உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாடு முழுவதும் புதுப்பித்த 103 ரயில் நிலையங்களை திறந்தார் பிரதமர் மோடி!

நாடு முழுவதும் புதுப்பித்த 103 ரயில் நிலையங்களை திறந்தார் பிரதமர் மோடி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக புதுப்பிக்கப்பட்ட 103 ரயில் நிலையங்களை, இன்று (மே 22) பிரதமர் மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக திறந்து வைத்தார்.ரயில்வேயில், 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ், 508 ரயில் நிலையங்களை, 24,470 கோடி ரூபாயில் மேம்படுத்தும் பணிகள் ஓராண்டாக நடந்து வருகின்றன. தெற்கு ரயில்வேயில், 40க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4nrd2ai5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நாடு முழுதும் பணிகள் நிறைவடைந்த 103 ரயில் நிலையங்களை, பிரதமர் மோடி டில்லியில் இருந்து, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக இன்று திறந்து வைத்தார். ராஜஸ்தான் மாநிலம், பிகானீர் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில், பிகானீர்-மும்பை விரைவு ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில்...!

அதன்படி, தெற்கு ரயில்வேயில், சென்னை பரங்கி மலை, சிதம்பரம், மன்னார்குடி, ஸ்ரீரங்கம், விருத்தாசலம், திருவண்ணாமலை, போளூர், கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி ஆகிய 9 ரயில் நிலையங்கள் திறக்கப்பட்டன.

மல்டி லெவல் பார்க்கிங்

இன்று திறக்கப்பட்ட ரயில் நிலையங்களில், லிப்ட், நடை மேம்பாலம், கூடுதல் நடைமேடை, பயணியர் காத்திருப்பு அறைகள், நுழைவாயில்கள் சீரமைப்பு, எஸ்கலேட்டர்கள், மல்டி லெவல் பார்க்கிங், 'சிசிடிவி' கேமரா உள்ளிட்ட வசதிகள் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

R S BALA
மே 22, 2025 18:52

தயவு செய்து அனைத்து வழித்தடங்களிலும் அதிக தொடர்வண்டிகள் அறிமுகப் படுத்துங்கள் கடும் பற்றாக்குறை நிலவுகிறது 365 நாட்களும் இடம் கிடைப்பதில்லை..


அப்பாவி
மே 22, 2025 17:37

ரயில்வே காண்டிராக்டர் காட்டில் பண மழை. நல்லாயிருந்த டேசன்களை கொஞ்சம் முகப்பை உடைச்சி உட்டு திரும்ப பூசியிருக்காங்க.


chennai sivakumar
மே 22, 2025 17:11

எவ்வளவு காலம் பளபளப்புடன் இருக்கும்???


பாமரன்
மே 22, 2025 15:12

என்னாது... சீரங்கம் சேம்பரம் பரங்கி மலை டேஷன்லாம் ஒலகத்தரமாகிடிச்சா... அட அப்ரசண்டிகளா டிங்கரிங் பெயிண்டிங் கூட முழுசா செய்யக்கூடாதா... எதாவது பகோடா திட்டறதுன்னா அந்த டேஷன்ல ஒன்னையாவது பார்த்ததுட்டு செய்யனும்... டீலா...?? பெரிய ஜி சீக்கிரம் பிகார் தேர்தல் பிரச்சாரம் செய்ய டெலிப்ராம்ப்டர ரெடி பண்ணி அனுப்பி வைங்க...


vivek
மே 22, 2025 20:56

கேடுகெட்ட பாமர அயோக்கிய கருத்தா


deenadayalan gr
மே 22, 2025 15:01

இந்த மேம்படுத்தப்பட்ட வசதிகளை மற்ற ரயில் நிலையங்களுக்கும் விரிவு படுத்த வேண்டும்.


RAAJ68
மே 22, 2025 14:16

பரங்கிமலை ரயில் நிலையத்தில் இன்னும் பணிகள் முடியவில்லை. புதியதாக கட்டப்பட்டுள்ள நடை மேம்பாலம் மெட்ரோ ரயில் நிலையத்துடன் இணைக்கிறது இது வரவேற்க த்தக்கது. ஆனால் தெற்கு புறத்திலிருந்து இந்த நடை மேம்பாலத்தை அடைவதற்கு வழி சரியாக இல்லை. பாதுகாப்பும் குறைபாடாக உள்ளது இதை சரி செய்ய வேண்டும்.


RAJ
மே 22, 2025 14:15

நாற்றம் அடிக்கும் ரயில் பெட்டிகள் கழிவறைகள் துருப்பிடித்த ஜன்னல் கம்பிகள் அழுக்கு பிடித்த ரயில் பெட்டிகள் இவைகளின் மீது கவனம் செலுத்தி புதியதாக போடவும் குறிப்பிட்ட தடங்களில் ஓடும் ரயில்கள் மிகவும் கேவலமாக உள்ளன.


rajan
மே 22, 2025 13:15

in srirangam mostly elderly persons are living and they are put into hardship whlie alighting with luggage as no lift or esclator is available.


Ramesh Sargam
மே 22, 2025 12:50

வாழ்த்துக்கள். கூடவே நமது ரயில்களின் தூய்மைக்கும் கொஞ்சம் கவனம் கொடுங்கள். ரயில்களில் கழிவறை அடைப்பு, குழாயில் தண்ணீர் வராமல் இருப்பது, மோசமான உணவு போன்ற அவலங்களுக்கும் ஒரு நிரந்தர முடிவு காணுங்கள். Senior Citizen Concession மீண்டும் அறிமுகப்படுத்துங்கள். நன்றி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை