உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சபாநாயகருக்கு பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வாழ்த்து

சபாநாயகருக்கு பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வாழ்த்து

புதுடில்லி: சபாநாயகராக தேர்வான ஓம் பிர்லாவுக்கு பிரதமர் மோடி, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

தேர்வு

18 வது லோக்சபாவின் சபாநாயகராக பா.ஜ.,வைச் சேர்ந்த ஓம் பிர்லா தேர்வானார். 2வது முறையாக இந்த பதவிக்கு அவர் தேர்வு செய்யப்பட்டார். அவரை பிரதமர் மோடியும், எதிர்க்கட்சி தலைவர் ராகுலும் இணைந்து அழைத்துச் சென்று இருக்கையில் அமர வைத்து கைகுலுக்கி வாழ்த்தினர். பிறகு இருவரும் ஓம் பிர்லாவை வாழ்த்தி பேசினர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=k47emel6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

நம்பிக்கை

பிரதமர் மோடி பேசியதாவது: 2வது முறை சபாநாயகராக தேர்வாகி ஓம் பிர்லா சாதனை படைத்து உள்ளார். காங்., கட்சியின் பல்ராம் ஜாக்கருக்கு பிறகு 2வது முறை தேர்வாகி உள்ளார். சபாநாயகர் பணி கடினமானது என்றாலும்,நீங்கள் தேர்வு செய்யப்பட்டது எங்களுக்கு மகிழ்ச்சி. எதிர்காலத்திலும் எங்களை வழிநடத்த உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளோம்.லோக்சபாவை எப்படி கையாள வேண்டும் என அவருக்கு தெரியும். பல்வேறு முன்னெடுப்புகளுக்கு முன்னுதாரணமாக இருந்துள்ளார். 17 வது லோக்சபாவில் பல்வேறு சட்ட முன்வடிவுகள் நிறைவேற்றப்பட்டன. 3ம் பாலினத்தவர் உரிமைகள் பாதுகாப்பு மசோதா, 3 புதிய குற்றவியல் நடைமுறை மசோதா ஆகியவை நிறைவேற்றப்பட்டன.18 வது லோக்சபா அடுத்தடுத்து சாதனை படைத்து வருகிறது. வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி நாடு சரியான திசையில் பயணித்து கொண்டுள்ளது. நாட்டின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற இந்த அவை உறுதுணையாக இருக்கும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

ராகுல் வாழ்த்து

எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேசியதாவது: சபாநாயகரின் அவை பணிகளுக்கு உறுதுணையாக இருப்போம். மக்கள் குரல் இங்கு ஒலிக்க அனுமதிப்பார் என்று நம்புகிறோம். இந்த அவை எப்படி செயல்படுகிறது என்பதைக் காட்டிலும், மக்களுக்கான குரலை எப்படி அனுமதிக்கிறது என்பதே முக்கியம். அரசுக்கு அதிகாரம் இருந்தாலும், மக்களின் குரலாக எதிர்க்கட்சிகள் இருக்கின்றன. இவ்வாறு ராகுல் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Sivakumar
ஜூன் 26, 2024 17:38

2012 -2014 காலத்தில் பிஜேபி எப்படிப்பட்ட எதிர்க்கட்சியாக இருந்ததோ, அதேயே எதிர்பார்ப்பதுதான் நியாயம். தங்கள் முறை வரும்போது பொறுப்பற்ற அரசியல் செய்த்துவிட்டு இப்போது எதிர்க்கட்சி தங்களைவிட பவ்வியமாக நடக்கவேண்டும் என எதிர்பார்ப்பது அதிக ஆசை


Rengaraj
ஜூன் 26, 2024 13:49

ஒரு முன்மாதிரியாக இந்த முறை தேர்ந்தேடுக்கப்பட்ட லோக்சபா உறுப்பினர்கள் செயல்படவேண்டும். கூச்சல் குழப்பம் இல்லாமல் அனைவரும் பேச வேண்டும். சபையில் கண்ணியம் காக்கவேண்டும். கத்தி கத்தி பேசுவதால் எந்தப்பிரயோஜனமும் இல்லை. உயர் நீதிமன்றத்தில் அல்லது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி முன்னால் இப்படி உரக்கப்பேசுவார்களா? அங்கே அடக்கி வாசிக்கவில்லை என்றால் கோர்ட் அவமதிப்பு என்று சிறைக்கு செல்ல நேரிடும். பாராளுமன்றத்திலோ சட்டமன்றத்திலோ கத்தி கத்தி பேசி கூச்சல் போட்டால் அது மக்கள் மன்றத்தை அவமதிப்பு செய்ததாக கருதவேண்டாமா ? கூச்சல் போட்டால் சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகளையும் சிறைக்கு அனுப்பவேண்டும். மக்கள் பிரநிதித்துவ சட்டத்தில் இதற்கென்று சட்ட உட்பிரிவுகள் மாறுதல் செய்யப்படவேண்டும்.


Ms Mahadevan Mahadevan
ஜூன் 26, 2024 13:10

எதிர் கட்சிகள் கண்ணியத்துடமும் ஆளும் கட்சி கணியத்துடனும் பொறுப்புடனும் நடக்க வேண்டும்


Tc Raman
ஜூன் 26, 2024 13:02

உதயநிதி வாழ்க.. ஜெய் பலஸ்தீன்.. இதெல்லாம் மக்கள் குரலை ராகுல்? கொத்தடிமைகள் குரல் மக்களுக்காக ஒளிக்காமல் தங்கள் எஜமானர்களுக்காக ஒலிக்கிறதே? இது சபையின் கண்ணியத்தை கெடுக்கிறதே


Mohan
ஜூன் 26, 2024 12:53

லோக்சபா வில் நாகரிகத்துடன் கண்ணியமாக இருந்து பொறுப்பான எதிர்கட்சியாக இண்டி கூட்டணி செயல் பட வேண்டும். எதிர்ப்பை வாய்மொழியாக பேச்சில் வெளிப்படுத்தினால், பார்லிமெண்ட் சபை குறிப்புகளில் இடம் பெறும் போது எதிர்கட்சியினரின் நிலைப்பாட்டுக்கு சட்டப்படியான அங்கீகாரம் கிடைக்கும். ராகுல் காந்தி அவர்கள் தயவு கூர்ந்து பொறுமை காத்து மோடியும் மற்றவர்களும் அளவுக்கதிகமான தன்னம்பிக்கையால் தவறு செய்ய அனுமதியுங்கள். ""லா ஆப் ஆவரேஜஸின்""படி தவறு செய்வார்கள். அப்பொழுது அவர்களது ஆட்சிக்கு திரை விழும். அதை விட்டு சும்மா சும்மா கத்தி, கூச்சலிட்டோ, வெளிநடப்பெ செய்தோ உங்க பேரைக் கெடுத்துக் கொண்டால்...அடுத்த வாய்ப்பும், கை நழுவி விடும்...


அப்புசாமி
ஜூன் 26, 2024 12:33

மக்களின் எதிர்பார்ப்புகளை இனிமே சபாநாயகர் நிறைவேற்றுவாராம். பாஞ்சிலட்சம் சபாநாயகர் போட்டுருவாரு.


hari
ஜூன் 26, 2024 14:03

பாஞ்சு லட்ச புலம்பல் கேசோ......


பேசும் தமிழன்
ஜூன் 26, 2024 19:12

அதனால் தான் இந்தி படிக்க சொல்கிறார்கள்... .அர்த்தம் தெரியாமல் உளற வேண்டியது.


Siva Rama Krishnanan
ஜூன் 26, 2024 12:29

ஓம் பிர்லா மென்மையான அதே சமயம் உறுதியான நிலைப்பாடு உள்ளவர் அதே மாதிரி துணை சபாநாயகராக எதிர் கட்சியில் உள்ளவர் நியமிக்கப்பட்டால் ஜனநாயக பண்பாக இருக்கும்


Sankar Ramu
ஜூன் 26, 2024 15:56

சரியா வராது. இப்பயே ஓவரா கத்தும் எதிர்கட்சி இன்னும் அதிகம் கூச்சளிடும். ஐந்து வருடம் வீணாக கூடாது.


r ravichandran
ஜூன் 26, 2024 12:22

சபாநாயகர் தேர்தலில் இந்தி கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் படு தோல்வி.


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ