UPDATED : ஜூன் 03, 2025 11:31 PM | ADDED : ஜூன் 03, 2025 11:25 PM
ஆமதாபாத்: பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில். இன்று நடந்த பரபரப்பான பைனலில் பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியதுடன் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.பிரிமியர் கிரிக்கெட் தொடரில் இம்முறை 'நடப்பு சாம்பியன்' கோல்கட்டா, சென்னை, மும்பை போன்ற முன்னணி அணிகள் வெளியேறின. இன்று ஆமதாபாத் மோடி மைதானத்தில் நடைபெற்ற பைனலில் பெங்களூரு, பஞ்சாப் அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=z3cbq6gz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதன் படி பேட்டிங் செய்ய களம் இறங்கிய பெங்களூரு அணியில் சால்ட் மற்றும் கோஹ்லி துவக்கம் கொடுத்தனர். 1.4 வது ஓவரில் 9 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து இருந்த சால்ட், ஜேமிசன் பந்தில், ஸ்ரேயாசிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.6.2 வது ஓவரில் பெங்களூரு அணி 56 ரன்கள் எடுத்து இருந்த போது 2 வது விக்கெட்டை இழந்தது. மயங்க் அகர்வால் 24 ரன்கள் எடுத்த போது, சகால் பந்துவீச்சில், அர்ஷ்தீப்பிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.நிதானமாக விளையாடிய விராட் கோஹ்லி 43 ரன்னில் உமர்சாய் பந்தில் அவரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.கேப்டன் ரஜத் பட்டிடர் 26 ரன்னிலும், லிவிங்ஸ்டன் 25 ரன்னிலும் ஜேமிசன் பந்தில் எல்டிடபிள்யூ முறையில் அவுட்டானார்கள்.ஜித்தேஷ் ஷர்மா 24 ரன்னில் வியாஷ்க் பந்தில் போல்டானார்.ரொமாரியோ ஷெப்பர்ட் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.குர்ணால் பாண்ட்யா 4 ரன்களில் வெளியேறினார்.இறுதியில் பெங்களூரு அணி, 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணியின் அர்ஷ்தீ் சிங், ஜேமிசன் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.191 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியில் பிரியான்ஷ் ஆர்யா, பிராப் சிம்ரன் ஆகிய இருவரும் நல்ல துவக்கம் தந்த நிலையில் பிரியான்ஷ் ஆர்யா 24 ரன்களில் முதல் விக்கெட்டாக வீழ்ந்தார்.அடுத்து பிரப் சிம்ரன் 26 ரன்களில் இரண்டாவது விக்கெட்டாக வெளியேறினார்.மூன்றாவதுவிக்கெட்டிற்கு ஜோடிசேர்ந்த ஸ்ரேயாஸ் ஐய்யர் 1ரன்னில் அவுட்டாகினார். ஜோஸ் இங்லிஸ் 39 ரன்களில் அவுட்டாகி நான்காவது விக்கெட்டாக வெளியேறினார்.நேஹால் வதோரா 15 ரன்களிலும், மார்க்ஸ் ஸ்டோய்னிஷ் 6 ரன்களிலும், ஒமர் சாய் 1 ரன்னிலும் அவுட்டாகினர். இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்துடன் முதன்முறை்யாக . சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.