உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லோக்சபாவில் காங்கிரஸ் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு!: அரசியலமைப்பை அவமதிப்பதாக ஆவேசம்

லோக்சபாவில் காங்கிரஸ் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு!: அரசியலமைப்பை அவமதிப்பதாக ஆவேசம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிப்பது நேரு குடும்பத்தின் பாரம்பரியம். தனக்கு சாதகமாக திருத்தம் செய்யும் விதையை நேரு துவக்கினார்; இந்திரா தண்ணீர் ஊற்றி வளர்த்தார். அதை ராஜிவ் தொடர்ந்தார். தங்களுடைய 55 ஆண்டு ஆட்சியில் அந்த குடும்பம், 75 முறை அரசியலமைப்பை திருத்தியது. தற்போதுள்ள அந்த குடும்பத்தினர், அரசியலமைப்பை எந்தளவுக்கு முடியுமோ, அந்த அளவுக்கு துஷ்பிரயோகம் செய்கின்றனர்,'' என, பிரதமர் நரேந்திர மோடி லோக்சபாவில் ஆவேசமாக கூறினார்.நாட்டின் அரசியலமைப்பு ஏற்கப்பட்டதன், 75வது ஆண்டையொட்டி, லோக்சபாவில் இரண்டு நாள் விவாதம் நேற்று முன்தினம் மற்றும் நேற்று நடந்தன. ராஜ்யசபாவில், நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்க உள்ளன. லோக்சபாவில் பல கட்சித் தலைவர்கள் பேசியதற்கு பதிலளித்து, பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரண்டு மணி நேரம் பேசினார். அப்போது, காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார். அவரது பேச்சின் முக்கிய அம்சங்கள்:வேற்றுமையில் ஒற்றுமை என்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலே, நம் அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. அரசியலமைப்பை உருவாக்கியவர்களின் நோக்கமும் அதுவாகவே இருந்தது. ஆனால், அதை ஏற்க முடியாத சிலர், விஷ விதைகளை துாவினர். நான் காங்கிரஸ் ஆட்சியைப் பற்றி பேசவில்லை. ஒரு குடும்பம், 55 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. அந்த குடும்பத்தை பற்றியே பேசப் போகிறேன். தங்களுக்கு இடையூறாக அல்லது பதவிக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடிய சட்டங்களை திருத்துவது என, இந்தக் குடும்பம், அரசியலமைப்பு சட்டத்தின் நோக்கங்களை சீரழித்தனர்.கடந்த, 1951ல் இதை நேரு துவக்கி வைத்தார். அவரது மகள் இந்திரா, அதை தண்ணீர் ஊற்றி வளர்த்தார். இந்திராவின் மகன் ராஜிவ், அதை பராமரித்து வந்தார். தற்போதுள்ள அந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், தங்களுடைய குடும்ப பாரம்பரியத்தை தொடர்கின்றனர். பிரதமருக்கு மேலாக, ஒரு பதவியை, ராஜிவின் மனைவி சோனியாவுக்காக உருவாக்கினர். மத்திய அமைச்சரவை எடுத்த முடிவை கிழித்தெறிந்தார், சோனியாவின் மகன் ராகுல். தற்போதும் அந்த குடும்பத்தில் உள்ள ராகுல், பிரியங்கா ஆகியோர், அரசியலைப்பு சட்டத்தை தொடர்ந்து அவமதித்து வருகின்றனர்.அந்தக் குடும்பம் ஆட்சியில் இருந்த, 55 ஆண்டுகளில், 75 முறை அரசியலமைப்பு சட்டம் திருத்தப்பட்டது. ஒருமுறை ரத்தத்தை சுவைத்த அந்தக் குடும்பம், அதை தொடர்ந்து செய்து வருகிறது. நம்முடைய அரசியலமைப்புச் சட்டத்தின் பயணம், மிக பிரமிக்கத் தக்கது. பல ஏற்ற, இறக்கங்களை சந்தித்தபோதும், இன்றும் நமக்கு வழிகாட்டியாக, கலங்கரை விளக்கமாக அது விளங்குகிறது. உலகெங்கும் ஜனநாயகம் குறித்து பேசப்படும்போது, நம் அரசியலமைப்புச் சட்டம் குறித்தும் நிச்சயம் பேசப்படும். மற்ற நாடுகளில் பெண்களுக்கு ஓட்டுரிமை அளிப்பதற்கு நீண்ட காலமான நிலையில், நம் நாட்டில், துவக்கத்திலேயே அந்த உரிமை வழங்கப்பட்டது.வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நம் பாரம்பரியம். அதையே, அரசியலமைப்பு உணர்த்துகிறது. ஆனால், மக்கள் மனதில் விஷவிதையை விதைக்க சிலர் முயற்சிக்கின்றனர். அதுவே, நேரு குடும்பத்தின் பாரம்பரியம். தனக்கு இடையூறாக இருந்த சட்டத்தை நேரு திருத்தினார். தன் பதவியை காப்பாற்ற, அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்தார் இந்திரா. இதற்காக அவசரநிலையை நடைமுறைப்படுத்தினார். நம் நாட்டு ஜனநாயகத்தின் இருண்ட பக்கங்களாக அந்த காலத்தை எப்போதும் மறக்க முடியாது.அதுவும் அரசியலமைப்பின், 25வது ஆண்டைக் கொண்டாடும்போது, அவசரநிலையை இந்திரா அறிவித்தார். காங்கிரசின் இந்த பாவத்தை அழிக்க முடியாது. இந்திராவின் வழியில் ராஜிவும், அவரைத் தொடர்ந்து தற்போதுள்ள குடும்பமும், அரசியலமைப்பு தொடர்ந்து அவமதித்து வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

11 உறுதிமொழிகள்!

பிரதமர் மோடி தன் பேச்சின்போது, நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கோடு, நாட்டு மக்கள் அனைவரும், 11 உறுதிமொழிகளை ஏற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.1. அரசாக இருந்தாலும், குடிமக்களாக இருந்தாலும், தங்கள் பொறுப்புகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.2, அனைவருடன் இணைந்து, அனைவரின் நலனுக்காக உழைக்க வேண்டும்.3. ஊழலுக்கு எதிராக பூஜ்ய சகிப்புதன்மை.4. நாட்டின் சட்டங்கள் குறித்து பெருமைபடுவதுடன், அதை மதித்து நடக்க வேண்டும்.5. காலனியாதிக்க மனநிலையில் இருந்து விடுதலை. நாட்டின் பாரம்பரியம், கலாசாரம் குறித்து பெருமைப்பட வேண்டும்.6. வாரிசு அரசியலில் இருந்து விடுதலை.7. அரசியலமைப்புக்கு மரியாதை; அதை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தக் கூடாது.8. இடஒதுக்கீட்டை பறிக்கக் கூடாது. மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு கூடாது.9. பெண்களை அடிப்படையாக வைத்து வளர்ச்சி. இதில் இந்தியா முன்னோடியாக இருக்க வேண்டும்.10. மாநிலங்களின் வளர்சியே, நாட்டின் வளர்ச்சி.11. ஒரு பாரதம், சிறந்த பாரதம்.இவற்றை பின்பற்றினால், 2047ல் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடு என்ற இலக்கை நிச்சயம் அடையும் என, பிரதமர் குறிப்பிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

ராமகிருஷ்ணன்
டிச 16, 2024 11:55

காங்கிரஸ்காரர்கள் ஆண்ட காலங்களில் எல்லாம் முடிந்த அளவுக்கு சுருட்டி முழுங்கி வந்தனர். நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், ராணுவ வலிமைக்கும், மக்களின் கல்வி, தொழில் முன்னேற்றம் என்று எதிலும் வேகமில்லாமல், சுருட்டுவதில் மட்டுமே வேகம் காட்டி வந்தனர், மோடிஜியின் ஆட்சியில் நேர்மையான முறையில் எல்லா துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருவதை சகிக்க முடியாமல் காங்கிரஸ்காரர்கள் செய்து வரும் அக்கிரமங்கள் எல்லை மீறி போகிறது. மோடிஜி கடுமையான நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்.


subramanian
டிச 15, 2024 21:37

நேருவின் மன கோணல், இந்திராவின் அகங்காரம், ராஜீவின் தள்ளாட்டம் இவையெல்லாம் அரசியலமைப்பை பாதித்து விட்டது. சரிசெய்யும் போது வலிக்கிறது.


Gopalan
டிச 15, 2024 20:51

இந்த மக்கள் ஹிந்தி தெரியாதவர்கள். இவர்களை படிக்க விடாமல் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தி இவர்களின் உரிமை பறித்து விட்டனர். இந்த அவல நிலைக்கு இந்த தமிழ் நாடு கட்சியினர் அவ‌ர்களை தள்ளி விட்டனர். சம உரிமை கிடைக்க வில்லை இந்த ஜனநாயக நாட்டில் கேவலம் ஒரு அரசியல் காரணத்தால். இனி மேல் ஜனநாயகம் காப்பாற்ற படுமா என்பது இனி வரும் காலங்களில் தெரியும்.


RAMAKRISHNAN NATESAN
டிச 15, 2024 20:41

உங்க குரல் பலவீனமா ஒலிக்குது மாஸ்டர் .....


Dharmavaan
டிச 15, 2024 15:37

இ ட ஒதுக்கீடு கூடாது யாருக்குமே //.மினாரிட்டி சலுகைகள் முழுதும் நீக்கப்பட வேண்டும். //ஹிந்து மாதத்தில் அரசு தலையீடு கூடாது //கோயில்களை விட்டு அரசு வெளியேற வேண்டும்// மத ரீதியான எல்லா சலுகைகளும் நீக்கப்பட வேண்டும் //மத மாற்ற தடைச்சட்டம் வேண்டும் // கொலீஜியும் நீக்கப்பட வேண்டும் //நீதிபதிகன் எல்லாம் பார்லிமென்டின் கட்டுப்பாட்டில் வரவேண்டும் - இவைகளும் சேர்க்கப்பட வேண்டும்


orange தமிழன்
டிச 15, 2024 14:39

ஜெய் ஹிந்த்....


Subramanian N
டிச 15, 2024 13:23

ராகுல், சோனியா மற்றும் பிரியங்காவை நாடு கடத்த வேண்டும். அப்போதுதான் இந்த நாடு முன்னேறும். அவர்களுடன் திராவிடிய கும்பலையும் நாடு கடத்தவேண்டும்


sankaranarayanan
டிச 15, 2024 12:59

அரசியலில் அமைப்புச் சட்டத்தை இதுவரை ஆண்டவர்களின் குடும்பம் அவமதிப்பது பற்றி நமது பிதாமர் அக்குவேரே ஆனிவேரே ஆக பிச்சு விளாசிவிட்டார் இனி எதிர் கட்சி தலைவர் பாராளுமன்றத்தில் நுழைவதற்கே அருகதை இல்லாமல் ஆகிவிட்டார். இனியாவது நாட்டின் நலம் கருதி அரசியல் துரோகம் செய்தவர்களின் குடும்பம் இந்திய அரசியலை விட்டே ஒதுங்கி இருப்பதே மேல்.


Rajan
டிச 15, 2024 12:32

அவர்களின் அரசியல் அமைப்பே ஆடுது. சும்மா ஒரு பாக்கெட் புக்கை ஆட்டி ஆட்டி காண்பித்து தகிடுதத்தம் செய்பவர்கள் தானாக காணாமல் போய்விடுவார்கள். 2047 முழு சுதந்திரம் கிடைக்க வேண்டும்