உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரஜ்வல் ரேவண்ணா இந்தியா வந்து சரணடைய வேண்டும்; குமாரசாமி

பிரஜ்வல் ரேவண்ணா இந்தியா வந்து சரணடைய வேண்டும்; குமாரசாமி

பெங்களூரு: பிரஜவல் ரேவண்ணா இந்தியா வந்து சரணடைந்து வழக்கை சந்திக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.கர்நாடகா மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா மகனான ரேவண்ணா மகன் பிரஜ்வல் ரேவண்ணா, இவர் நூற்றுக்கணக்கான ஆபாச வீடியோக்கள் வைத்திருந்ததாக புகார் எழுந்தது, சிறப்பு விசாரணைக்குழு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பிரஜ்வெல் ரேவண்ணா தற்போது வெளிநாட்டில் உள்ளார்.இந்தியா வந்தால் தாம் கைது செய்யப்படுவோம் என வராமல் உள்ளார்.இந்நிலையில் கட்சியின் மற்றொரு மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான குமாரசாமி பெங்களூருவில் செய்தியாளர் சந்திப்பின் போது கூறியது, ஆபாச வீடியோ விவகாரம் குறித்து நான் பேசவில்லை. இருப்பினும் பிரஜ்வல் ரேவண்ணா விரைவில் இந்தியா வந்து சரணடந்து வழக்கை சந்திப்பது தான் நல்லது. கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு எல்லா சாதனைகளையும் சொல்லிக் கொள்கிறது. இது வெறும் விளம்பர அரசு. அரசின் திட்டங்கள் குறித்து விளம்பரம் வழங்கியதே இந்த அரசின் சாதனை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

kulandai kannan
மே 21, 2024 10:07

குடும்ப வாரிசு அரசியல் கட்சிகளை வேரறுக்க வேண்டும்.


RAJ
மே 20, 2024 22:55

ஆக உனக்கு இதப்பத்தி இப்போதான் தெரியும்னு சொல்றியா குமாரசாமி


Ramesh Sargam
மே 20, 2024 22:45

சரணடைவதால் ஒரு பிரயோஜனமும் இல்லை ஏன் என்றால், அடுத்து அவருக்கு வெகு சுலபமாக ஜாமீன் கிடைக்கும் பிறகு வழக்கு பிறகு வாய்த்தா அப்படியே காலம் ஓடும் கடைசியில் அவனுக்கு தண்டனையே கிடைக்காது


ஆரூர் ரங்
மே 20, 2024 22:20

போட்டுத்தள்ளி விடுவார்கள் என்ற பயமிருக்கும். சிறை லாக்கப் மரணங்கள் கர்நாடகா வுக்கு புதிதல்லை. ( நேற்று தா கிருட்டிணன் மறைந்த தினம்)


மேலும் செய்திகள்









புதிய வீடியோ