உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மீண்டும் பிரதமர் மோடி ஆட்சி எதிரொலி: புதிய உச்சம் தொட்ட பங்குச்சந்தைகள்

மீண்டும் பிரதமர் மோடி ஆட்சி எதிரொலி: புதிய உச்சம் தொட்ட பங்குச்சந்தைகள்

மும்பை: பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 3வது முறையாக ஆட்சி அமைப்பது உறுதியான நிலையில், இன்று (ஜூன் 7) தே.ஜ., கூட்டணியின் பார்லி., குழு தலைவராகவும் பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டார். இதன் எதிரொலியாக பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தை எட்டியது.லோக்சபா தேர்தல் முடிந்து பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து 3வது முறையாக பெரும்பான்மையை பெற்று ஆட்சியமைக்க இருக்கிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பா.ஜ., ஆட்சியே தொடரும் என வந்ததால், தேர்தல் முடிவுக்கு முன்னதாக உள்நாட்டு பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டன. ஓட்டு எண்ணிக்கையின்போது பா.ஜ.,வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் பங்குச்சந்தைகள் சற்று வீழ்ச்சியை சந்தித்தன. பின்னர் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பிரதமராக மீண்டும் மோடியே தொடர்வது உறுதியானது.மத்தியில் ஆட்சியில் நரேந்திர மோடி நீடிப்பதால் உற்சாகமடைந்துள்ள உள்நாட்டு பங்குச்சந்தைகள் தொடர்ந்து ஏற்றத்தை கண்டுவருகின்றன. இன்று தே.ஜ., கூட்டணியின் பார்லி., குழு தலைவராகவும் பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டார். அத்துடன் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து 3வது முறையாக ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளார். இதனையடுத்து காலையில் சென்செக்ஸ் குறியீடு 75,074 புள்ளிகளுடன் துவங்கிய வர்த்தகம், மாலை 3:10 மணியளவில் 76,752.33 புள்ளிகளாக புதிய உச்சத்தை எட்டியது.இன்று வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,618.85 புள்ளிகள் அதிகரித்து 76,693.36 ஆகவும், நிப்டி 468.75 புள்ளிகள் உயர்ந்து 23,290.15 புள்ளிகளாகவும் வர்த்தகமாகின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Kasimani Baskaran
ஜூன் 07, 2024 18:23

நாயுடுவுக்கும், நிதீஷுக்கும் மோடியிடம் மாற்று ஏற்பாடு இருப்பதை முதலீட்டாளர்கள் நம்புகிறார்கள். மோடியும் அமித்ஷாவும் அவ்வளவு எளிதாக கையாளப்படக்கூடிய நம்பர்கள் அல்லர்.


thiruvazhimaruban kuttalampillai
ஜூன் 07, 2024 18:05

அரசியல் கோமாளி பப்பு ராகுல் பங்கு சந்தை தொடர்பாக மோடிஜி மீது பழி சுமர்த்திற்கு மான நஷ்ட ஈடு வழக்கு போட வேண்டும்.பி ஜே பி கட்சி.


சோலை பார்த்தி
ஜூன் 07, 2024 17:41

ஒருத்தர் exit boll ல செயற்கையாக பங்குச்சந்தை உயர்த்தி இந்தியர்களுக்கு அதிகபட்சமாக இழப்பை ஏற்படுத்தியதாக புலம்பிய திருவாளர் பப்பு இப்போ என்ன சொல்ல போற பா


அதெல்லாம் முடியாது
ஜூன் 07, 2024 17:24

பப்பு பிரதமர்னு சொன்னதும் பங்கு சந்தை அதல பாதாளத்து போச்சு உடனே மோடி தான் பிரதமர்னு தெரிஞ்ச உடனே பின்னி பெடல் எடுத்துச்சு பாருங்க முதலீட்டாளர்கள் மோடியை நம்பித்தான் இன்வெஸ்ட் பண்ராங்க


சோலை பார்த்தி
ஜூன் 07, 2024 22:14

நிஜம். . .உண்மையான கருத்து... பப்புனா கொள்ளை கும்பல் தான....


Lion Drsekar
ஜூன் 07, 2024 17:19

இந்த உச்சம் என்றாலே நம் நினைவுக்கு வருவது ஜனநாயகத்தைக் காக்க புதிதாக அமைக்கப்பட்டுள்ள நவீன ஜனநாயக அஷ்டதிக் பாலகர்கள் நினைவுதான் வருகிறது . வந்தே மாதரம்


enkeyem
ஜூன் 07, 2024 16:58

மோடியின் ஆட்சி மீது பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு அவ்வளவு நம்பிக்கை


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ