உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உலகின் எந்த மூலையில் இருந்தாலும்... பீகாரில் பிரதமர் மோடி ஆவேசம்!

உலகின் எந்த மூலையில் இருந்தாலும்... பீகாரில் பிரதமர் மோடி ஆவேசம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: ''உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பயங்கரவாதிகளை வேட்டையாடுவோம்'' என பீஹாரில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உறுதி அளித்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wy6wwrc7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பீஹாரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: கார்கில் முதல் குமரி வரை வாழும் மக்கள் துக்கப்படுகிறோம். பஹல்காம் தாக்குதலால் நாடே கொந்தளிக்கிறது. பயங்கரவாதிகளை கட்டாயம் தண்டிப்போம். நாட்டில் பயங்கரவாதத்தை மொத்தமாக வேரறுப்போம். இந்த துயரமான நேரத்தில் எங்களுடன் துணை நிற்கும் பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு நன்றி.

உரிய தண்டனை

காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக பயங்கரவாதிகளுக்கு கனவிலும் நினைத்திராத அளவுக்கு தண்டனை கொடுக்கப்படும். பயங்கரவாத தாக்குதலால் நாடு முழுவதும் மக்கள் சோகத்துடனும், வலியுடனும் உள்ளார்கள். பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் நாங்கள் துணை நிற்கிறோம். பயங்கரவாதிகள் ஒவ்வொருவரையும், அவர்களுக்கு உதவியவர்களையும் இந்தியா கண்டறியும்; அவர்களது செயலுக்கு உரிய தண்டனை வழங்கியே தீரும்.

வேட்டையாடுவோம்

பயங்கரவாத தாக்குதலால் இந்தியா துவண்டு போகாது. அவர்கள் கனவிலும் நினைத்திராத தண்டனை கொடுக்கப்படும். காஷ்மீரில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் கண்டுபிடித்து வேட்டையாடுவோம். இன்று பீஹார் மண்ணில் இருந்து இந்த உலகத்துக்கு சொல்கிறேன். பயங்கரவாதிகள் மண்ணோடு மண்ணாகும் நேரம் வந்துவிட்டது. பயங்கரவாதிகள் இருந்த இடம் தெரியாமல் ஆக்கிவிடுவோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

மவுன அஞ்சலி

பீஹார் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பலியானோருக்கு பிரதமர் மோடி மவுன அஞ்சலி செலுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

ramesh
ஏப் 29, 2025 10:13

தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி ஒருவாரம் ஆகிவிட்டது .எந்த அதிரடி நடவடிக்கையும் இஸ்ரேல் போல அதிரடி வாடிக்கை எடுத்தால் மட்டுமே முடியும் .இஸ்ரேல் க்கு நாட்டப்பட்டு இருந்தால் மட்டும் போதாது athai போன்ற அதிரடி நடவடிக்கை தேவை


abdulrahim
ஏப் 24, 2025 17:45

அது என்ன உன் வீராவேச பேச்சு இன்று பிஹாரில் பேச ஏற்பாடு ? ஓஹோ அங்குதான் சில மாதங்களில் தேர்தலா


nsrp
ஏப் 24, 2025 20:04

நீங்கெல்லாம் திருந்தவே மாட்டீங்களா


V.Mohan
ஏப் 24, 2025 17:40

நாட்டின் எல்லைப்புறங்களில், வாழும் நம் மக்கள் எந்த நேரம் எது நடக்கும் என தெரியாமல் வாழ்கின்ற சிரமத்தை புரிந்து கொள்ள தமிழ்நாடு கர்நாடகா போன்ற மாநிலங்களில் வாய்ப்பே இல்லை. ஆனாலும் இங்குள்ள எதிரிக்கட்சிகளின் தலைவர்கள். முக்கியமாக திருமா அவர்கள் உளவுத்துறையின் தோல்வி, அரசின் பாதுகாப்பு குறைபாடு என திருவாய் மலர்ந்தது அவரது அதி மேதாவித்தனத்தைக் காட்டுகிறது. காஷ்மீர் வந்துள்ள சுற்றுலாவாசிகள், பாதுகாப்பு படையினர் அதிகம் கண்களில் பட்டால் சோர்வடைவர். மலையிலிருந்து தீவிரவாதிகள் வாகனங்கள் தடை செய்யப்பட்ட பகுதிக்குள், ஊடுருவி ஓடி வந்து சரமாரியாக சுட்டுவிட்டு தப்பியுள்ளது. புதிய வகையான கொலைவெறித் தாக்குதல் ஆகும் எனவே அதற்கு பதிலடி தருவது ரோஷமுள்ள அரசின் கடமை. அதை இந்த அரசு செய்யும். நாம் அதற்கு துணை நிற்கவேண்டுமே ஒழிய திட்டக்கூடாது.


spr
ஏப் 24, 2025 17:35

மேடைப் பேச்சு அரசியல்வியாதி செயலாற்ற மாட்டார் - அதிக விளம்பரம் தேவையில்லை இஸ்ரேல் போல அடக்கமாகச் செயலாற்ற வேண்டும் இதுவரையில் இஸ்லாமிய அமைப்புக்கள் எதுவுமே இந்த பயங்கர வாதத்தைக் கண்டிக்கவில்லை என்பதனை அறியவும் பயங்கர வாதத்தை எந்த மதமும் ஆதரிக்கக்கூடாது.


ashok
ஏப் 24, 2025 16:48

This kind of thing will happen when the election comes.


venugopal s
ஏப் 24, 2025 16:46

வெறும் வாய்ப்பேச்சால் எந்த பலனும் இல்லை, செயலில் காண்பியுங்கள்!


Varadarajan Nagarajan
ஏப் 24, 2025 15:51

நெஞ்சு வலிக்கின்றது. துக்கம் தொண்டையை அடைகின்றது. கண்களில் நீர் வழிகின்றது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எப்படி ஆறுதல்சொல்வதென்று தெரியவில்லை. இதுநாள்வரை தீவிரவாத தாக்குதல்களில் அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இம்முறை வேறுவிதமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அது முஸ்லீம் அல்லாத இந்துக்களைமட்டும் கண்டறிந்து. எனவே இது மத தீவிரவாதம். உடலால் இந்தியனாகவும் உள்ளத்தால் அந்நியனாகவும் இருக்கும் பலர் இதுபோன்ற செயல்களுக்கு அனுதாபிகளாக உள்ளனர். அவர்களும் தண்டிக்கப்படவேண்டியவர்களே. உலக நாடுகள் பலவும் இதுபோன்ற தாக்குதல்களில் பாதிக்கப்பட்டுள்ளன. அவர்கள் பொங்கியெந்துள்ளனர். அதுபோல் நமது நாடும் செயலில் இறங்கவேண்டும்.


Karthik
ஏப் 24, 2025 15:47

We support India - Army. We support India - Army.


Mettai* Tamil
ஏப் 24, 2025 15:33

உலகின் எந்த மூலையில் தீவிரவாதம் இருந்தாலும் அழிக்கப்படவேண்டும் ...மோடிஜி யின் கரங்களை வலுப்படுத்துவோம் ....


KayD
ஏப் 24, 2025 15:09

சும்மா இருந்த இஸ்ரேல் கிட்ட vaal aatina hamas ippo vaal அறுந்து ஒட ஒளிய இடம் இல்லாம இருக்கு.. இப்போ அதே கதையா சும்மா இருந்த இந்தியா கிட்ட vaal aatina vaal illai எல்லாத்தையும் இழக்கிற maathiri செய் து ஒரு lesson எடுக்கணும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை