உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமரின் இயர்போன் "மக்கர்ராஜ்யசபாவில் பரபரப்பு

பிரதமரின் இயர்போன் "மக்கர்ராஜ்யசபாவில் பரபரப்பு

புதுடில்லி : பிரதமரின் இயர்போனில் ஏற்பட்ட கோளாறால், ராஜ்யசபாவில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ராஜ்யசபாவில் நேற்று கேள்வி நேரம் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த பிரதமர் மன்மோகன் சிங், அவை நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டிருந்தார். இந்தச் சூழலில், அவரது இயர்போனில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதனால், சிறிது தடுமாறிய பிரதமர் மன்மோகன் சிங், தன் இருக்கையிலிருந்து எழுந்தார். நிலைமையை உணர்ந்த அவரது அமைச்சரவை சகாக்கள், கி÷ஷார் சந்திர தேவ், ஆனந்த் சர்மா மற்றும் முரளி தியோரா ஆகியோர் அவரது அருகில் வந்து, இயர்போனை அகற்றினர். இதன்பின், அவர் அங்கிருந்து வெளியேறினார். ராஜ்யசபாவில், குறிப்பாக வியாழக்கிழமைகளில் நடைபெறும் கேள்வி நேரங்களில், பிரதமர் மன்மோகன் சிங் தவறாமல் பங்கெடுத்துக் கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ