உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 6 நாட்கள் சுற்றுப்பயணம்; போட்ஸ்வானா சென்ற ஜனாதிபதி முர்முவுக்கு வரவேற்பு

6 நாட்கள் சுற்றுப்பயணம்; போட்ஸ்வானா சென்ற ஜனாதிபதி முர்முவுக்கு வரவேற்பு

லுவாண்டா: ஆப்ரிக்க நாடான போட்ஸ்வானா சென்ற ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.ஆப்ரிக்க நாடுகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு 6 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அவர் அங்கோலோ மற்றும் போட்ஸ்வானாவிற்கு செல்லும் முதல் இந்திய ஜனாதிபதி ஆவார். அங்கோலா தலைநகர் லுவாண்டாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு சென்று அடைந்தார்.அவருக்கு விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கோலாவின் ஜனாதிபதியை சந்தித்து இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து திரவுபதி முர்மு ஆலோசனை நடத்தினார். அங்கோலா பார்லிமென்டில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். அங்கோலா பயணத்தை முடித்துக்கொண்டு போட்ஸ்வானா சென்றார். அந்நாட்டின் தலைநகர் கபொரின் சென்ற திரவுபதி முர்முவை அந்நாட்டு அதிபர் டுமா கிடியோன் போகோ வரவேற்றார். இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசித்தனர். இந்திய ஜனாதிபதி போட்ஸ்வானாவிற்கு சென்றது இதுவே முதல் முறை. போட்ஸ்வானா பார்லிமென்டில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்ற உள்ளார். அவர், நவ., 13ம் தேதி இந்தியா திரும்புகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை