உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அயோத்தி வருகையை ஒத்தி வையுங்கள்: ராமஜென்ம பூமி அறக்கட்டளை பக்தர்களுக்கு வேண்டுகோள்

அயோத்தி வருகையை ஒத்தி வையுங்கள்: ராமஜென்ம பூமி அறக்கட்டளை பக்தர்களுக்கு வேண்டுகோள்

அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் வருவதற்கு திட்டமிடும் பக்தர்கள், தங்கள் பயணத்தை 15 முதல் 20 நாட்கள் ஒத்திவைக்க வேண்டும் என்று ராமஜென்ம பூமி அறக்கட்டளை வேண்டுகோள் விடுத்துள்ளது.அயோத்தி ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ac3kijnn&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கும்பமேளாவுக்கு வரும் பக்தர்கள், அயோத்தி ராமர் கோவிலுக்கும் வருவதால், கூட்டம் அதிகரித்துள்ளது. நெரிசல் தவிர்க்க, அயோத்தியில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் பக்தர்கள் நீண்ட துாரம் நடந்து வர வேண்டிய நிலை உள்ளது.நீண்ட தொலைவில் இருந்து வரும் பக்தர்கள், சிரமம் இன்றி பாலராமரை தரிசிப்பதற்காக, அருகேயுள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள், தங்கள் அயோத்தி வருகையை, 15 முதல் 20 நாள் தள்ளிப்போட வேண்டும். வசந்த பஞ்சமிக்கு பிறகு வந்தால் சிரமம் இன்றி தரிசனம் பெறலாம்.இவ்வாறு அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.பிரயாக்ராஜில் கும்பமேளாவில் மௌனி அமாவாசைக்கான 'முக்கிய ஸ்நானம்' (முக்கிய நீராடல் சடங்கு) ஜனவரி 29, 2025 அன்று நடைபெற உள்ளது. இந்த புனித நாளில் 10 கோடி பக்தர்கள் புனித நீராடுவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தான் முன்னெச்சரிக்கையாக, இந்த வேண்டுகோளை ராமஜென்ம பூமி அறக்கட்டளை விடுத்துள்ளது.கடந்த மூன்று நாட்களில், அயோத்தி ராமர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது; இதனால் பக்தர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாவதாக, ராம ஜென்ம பூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Mediagoons
ஜன 28, 2025 23:50

வரும் பக்தர்களை திருப்பி அனுப்பாமல், காத்திருக்க வைக்காமல் விரைவாக தரிசனம் செய்ய சரியான ஏர்ப்பாடுகள் செய்வது அரசின் காவல்துறையின். கோவில் நிர்வாகத்தின் கடமை


sridhar
ஜன 28, 2025 22:13

அதனால் தான் வடக்கே ஹிந்து விரோத அரசியல் ஜெயிக்காது . தமிழக கேரள ஹிந்துக்கள் உணர்வு அற்றவர்கள்


V வைகுண்டேஸ்வரன்
ஜன 28, 2025 21:04

பேக்கேஜ் டூர் போட்டு டூரிஸ்ட் கம்பெனி கள் பலதும் 50, 60 பேர்களை அழைத்துக் கொண்டு கிளம்பி வந்ததால் பிரச்னை போல.


Bye Pass
ஜன 28, 2025 20:40

அயோத்யா வாரணாசி அலகாபாத் மூன்று இடங்களிலும் தரிசிக்க வருவார்கள், அரசாங்கம் தகுந்த வழிகாட்டுதல்களை ஆரம்பத்திலேயே தெரிவித்திருக்கலாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை