உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உள்நாட்டில் தயாரிப்பட்ட பரம் ருத்ரா சூப்பர் கம்ப்யூட்டர் : அர்ப்பணித்தார் பிரதமர்

உள்நாட்டில் தயாரிப்பட்ட பரம் ருத்ரா சூப்பர் கம்ப்யூட்டர் : அர்ப்பணித்தார் பிரதமர்

புனே,உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, 'பரம் ருத்ரா' என்ற மூன்று சூப்பர் கம்யூட்டர்களை, பிரதமர் மோடி, நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் திட்டத்தின்கீழ், 130 கோடி ரூபாய் செலவில் மூன்று சூப்பர் கம்ப்யூட்டர்கள் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளன. பரம் ருத்ரா என அதற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளன.அதிதிறனுடைய இந்த சூப்பர் கம்ப்யூட்டர்கள் அறிவியல் ஆராய்ச்சி பணிகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளன. இவை புனே, டில்லி மற்றும் கோல்கட்டாவில் நிறுவப்பட்டுள்ளன.இவற்றை பிரதமர் மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் திட்டம் 2015ல் துவங்கப்பட்டது. தகவல் தொழில்நுட்பம், உற்பத்தித் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை, ஸ்டார்ட் - அப் நிறுவனங்களில் குவாண்டம் கம்ப்யூட்டிங் இன்று ஆதிக்கம் செலுத்துகிறது. அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சியில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.மேலும், வானிலை ஆய்வுகளுக்காக 850 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள உயர்திறன் படைத்த கணினி அமைப்புகளையும் பிரதமர் துவக்கி வைத்தார்.வழக்கமான கம்ப்யூட்டர்களை விட சூப்பர் கம்ப்யூட்டர்கள் 1,000 மடங்கு வேகமாக இயங்கும். சாதாரண கம்ப்யூட்டர்கள் ஆண்டு கணக்கில் செய்யும் பணிகளை, சூப்பர் கம்ப்யூட்டர்கள் சில நிமிடங்களில் செய்யும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

அப்புசாமி
செப் 27, 2024 19:31

சூப்பர். இந்த சூப்பர் கம்பியூட்டர்களை வெச்சு சீக்கிரமா பாஞ்சி லட்சம் போட முடியுமான்னு பாருங்க. பத்து வருஷமா பெண்டிங்.


N.Purushothaman
செப் 27, 2024 07:38

வரவேற்கத்தக்கது ....வாழ்த்துக்கள் ...


VENKATEAN V. Madurai
செப் 27, 2024 04:57

தொழிலாளர் வருங்கால வைப்பு அலுவலகத்திற்கு இதே மாதிரி ஒரு கம்ப்யூட்டர் கொடுக்க வேண்டும் எப்பொழுது சர்வர் வேலை செய்யவில்லை என்கிறார்கள்


கிஜன்
செப் 27, 2024 02:26

நிறைய டேட்டா சென்டர்களை உருவாக்க வேண்டும் .... சைபர் செக்யூரிட்டி யில் இந்தியா நம்பர் 1 என்ற பேர் வாங்க வேண்டும் ...


முக்கிய வீடியோ