உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மண்பாண்ட தொழிலாளிக்கு ரூ.13 கோடி வரி; அடுத்தடுத்த நோட்டீசால் அதிர்ச்சி

மண்பாண்ட தொழிலாளிக்கு ரூ.13 கோடி வரி; அடுத்தடுத்த நோட்டீசால் அதிர்ச்சி

கோட்டா : ராஜஸ்தானில், மாதம் 8,000 ரூபாய் சம்பாதிக்கும் மண்பாண்ட தொழிலாளிக்கு, 13 கோடி ரூபாய் வருமான வரி செலுத்தும்படி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியதால் அதிர்ச்சி அடைந்துள்ளார். ராஜஸ்தானின் பூந்தி மாவட்டத்தில் உள்ள ஜாலிஜி கா பரானா கிராமத்தை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளி விஷ்ணு குமார் பிரஜாபத், 32. பட்டதாரியான இவர், களிமண்ணால் செய்த சிற்பம், சுடுமண்ணால் செய்த பொருட்களை உருவாக்கி விற்பனை செய்து வருகிறார். இதன் வாயிலாக ஆண்டுதோறும் 95,000 ரூபாயை விஷ்ணு சம்பாதித்து வருகிறார். கடந்த மாதம் 11ல், விஷ்ணுவுக்கு வருமான வரித் துறை அதிகாரிகளிடம் இருந்து நோட்டீஸ் வந்தது. அதில், '2020 - 21ம் நிதியாண்டில் 10.61 கோடி ரூபாய் வருமானம் பெற்றதற்கு வருமான வரி செலுத்தவில்லை' என கூறப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து போலீசாரிடம் முறையிட்டபோது, அவரது புகாரை யாரும் ஏற்கவில்லை. இதையடுத்து, பட்டய கணக்காளரின் உதவியை விஷ்ணு நாடினார்.முடிவில், மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள தனியார் நிறுவனம், விஷ்ணுவின் ஆதார் எண் மற்றும் பான் எண்ணை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தங்கள் நிறுவனம் வரி செலுத்துவதில் இருந்து தப்பிப்பதற்காக இரண்டு மிகப்பெரிய வணிக பரிவர்த்தனைகளை விஷ்ணு பெயரில் செய்ததும் அம்பலமானது. முதலில் 10.61 கோடி ரூபாய்க்கும், அடுத்ததாக 2.83 கோடி ரூபாய்க்கும் பணப்பரிவர்த்தனை செய்தது வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து, பூந்தி மாவட்ட எஸ்.பி.,யிடம் விஷ்ணு புகாரளித்தார்.பின்னர், இந்த வழக்கு சைபர் கிரைம் போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையே, இரண்டாவது பரிவர்த்தனையான 2.83 கோடி ரூபாய்க்கு வரி செலுத்த வலியுறுத்தி விஷ்ணுவுக்கு இரண்டாவது நோட்டீஸ், வருமான வரித் துறையிடம் இருந்து கடந்த 30ம் தேதி வந்தது. இது குறித்தும் சைபர் கிரைம் போலீசாரிடம் விஷ்ணு தெரிவித்தார். அவரின் புகார் மீது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பூந்தி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்திடம் தினக் கூலி வேலைக்காக ஆதார் மற்றும் பான் விபரங்களை விஷ்ணு அளித்திருந்த நிலையில், அங்கிருந்து அந்த ஆவணங்கள் கசிந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மோசடி செய்த மும்பை நிறுவனத்திடமும் விசாரணை நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

R.Varadarajan
ஏப் 18, 2025 17:16

மைய அரசிற்கு எதிராக வேலைசெய்து அவப்பெயரை பெற்றுத்தர நிர்வாகத்தில் இன்னும் கருப்பு ஆடுகள்இணருப்பதையே இதி காட்டுகிரது. இதற்கு பொறுப்பானவர்களைக்கண்டு பினித்து சீட்டைக்கிழித்து வீட்டுக்கு அனுப்புவதுடன, பென்ஷன் மற்றும் பிராவிடெண்ட பணம் எல்லாவற்றையும் நிறுத்து வைக்க வேண்டும


Padmasridharan
ஏப் 18, 2025 12:44

ஆதார் கார்டு, ஆதாரம் இல்லாமல் தவிக்கிறது.. பணம் பதைத்த, பொய்யான ஆட்களால்


KRISHNAN R
ஏப் 18, 2025 10:08

ஆதார் என்பது முகவரி வசிப்பிடம் மட்டும் தெரிய வேண்டும்,,,, மற்ற விவரம்... துறையினர் மட்டும் பார்க்கும்படி..செயலாம்


அப்பாவி
ஏப் 18, 2025 09:52

இதுல கேவலம் என்னவென்றால், இன்கம்டாக்ஸ் டிபார்ட்மெண்ட் நோட்டுஸ் மட்டும் பிரிண்ட் எடுத்து உள்ளூர் இன்கம்டாக்ஸ் ஆப்பீசர் ஒருத்தர் கையெழுத்தோட அனுப்பும். ஆனா, அந்த ஆப்பீசரிடம் நாம பேச முடியாது. நாம இன்கம்டாக்ஸ் வலைத்தளத்துக்குள் புகுந்து புறப்பட்டு அங்ஜே ஒரு ஐ.டி உருவாக்கி உள்ளே போனால் ஒரு எழவும் இல்லாம ஒரு வெத்து ஆக்சன் நோட்டீஸ் மட்டும் இருக்கும். இதைப் பார்த்து சரிசெய்ய பத்தாயிரம், இருவதாயிரம்னு ஆடிட்டர்களுக்கு பீஸ் குடுக்கணும். ஒரு போன் நம்பர் கிடையாது. எந்த உதவியும் கிடையாது. இன்போசிசின் தத்தி வடிவமைப்புதான் இன்கம்டாக்ஸ் வலைத்தளம். வாரம் 70 மணி நேரம் உழைச்சாலும் தேறாது.


KRISHNAN R
ஏப் 18, 2025 12:09

....கிணற்றில் தானா போய் விழுவது போல. நல்லவன் வாழ்வான் என்று கூறி செல்ல வேண்டியது தான்


Rajasekar Jayaraman
ஏப் 18, 2025 09:32

இவன் ஏன் அடுத்தவங்க கிட்ட வந்து ஆதரையும் பாஸ்புக் கூட நம்பரையும் கொடுக்கிறார் ஆனால் ஒருநிலை என்ன சொன்னாலும் கேட்காமல் பணம் கொடுக்கிறான் என்பதற்காக தன்னுடைய சரித்திரம் பூவராகவும் கொடுத்தால் அவன் செய்யும் குற்றத்துக்கு நீ தண்டனை அனுபவிக்க வேண்டியது தான்.


Prabu V
ஏப் 18, 2025 09:00

சில வங்கி அதிகாரிகளின் தொடர்பு இந்த பரிவர்த்தனையில் இருக்கலாம். விசாரணை முடிவில் தெரியும்......


அப்பாவி
ஏப் 18, 2025 08:48

உடாதீங்க. அந்தத் தொழிலாளியை நோண்டி நொங்கெடுங்க. ஆதார், பான் கார்டு தகவல்ஜளை திருட முடியாதுன்னு சொன்ன நீலக் கிணறு, ஆனந்த சர்மா போன்றவர்களுக்கு பத்ம விருதுகள் குடுத்து பணமும் குடுங்க. வங்கிகளுக்கும், வங்கி அதிகாரிகளுக்கும் வாராக்கடனா வாரி வழங்குங்க. இந்தியா பா.ஜ தலைமையில் வளர்ச்சியோ வளர்ச்சி. எதுல? ஃப்ராடுத்தனத்திலே.


Rajasekar Jayaraman
ஏப் 18, 2025 09:33

ஏன் திருடுனாங்கன்னு தெரியுமா நீயே காச வாங்கிட்டு உன்னுடைய ஆதாரையும் பாஸ்புக் நம்பரை கொடுத்தாக கவர்மெண்ட் என்ன செய்யும்...


பிரேம்ஜி
ஏப் 18, 2025 09:38

உண்மைதான்! வெட்டிப் பேச்சு, வீர வசனம், விளம்பர அரசியல்! சாதாரண மக்களுக்கு சல்லிப்பைசா பிரயோசனம் கிடையாது! வெறும் வாய் வடை!


Sampath Kumar
ஏப் 18, 2025 08:36

பேய்கள் நாடு ஆண்டாள் இப்படத்தி தான் இருக்கும் அம்புட்டு அறியாய் வாங்கி இவனுக என்ன அணுகிறார்கள் என்று ஏவனும் கேக்க கூடாது கேட்டால் தேஸ் துரோகி என்று சொல்லவன் யார்க்கு பிரோந்தோம் என்று தெரியாத அறிவு ஜீவிகள் பெருத்து விட்டார்கள்


வாய்மையே வெல்லும்
ஏப் 18, 2025 07:57

படிப்பு அறிவு கம்மியாக உள்ள மக்களே உங்க பான் கார்டு எண் மற்றும் வங்கி கணக்கு விவரத்தை திருட்டு ராசுக்கோலு கிட்ட குடுத்தாலோ விற்றாலோ காசுக்குவேண்டி உங்களுக்கு ஏழரை ஆரம்பம் என கூறியுள்ளார் ..


R.RAMACHANDRAN
ஏப் 18, 2025 07:54

இப்படி பொறுப்பில்லாமல் தூங்கி கொண்டிருந்துவிட்டு திடீரென ஏழைகளுக்கு நோட்டீசு அனுப்பி அலறவிடும் வருமான வரித்துறை இழப்பீடு தர வேண்டும்.இதனை மோசடி செய்பவர்கள் மீது சுமத்த வேண்டும்.


சமீபத்திய செய்தி