உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கழிப்பறையில் கேமரா; தனியார் பள்ளி இயக்குனர் கைது

கழிப்பறையில் கேமரா; தனியார் பள்ளி இயக்குனர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நொய்டா, உத்தர பிரதேசத்தின் நொய்டாவில், 'ப்ளே ஸ்கூல்' ஒன்றில், ஆசிரியைகள் கழிப்பறையில் ரகசிய கேமரா வைத்து, மொபைல் போன் மற்றும் லேப்டாப் வழியாக பார்த்து வந்த பள்ளி இயக்குனரை, போலீசார் கைது செய்தனர். உ.பி.,யின் நொய்டாவில் உள்ள செக்டார் 70ல், 'லேர்ன் வித் பன்' என்ற, மழலையருக்கான தனியார் ப்ளே ஸ்கூல் இயங்கி வந்தது. இப்பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியை ஒருவர் கழிப்பறைக்கு சென்ற போது, அங்குள்ள பல்ப் ஒன்றில் வித்தியாசமான பொருள் இருப்பதை பார்த்தார். கூர்ந்து கவனித்ததில், அதில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்ததை அவர் கண்டுபிடித்தார். இது தொடர்பாக, பள்ளி காவலாளி வினோத்திடம் அவர் தெரியப்படுத்தினார். இது குறித்து, பள்ளி இயக்குனர் நவ்னீஷ் சஹாய், ஒருங்கிணைப்பாளர் நரூல் ஆகியோரிடமும் புகாரளித்தார். அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதில் சந்தேகமடைந்த ஆசிரியை, அப்பகுதி போலீசாரிடம் புகார் தெரிவித்தார். அவர்கள் நடத்திய விசாரணையில், கழிப்பறையில் ரகசிய கேமராவை பொருத்தியது நவ்னீஷ் சஹாய் என தெரிய வந்தது.ஆன்லைனில் 22,000 ரூபாய்க்கு கேமராவை வாங்கி, அதை கழிப்பறையில் உள்ள பல்பில் பொருத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது. பதிவு செய்யும் வசதி இல்லாத இந்த கேமரா வாயிலாக, ஆசிரியைகளை தன் மொபைல் போன் மற்றும் லேப்டாப் வாயிலாக பார்த்து வந்ததை சஹாய் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில், காவலாளி வினோத்துக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதால், அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல், ஏற்கனவே ஒருமுறை கழிப்பறையில் ரகசிய கேமரா வைத்தது கண்டுபிடிக்கப்பட்டு புகாரளித்தும், நிர்வாகிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்தப் பள்ளி ஆசிரியைகள் தெரிவித்தனர். விசாரணை நடந்து வருவதால், பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Azar Mufeen
டிச 19, 2024 11:42

பிஜேபி இன் தேசபக்தி மாடல்


Barakat Ali
டிச 19, 2024 08:41

அவனை அதே கழிப்பறையில் அடைத்து அங்கே சார்ஜிங் பாயிண்ட் கொடுத்து அவன் எடுத்த வீடியோக்களை தொடர்ந்து ஒரு மாசமாச்சும் பார்க்க வைக்கணும் .... சோறு தண்ணி இல்லாமே ... அங்கே ஃபிளஷ் பண்ண விடாமே ....


அப்பாவி
டிச 19, 2024 07:36

ஹரியானாவில் அவா ஆட்சி நடக்குது ஹைன்.


jayvee
டிச 19, 2024 08:39

உனக்கு முட்டிக்கு கீழதான் மூளை இருக்குன்னு அடிக்கடி நிரூபிக்கற


Sudha
டிச 19, 2024 07:14

இதுவே மும்பை சிவசேனாவாக இருந்தால் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி இருப்பார்கள். என்ன இருந்தாலும் டெல்லி மிக பொறுமையானது


jayvee
டிச 19, 2024 08:40

இது ஹரியானா தில்லி இல்லை..


Kasimani Baskaran
டிச 19, 2024 06:37

என்ன ஒரு வன்மம். இவனையெல்லாம் வெறும் ஜட்டியுடன் கழுதையில் ஏற்றி கரும்புள்ளி செம்புள்ளி குத்தி ஊர்வலம் அனுப்பவேண்டும்.


A P
டிச 19, 2024 07:29

நீங்கள் சொல்கிற அந்த உள்ளாடை கூட தேவையில்லை இவனுக்கு . வெறுமனே ஊர்வலம் விடணும் இந்த ராஸ்கலை. எல்லாவற்றிற்கும் அந்த வலைத்தள கண்றாவிகள் தான் காரணம்.


A.C.VALLIAPPAN
டிச 19, 2024 10:17

he is done very big crime but please note if you get chance you will watch . we dont how much dirt you have . he has to be hand over court of law and give necessary action. we should respect law of the land


நிக்கோல்தாம்சன்
டிச 19, 2024 05:42

என்ன ஒரு ஈனத்தனமான புத்தி


புதிய வீடியோ