உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரீமியர் லீக்: 3 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி

பிரீமியர் லீக்: 3 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி

மும்பை: பிரீமியர் லீக் கிரிக்கெட் இன்றைய தொடரில், குஜராத் அணி 3 வி்க்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 56வது லீக் போட்டி மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தார்.இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த மும்பை அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. ரியான் ரிக்கல்டன் 2 ரன்னுக்கும், ரோகித் சர்மா 7 ரன்னுக்கும் அவுட்டாகினர். அடுத்து ஜோடி சேர்ந்த வில் ஜாக்ஸ் சூர்ய குமார் யாதவ் ஜோடி ரன்களை சேர்த்ததால் மும்பை அணியின் ரன் உயர்ந்தது. ஆனால்,அரைசதம் அடித்த வில் ஜாக்ஸ் 53 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 35 ரன்களிலும் அவுட்டாகினர். அடுத்து வந்த திலக் வர்மா(7), கேப்டன் ஹர்திக் பாண்டியா(1), நமன் திர்(7) ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசியில் கார்பின் போஸ்ச் 27 ரன் எடுத்து ரன் அவுட்டாக இறுதியில் மும்பை அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. குஜராத் அணியின் சாய் கிஷோர் 2, சிராஜ், அர்ஷத் கான், பிரசித் கிருஷ்ணா, ரஜீத் கான், ஜெரால்ட் கோயிட்சே தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.156 ரன்கள் வெற்றி இலக்காக களம் இறங்கிய குஜராத் அணியில் முதல் விக்கெட்டாக சாய் சுதர்சன் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜோஸ் பட்லர் 30 ரன்களில் அவுட்டானார். 14 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்த நிலையில் மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.சிறிது நேரத்திற்கு பின் மீண்டும் போட்டி துவங்கியது. 43 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சுப்மன் கில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஷர்பான் ரூதர்போர்ட் 28 ரன்களிலும், ஷாருக்கான் 6 ரன்களிலும் அவுட்டாகினர்.மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம்நிறுத்தப்பட்டது. அப்போது 18 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 12 பந்துகளில் 24 ரன்கள் தேவை என்ற நிலையில் மீண்டும் ஆட்டம் துவங்கியது. அப்போது 147 ரன் இலக்குநிர்ணயிக்கப்பட்டது. இதில் 19 ஓவர்களில் 7 விக்கெட்இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் குஜாத் அணி வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
மே 06, 2025 20:21

நம் நாட்டை போர் மேகம் சூழ்ந்திருக்கும் வேளையில் இந்த IPL போட்டிகள் தேவையா? அல்லது தேவை அற்றதா?


Ragupathy
மே 06, 2025 21:46

ஐபில் போட்டிகளை நிரந்தரமாக தடைசெய்வது நாட்டுக்கு நல்லது...


புதிய வீடியோ