உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கும்பமேளாவில் இன்று புனித நீராடுகிறார் பிரதமர்

கும்பமேளாவில் இன்று புனித நீராடுகிறார் பிரதமர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பிரயாக்ராஜ்: உ.பி., மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் இன்று (பிப்.,05) காலை 11 மணிக்கு பிரதமர் மோடி புனித நீராடுகிறார்.அதிகாரிகள் வெளியிட்டுள்ள அட்டவணையின்படி, பிரதமர் மோடி காலை 10:00 மணிக்கு பிரயாக்ராஜ் விமான நிலையத்தில் தரையிறங்குவார், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நைனியில் உள்ள டில்லி பப்ளிக் பள்ளி மைதானத்தை அடைவார். காலை 10:45 மணிக்கு, அவர் அரேல் காட் சென்றடைவார், பின்னர் சங்கமத்திற்கு படகு சவாரி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காலை 11:00 மணி முதல் 11:30 மணி வரை, மோடி சுமார் அரை மணி நேரம் கும்பமேளா நிகழ்வில் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.144 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் மஹா கும்ப மேளா, ஏற்கனவே நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மற்றும் உலகம் முழுவதிலிருந்து கோடிக்கணக்கான பக்தர்களை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

ராஜா
பிப் 05, 2025 16:48

நீங்கள் புனித நீராடுவது இருக்கட்டும். நாட்டில் விலைவாசி பற்றி கொஞ்சமாவது கவலை உள்ளதா. உங்கள் நிதி அமைச்சர் சமையல் எண்ணெய் எல்லாவற்றையும் லிட்டருக்கு 20 ரூபாய் ஏத்திபுட்டாங்க. துவரம் பருப்பு விலை 250 ரூபாய். கேஸ் விலை 811 ரூபாய் என்பது மிக மிக அதிகம் 500 ரூபாயாக குறைக்கலாம் இல்லையா கச்சா எண்ணெய் பல மடங்கு இலை இறங்கியும் கூட பெட்ரோல் விலை டீசல் விலை கேஸ் விலை எல்லாவற்றையும் குறைக்காமல் அப்படியே மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறீர்கள். உங்களுக்கு குடும்பம் கிடையாது விலைவாசி பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை ஆனால் பாமர மக்கள் துன்பம் அடைகிறார்கள்.


Rathinam Karthikeyan
பிப் 05, 2025 16:26

இவர் குளிக்க எத்தனை கோடி அரசு பணம் செலவு. அற்ப னுக்கு வாழ்வு வந்தால் இரத்த ராத்திரியில் குடை பிடிப்பான் எனும் பழமொழி தான் நினைவு வருகிறது.


ஆரூர் ரங்
பிப் 05, 2025 11:20

காங்கிரஸ் கவுல் பிராமண தலைவர் எப்போ கும்ப நீராடும் கடமையை செய்வார்? வாடிகன் கிளியரன்ஸ் வேணும்?


Indian
பிப் 05, 2025 16:47

சம்பந்தமே இல்லாத மட்டமான கருத்து


Velan Iyengaar
பிப் 05, 2025 08:57

நாள் கிழமை எப்படி தேர்வு செய்கிறார்கள் என்று பாருங்கள்.. மதஉணர்வை எப்படி எல்லாம் தூண்டுகிறார்கள் என்று பாருங்கள்.. ஒரு நேர்மையான நடுநிலை பிரதமராக இவர் எல்லா மத மக்களுக்குமான பிரதமராக நடந்துகொள்கிறாரா என்று பாருங்கள். இந்த ஆட்சிக்கு மற்றும் கட்சிக்கு கடவுள் தகுந்த தண்டனை தருவார் ..... நேர்மையமுமில்லாமல் நாடகபாணியில் பிழைப்பு நடத்தும் அவலத்தை பாருங்கள் ....


venugopal s
பிப் 04, 2025 22:34

புனிதமான நதி மாசடையப் போகிறதா?


guna
பிப் 05, 2025 07:59

இந்த உலகில் கடைசி ஈன பிறவி நீயாக தான் இருக்கும் திருட்டு திராவிட கொத்தடிமைமையே .....


Indian
பிப் 05, 2025 16:48

சங்கீ ஏன் இப்படி கொதிக்குது .


ஆரூர் ரங்
பிப் 04, 2025 21:58

பிரதமர நீராடுவதைப் பார்த்து பரவசமாகி ஓட்டு போடுமளவுக்கு டெல்லி மக்கள் முட்டா கள் இல்லை 90% கல்வி அறிவுள்ளவர்கள்தான். அவர் புனித நீராடுவது அவரது சொந்த விஷயம்.


அப்பாவி
பிப் 04, 2025 20:58

சுத்தி இருக்குற 18 பட்டியிலும் ஆட்களை அடிச்சு முடக்கி இவர் புனித நீராடுவார். ஏழைகளின் கஷ்டம் எதிர்க்கட்சிகளுக்கு புரியாதுன்னு அடிச்சு உடுவார்.


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 04, 2025 20:18

தில்லி தேர்தலில் ஓட்டுக்கள் குவியும் தாமரைக்கே .......


Narayanan Muthu
பிப் 05, 2025 09:36

மகாராஷ்டிரா பார்முலா தயாரா. 5 மணிக்கு மேல் கடைசி இரண்டு மணி நேரத்தில் எவ்வளவு வாக்கு பதியவேண்டும் என்று தேர்தல் ஆணையம் முடிவெடுத்து விட்டதா.


Narayanan Muthu
பிப் 04, 2025 20:00

தில்லி தேர்தல் நாளன்று ஒரு சிறப்பு காட்சி. தொலைக்காட்சிகள் மூலம் விளம்பரம். பொழப்பு. நேர்மையான தேர்தல் ஆணையமாக இருப்பின் இவரின் இந்த நாடகத்தை தொலைக்காட்சிகள் ஒளிபரப்ப கூடாது என தடை விதிக்க வேண்டும். கள்ள கூட்டணி தேர்தல் ஆணையம் இதை செய்யாது.


N Sasikumar Yadhav
பிப் 04, 2025 21:55

ஓட்டுப்பிச்சைக்காக திருத்தணியில் வேல் தூக்கியது உங்க எஜமான் கோபாலபுர திராவிட மாடல் தலிவரு . ஞாபகம் இருக்கிறதா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை