உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "இரும்பு மனிதர்" சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி மரியாதை

"இரும்பு மனிதர்" சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி மரியாதை

புதுடில்லி: சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு, குஜராத்தில் உள்ள அவரது சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். அப்போது பிரதமர் மோடிக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதனை அவர் ஏற்றுக்கொண்டார். டில்லியில் சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டில்லி முதல்வர் ரேகா குப்தா உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்தியாவை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்தவர் வல்லபாய் படேல். எனவே அவர் நாட்டின் இரும்பு மனிதர் என போற்றப்படுகிறார். இவர், குஜராத் மாநிலம், ஆனந்த் மாவட்டம், கரம்சாத் என்ற கிராமத்தில் 1875, அக்., 31ல் பிறந்தார். இவரது 150வது பிறந்த நாள் இன்று தேசிய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பிரதமர் மோடி மரியாதை

சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு, குஜராத்தில் உள்ள அவரது சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். அப்போது பிரதமர் மோடிக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதனை அவர் ஏற்றுக்கொண்டார். இது தொடர்பாக சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். தேசிய ஒருமைப்பாடு, நல்லாட்சி மற்றும் பொது சேவைக்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு இளம் தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கிறது. தன்னம்பிக்கை கொண்ட இந்தியா என்ற அவரது தொலைநோக்குப் பார்வையை நிலைநிறுத்துவோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இரும்பு மனிதர்

ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள அறிக்கை: இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளில், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சர்தார் வல்லபாய் படேல் ஒரு சிறந்த தேசபக்தர். தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பியவர்.அவர் தனது அசைக்க முடியாத உறுதிப்பாடு, அசாத்திய தைரியம் மற்றும் திறமையான தலைமை மூலம் நாட்டை ஒன்றிணைக்கும் வரலாற்றுப் பணியை நிறைவேற்றினார். அவரது அர்ப்பணிப்பும் தேசிய சேவை மனப்பான்மையும் நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது. தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு, நாம் ஒன்றுபட்டு, வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க உறுதிமொழி எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

மரியாதை

டில்லியில் சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டில்லி முதல்வர் ரேகா குப்தா உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சிறப்பு வாய்ந்த நாள்

டில்லியில் சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளை முன்னிட்டு, நடந்த தேசிய ஒற்றுமை தின விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: இன்று சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாள். இன்று எங்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த நாள், 2014ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31ம் தேதி, சர்தார் வல்லபாய் படேலுக்கு மரியாதை செலுத்தும் வகையில் தேசிய ஒற்றுமை தின விழாவை நாங்கள் ஏற்பாடு செய்கிறோம். வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் மோடி அதை பிரமாண்டமாக கொண்டாட முடிவு செய்தார். சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டை ஒன்றிணைப்பதிலும், வளர்ச்சி அடைந்த நாட்டை உருவாக்குவதிலும் சர்தார் வல்லபாய் படேல் மகத்தான பங்களிப்பை வழங்கி உள்ளார். காங்கிரஸ் அரசு சர்தார் வல்லபாய் படேலுக்குப் போதுமான மரியாதை அளிக்கவில்லை.

பாரத ரத்னா

41 ஆண்டுகள் தாமதத்திற்குப் பிறகு சர்தார் வல்லபாய் படேலுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. நாட்டில் எங்கும் ஒரு நினைவு இடத்தையும் கட்டப்படவில்லை. நரேந்திர மோடி குஜராத்தின் முதல்வராகப் பொறுப்பேற்ற போதுதான், சர்தார் படேலின் நினைவாக ஒரு பிரமாண்டமான நினைவு இடத்தை கட்டினார். இவ்வாறு அமித்ஷா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

SP
அக் 31, 2025 20:06

இனிமேலாவது சில ரூபாய் நோட்டுகளில் சர்தார் பட்டேல் அவர்களின் படமும் சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் படமும் இடம்பெறுமாறு மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்


SUBRAMANIAN P
அக் 31, 2025 13:39

இந்தியாவின் இரண்டாவது இரும்பு மனிதர் மோடியே என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.. ராகுலையெல்லாம் மோடியோடு தயவுசெய்து ஒப்பிடாதீர்கள்.


suresh Sridharan
அக் 31, 2025 12:53

தற்போதைய நமது இரும்பு மனிதர் திரு மோடி அவர்கள்


RAMESH KUMAR R V
அக் 31, 2025 12:44

அன்னாருக்கு மிகவும் பொருத்தமான பட்டம் இரும்பு மனிதர்.


ஜெகதீசன்
அக் 31, 2025 11:22

போற்றத்தக்க தேசிய தலைவர். காங்கிரஸ் கமிட்டியில் தான் ஜெயித்த பிரதமர் பதவியை இவர் விட்டு கொடுத்தது நமக்கு கேடாய் முடிந்தது.


Thravisham
அக் 31, 2025 09:51

ஓர் இரும்பு மனிதனுக்கு கிடைக்க வேண்டிய மகத்துவம்


தியாகு
அக் 31, 2025 09:41

அதுல பாருங்க ஊழல்கள் லஞ்சங்கள் மூலம் ஒரு பைசா கூட சொத்து சேர்க்காத தேசியவாதி சர்தார் வல்லபாய் படேலுக்கு சிலை தேவையா என்று தற்குறி டுமிழர்கள் கூவுவார்கள், ஆனால் ஊழல்கள் மூலம் மொத்த தமிழ்நாட்டையும் சுரண்டி தன் குடும்பத்திற்கு சொத்து சேர்த்த கட்டுமரத்தின் சிலை டுமிழ்நாட்டு வீதியெங்கும் இருப்பதை பற்றி வாய் திறக்காமல் மௌனமாய் கடந்து செல்வார்கள். டுமிழர்களை எப்படி புரிந்துகொள்வதென்றே தெரியவில்லை.


ASIATIC RAMESH
அக் 31, 2025 09:01

வாழ்த்துக்கள்.... வணங்குவோம்... அதேபோல் விரைவில் நம்முடைய பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப்பகுதியும் அங்குள்ள மக்களால் தானாகவே நம்முடன் விரைவில் இணைந்தால் நம் தேசிய வரைபடம் பாரததாயின் தலைமேல் கிரீடம் வைத்ததுபோல் இருக்கும்.. விரைவில் நடக்கும் என்று எதிர்பார்ப்போம்...


cpv s
அக் 31, 2025 12:04

no more need muslim country pok for india


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை