உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவிற்கு மிகப்பெரிய சொத்து: பிரதமர் மோடிக்கு சசி தரூர் பாராட்டு

இந்தியாவிற்கு மிகப்பெரிய சொத்து: பிரதமர் மோடிக்கு சசி தரூர் பாராட்டு

புதுடில்லி: ''பிரதமர் நரேந்திர மோடியின் ஆற்றல், சுறுசுறுப்பு உள்ளிட்டவை உலக அரங்கில் இந்தியாவிற்கு ஒரு முக்கிய சொத்தாக உள்ளது'' என காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் பாராட்டி உள்ளார்.காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சசி தரூர் சமீப காலமாக பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் பாராட்டி பேசி வருகிறார். இதற்கு காங்கிரஸ் கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=n914f2lk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அக்கட்சி தலைவர்கள் சிலர், சசி தரூருக்கு கண்டனம் தெரிவித்தாலும், விமர்சனம் செய்தாலும் அதனை சசிதரூர் கண்டுகொள்ளவில்லை. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை வெளிநாடுகளில் எடுத்துரைத்து விட்டு, சமீபத்தில் நாடு திரும்பிய காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டி உள்ளார். அவர் கூறியதாக வெளியான செய்தியில் கூறியிருப்பதாவது: பிரதமர் நரேந்திர மோடியின் ஆற்றல், சுறுசுறுப்பு உள்ளிட்டவை உலக அரங்கில் இந்தியாவிற்கு ஒரு முக்கிய சொத்தாக உள்ளது. ஆனால் அதற்கு அதிக ஆதரவு தேவை. இந்த முயற்சி உலக அரங்கில் இந்தியாவின் ஒற்றுமையைக் காட்டுகிறது.நாடு தொடர்ந்து பாடுபடுவதால், தொழில்நுட்பம், வர்த்தகம் மற்றும் பாரம்பரியம் ஆகிய மூன்றில் இந்தியாவின் செயல்பாடுகள் உலக அளவில் சிறந்ததாக வேண்டும். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை ஒரு சட்டபூர்வமான தற்காப்புப் பயிற்சி. தொடர்ச்சியான எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு அவசியமானது என்பதை நாங்கள் வெளிநாடுகளிடம் விளக்கினோம். லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

அப்பாவி
ஜூன் 24, 2025 07:49

ஓர் எலி முழுகும் கப்பலை விட்டு பாயப்பாக்குது. அங்கே உதை விழுந்தா திரும்ப வந்துரும்.


V Venkatachalam
ஜூன் 23, 2025 16:44

நாளைய தலைப்பு செய்தி.. தன்மானமுள்ள கான்கிராஸ் அடி மட்ட தொண்டர்கள் 4 பேர் அதிர்ச்சியில் மரணம். மல்லிகார்ஜுன் அதிர்ச்சி. இருந்த 4 தொண்டர்களும் போய்விட்டார்களே. சசி தரூருக்கு கடும் கண்டனம்.


Sekar
ஜூன் 23, 2025 16:06

ஆழ்ந்த தெய்வ பக்தி, சிறந்த வாழ்க்கை நெறி முறைகளை பின்பற்றுதல், தெளிந்த சிந்தனை, நேர்மறையான எண்ணங்கள் மற்றும் கடமையில் கண்ணும் கருத்துமாக செயல்படும் ஒருவருக்கு மட்டுமே இந்த உலகம் வசப்படும். அப்படிப்பட்டவராக விளங்கும் நமது பிரதமரின் செயல்பாடுகள் மிக சிறப்பாக இருக்கிறது.


Kumara
ஜூன் 23, 2025 13:47

மோடி ஜி Great ...God of India


Perumal
ஜூன் 23, 2025 13:31

திரு மோடிஜி அவர்களை இங்கிலாந்தில் இருக்கும் பாக்கிஸ்தான் மக்களே பாராட்டுகின்றனர் , தங்கள் நாட்டிற்கு இப்படி உறுதியான தலைவர் இல்லையென்று , ஆனால் இந்தியாவில் எதிர்க்கட்சிகள் எப்படியாவது இவரை கீழே தள்ள வேண்டும் குறிப்பாக திரு ராகுல் கான் வின்சி பிரதமர் பதவி அவர்களுடய குடும்ப சொத்து , அதை திருப்பி கொடு என்று திரு மோடிஜியை எவ்வளவு கேவலமாக விமர்சிக்க முடியுமோ அவ்வளவு கேவலமாக விமரிசிக்கின்றார் ,


M S RAGHUNATHAN
ஜூன் 23, 2025 14:30

ராகுல் மோடியிடம்: ஆத்தா வையும். பிரதம மந்திரி பதவி எனக்கு தா. நான் தாய்லாந்து போகணும்.


Manaimaran
ஜூன் 23, 2025 13:11

விற்பனைக்கு தயார் வாங்க ஆள் இல்ல


M. PALANIAPPAN, KERALA
ஜூன் 23, 2025 12:58

வெளி நாடுகளுக்கு போய் வந்தால்தான் தெரியும் மோடி ஜி அவர்கள் உலக நாடுகளில் இந்தியாவின் பெயரை எந்த அளவுக்கு பிரகாச படுத்தியுள்ளார் என்பது. சசிதரூர் மற்ற காங்கிரஸ்காரார் போல் அல்ல, புத்திசாலி, உடனே புரிந்து விட்டது. வாழ்க மோடிஜி


Subramanian N
ஜூன் 23, 2025 12:55

இப்போதுதான் சசி தரூர் உண்மை எது என்று தெரிந்து கொண்டிருக்கிறார் .


சிவம்
ஜூன் 23, 2025 12:40

சோனியா, ராகுல், மல்லி போன்றவர்களுக்கு வயிறு எரியும். எரியட்டும்.


Narayanan
ஜூன் 23, 2025 12:11

எதிர்க்கட்சியை சேர்ந்த பல எம்பிக்கள் உலக நாடுகளுக்கு சென்று அங்கு தலைவர்களுடன் பேசி வந்த பிறகுதான் மோடிஜியின் அருமை தெரிகிறது . இதை சசிதரூர் மட்டும் சொல்லவில்லை . உலகத்தலைவர்கள் பலரும் சொன்னதுதான். இங்குள்ள கிணற்று தவளை காங்கிரஸ் தலைவர்கள்தான் மோடிஜியை விமர்சிக்கிறார்கள் .


Yes your honor
ஜூன் 23, 2025 12:59

கிணற்றுத் தவளைகள் கிடையாது. காங்கிரசுக்கும் சரி, திமுகவிற்கு சரி திரு. மோடி ஜி அவர்களின் ஆற்றலும், அறிவும் நன்றாகவே தெரியும். இருந்தாலும், காழ்ப்புணர்ச்சியாலும் வெட்டி வீம்பினாலும், சுயஅறிவற்ற முரட்டுத்தனத்தினாலும் திரு. மோடி ஜி அவர்கள் மீது வெறுப்பை உமிழ்கிறார்கள். இதற்கு உள்ள ஒரே மூலகாரணம், இவர்கள் செய்யும் ஊழலையும், அடிக்கும் கொள்ளையையும் திரு. மோடி ஜி அவர்கள் கண்டுபிடித்து விடுகிறார் என்பது மட்டுமே.


சமீபத்திய செய்தி