உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விமான விபத்து முதற்கட்ட அறிக்கை எதிரொலி; போயிங் விமானங்களில் எரிபொருள் சுவிட்ச் லாக்கிங் சிஸ்டத்தை ஆய்வு செய்ய உத்தரவு

விமான விபத்து முதற்கட்ட அறிக்கை எதிரொலி; போயிங் விமானங்களில் எரிபொருள் சுவிட்ச் லாக்கிங் சிஸ்டத்தை ஆய்வு செய்ய உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஏர் இந்தியா விபத்து குறித்த விமான விபத்து புலனாய்வுப் பணியகத்தின் முதற்கட்ட அறிக்கையைத் தொடர்ந்து, இந்தியாவில் பதிவுசெய்யப்பட்ட போயிங் விமானங்களின் இன்ஜின் எரிபொருள் சுவிட்சுகளை கட்டாயமாக ஆய்வு செய்யுமாறு அனைத்து விமான நிறுவனங்களுக்கும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டு உள்ளது .குஜராத்தின் ஆமதாபாத்தில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 787 - 8 ட்ரீம் லைனர் இரட்டை இன்ஜின் விமான விபத்தின் முதற்கட்ட விசாரணை அறிக்கை வெளியானது. விமானம் புறப்பட்ட 32 நொடிகளில் இரண்டு இன்ஜின்களும் திடீரென பழுதானதே விபத்திற்கு காரணம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு விமானி, மற்றொரு விமானியிடம் எரிபொருள் செல்லும் வால்வை ஏன் அடைத்தீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு தான் அடைக்கவில்லை என மற்றொரு விமானி பதில் அளித்துள்ளார் என முதற்கட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.இந்நிலையில், இந்தியாவில் பதிவுசெய்யப்பட்ட போயிங் 737, 787 ட்ரீம்லைனர் விமானங்களின் இன்ஜின் எரிபொருள் சுவிட்சுகளை கட்டாயமாக ஆய்வு செய்யுமாறு அனைத்து விமான நிறுவனங்களுக்கும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டு உள்ளது .வரும் ஜூலை 21ம் தேதிக்குள், எரிபொருள் சுவிட்சுகளின் ஆய்வை முடிக்குமாறு அனைத்து விமான நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

அப்பாவி
ஜூலை 14, 2025 22:06

போயிங் கிடமிருந்து நஷ்ட ஈடு கிடைக்காது.


Nada Rajan
ஜூலை 14, 2025 21:53

விபத்து நடந்த பிறகு சோதனை செய்து என்ன சோதனை செய்யாட்டா என்ன


SUBBU,MADURAI
ஜூலை 15, 2025 08:11

விபத்திற்கான காரணத்தை எப்படி அறிவது? அதை வைத்து கோளாறுகளை சரி செய்து இது போன்ற விமான விபத்துகளை தவிர்க்கலாம் அல்லவா?


முக்கிய வீடியோ