உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹா., முதல்வர் குறித்து பிரதமர் முடிவு செய்வார்: ஏக்நாத் ஷிண்டே

மஹா., முதல்வர் குறித்து பிரதமர் முடிவு செய்வார்: ஏக்நாத் ஷிண்டே

மும்பை: '' மஹாராஷ்டிராவின் புதிய முதல்வர் யார் என்பது குறித்து பிரதமர் மோடி முடிவு செய்வார். அவரது முடிவுக்கு கட்டுப்படுவோம்,'' என அம்மாநிலத்தின் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜ., கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. அதேநேரத்தில் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது ஏக்நாத் ஷிண்டே முதல்வராக உள்ள நிலையில், பா.ஜ., அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் அக்கட்சியைச் சேர்ந்த பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்பார் என தகவல் வெளியாகின. ஆனால், கூட்டணி கட்சிகள் பேசி ஒரு மித்த முடிவு எடுக்கப்படும் என பா.ஜ., கூறி வந்தது. இதனால், முதல்வர் யார் என்ற சஸ்பென்ஸ் நீடித்து வருகிறது.https://www.youtube.com/embed/SX4xEtZIQyUஇந்நிலையில், மும்பையில் நிருபர்களைச் சந்தித்த ஏக்நாத் ஷிண்டே கூறியதாவது: மக்கள் எங்களுக்கு ஆதரவு அளித்து உள்ளனர். நான் மக்களின் முதல்வர். மக்களுக்காக பணியாற்றினேன். இறுதிவரை மக்களுக்காக பணியாற்றுவேன். புகழுக்காக முதல்வர் ஆகவில்லை. நான் ஒரு தொண்டராகவே பணியாற்றினேன். முதல்வராக என்னை எப்போதும் கருதியது கிடையாது. 'சிஎம்' என்றால் சாமானிய மனிதன். இதனை கருத்தில் கொண்டு பணியாற்றினோம். நாம் மக்களுக்காக பணியாற்ற வேண்டும். நாங்கள் செயல்படுத்திய திட்டங்களுக்காக மக்கள் எங்களுக்கு ஓட்டுப் போட்டனர்.பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் எனக்கு எப்போதும் ஆதரவாக இருந்தனர். அவர்களுக்கு எனது நன்றி. இருவர் உடனும் தொலைபேசியில் பேசினேன். அப்போது, மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் எப்போதும் நான் தடையாக இருக்க மாட்டேன் என அவர்களிடம் உறுதி அளித்தேன்.மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் பிரதமர் மோடி எடுக்கும் முடிவை ஏற்றுக் கொள்வோம். தே.ஜ., கூட்டணி தலைவர் என்ற முறையில் முடிவு எடுக்கும்படி பிரதமரிடம் கூறியுள்ளேன். அவர் எங்கள் குடும்பத்தின் தலைவர். அவரின் முடிவை பா.ஜ.,வினர் எப்படி ஏற்றுக் கொள்கின்றனரோ, அதுபோல் நாங்களும் ஏற்றுக் கொள்வோம். என்னால் எந்த பிரச்னையும் இருக்காது என அவர்களிடம் உறுதி அளித்தேன். முதல்வராக யாரை கூட்டணி முடிவு செய்கிறதோ அவருக்கு ஆதரவு அளிப்போம். இவ்வாறு ஷிண்டே கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

பாமரன்
நவ 27, 2024 22:39

இந்த மேட்டர் பொருத்தவரை என் ஆதரவு பாஜகவுக்கே... டகல்பாஜி வேலையை பண்ணி இவ்ளோ கஷ்டப்பட்ட அவர்களுக்கு முதல்வர் பதவியை தராமல் இருப்பது தவறு.... இவ்ளோ நாள் அந்த பதவியை அனுபவிக்க விட்ட பாஜகாவின் பெருந்தன்மைக்கு மதிப்பு குடுத்து இப்போ அவனுவளை அனுபவிக்க விடுவது தான் ஷிண்டேக்கு நல்லது... இல்லைன்னா அந்த ப்ராஞ்சும் கூறு போடப்படும்... எப்படி சவுகரியம்...???


தத்வமசி
நவ 27, 2024 22:38

நல்லகாலம் பிஜேபியுடன் கூட்டணி வைத்தார். இல்லையென்றால் என்றோ இவர் காணாமல் போயிருப்பார். இதயத்தில் உன்னை பத்திரமாக வைத்துள்ளேன் வா தம்பி என்று மொத்தமாக ஓரம் கட்டி இருப்பார்கள். இப்போது தாக்கரே எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. தாக்கரே செய்தது துரோகமாக தெரியவில்லை, துரோகிக்கு பாடம் புகட்டியவர் துரோகியாம்... நல்லா இருக்கு கணக்கு.


கிஜன்
நவ 27, 2024 22:01

பேசாம உத்தவோட இருந்திருந்தா மரியாதையாவது மிஞ்சி இருக்கும் ... இவங்கள நம்பி வந்து இப்படி மாட்டிக்கிட்டிங்களே .... இவங்க ஏமாந்தது எங்க ஊரு ஈபீஸ் கிட்ட மட்டும் தான் ...


Ramesh Sargam
நவ 27, 2024 19:56

தேர்தலுக்கு முன்பு எதிர்கட்சியினருடன் சண்டை. தேர்தல் முடிந்தபிறகு யார் அடுத்த முதல்வர் என்று உள்ளுக்குள்ளேயே சண்டை. ஒரு வழியாக பதவியில் உட்கார்ந்த பிறகாவது சண்டை முற்றுப்பெருமா? ஹூ ஹூம்... மீண்டும் எதிர்கட்சியினருடன் சண்டை. அப்புறம் எதற்கு ஆட்சியில் அமருகிறார்கள்? தேர்தலுக்கு முன்பு வாக்காளர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை எப்பொழுது நிறைவேற்றுவார்கள்?


S.Martin Manoj
நவ 27, 2024 19:38

துரோகத்தின் பயன் அனுபவி ராசா


அப்பாவி
நவ 27, 2024 19:22

தில்லாலங்கடி செய்து சிவசேனாவை உடைத்ததை தவிர ஷிண்டேவுக்கு வேற ஒரு தகுதியும் கிடையாது.சீக்கிரம் இவரை பேக் செய்து அனுப்புங்கள்.


ஆரூர் ரங்
நவ 27, 2024 18:47

நீங்க இல்லாட்டியும் மற்ற கட்சி எம்எல்ஏக்களின் ஆதரவில் பிஜெபியால் ஆட்சியமைக்க முடியும் என்பதனால்தானே பின்வாங்குகிறீர்கள்? ஐயோ பாவம். வட போச்சே


Kulasekaran A
நவ 27, 2024 17:45

இனியும் பிடிவாதம் பிடித்தால் இவரது கட்சியும் பிளவு படும்


Dharmavaan
நவ 27, 2024 19:07

இவர் எங்கும் போக முடியாமல் திரிசங்கு சொர்கமாகி விடும்


mahalingamssva
நவ 27, 2024 17:25

Great


சமீபத்திய செய்தி