உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராணி வேலு நாச்சியாரை நினைவுகூர்ந்த பிரதமர்

ராணி வேலு நாச்சியாரை நினைவுகூர்ந்த பிரதமர்

புதுடில்லி:ஆங்கிலேயர்களுக்கு எதிராக படைகளை திரட்டி போரிட்ட ராணி வேலுநாச்சியாரின் பிறந்த தினமான நேற்று, அவரை நினைவுகூர்ந்து பிரதமர் மோடி அறிக்கை வெளியிட்டார்.இதுகுறித்து பிரதமர் தன் 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வீரமங்கை ராணி வேலு நாச்சியாரை அவரது பிறந்தநாளில் நினைவுகூர்கிறேன். காலனித்துவ ஆட்சிக்கு எதிராக வீரப் போராட்டத்தை நடத்தியவர் அவர். இணையற்ற வீரத்தையும், புத்திசாலித்தனத்தையும் களத்தில் காட்டினார்.அவருக்கு பின் வந்த தலைமுறையினரை ஒடுக்குமுறைக்கு எதிராக நிற்கவும், சுதந்திரத்திற்காகப் போராடவும் துாண்டினார். பெண்கள் முன்னேற்றத்திலும், அவரது பங்கு பாராட்டப்படுகிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை