உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாலஸ்தீன பையுடன் பிரியங்கா; பா.ஜ., தலைவர்கள் கடும் தாக்கு

பாலஸ்தீன பையுடன் பிரியங்கா; பா.ஜ., தலைவர்கள் கடும் தாக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : பாலஸ்தீன ஆதரவு பையுடன் பார்லிமென்டுக்கு வந்த காங்கிரஸ் எம்.பி., பிரியங்காவின் நடவடிக்கைக்கு, பா.ஜ., கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே போர் நடந்து வருகிறது. ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா உள்ளிட்டவை அடங்கியது பாலஸ்தீனம். இந்த போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக நம் நாடு உள்ளது. அதே நேரத்தில், இஸ்ரேல், பாலஸ்தீனம் என இரு நாடுகள் தீர்வுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளது.காங்கிரஸ் பொதுச்செயலரும், லோக்சபா எம்.பி.,யுமான பிரியங்கா, துவக்கத்தில் இருந்தே பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக கருத்துக்கள் தெரிவித்து வருகிறார்.நம் நாட்டுக்கான பாலஸ்தீன துாதரகத்தின் பொறுப்பு அதிகாரி அபேட் எல்ராஜெக் அபு ஜாசெர், பிரியங்காவை சமீபத்தில் சந்தித்தார். கேரள மாநிலம் வயநாடு லோக்சபா தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் வென்றதுக்கு வாழ்த்து தெரிவித்தார்.இந்நிலையில், பார்லிமென்டுக்கு நேற்று வந்த பிரியங்கா, கையில் ஒரு பையை வைத்திருந்தார். அதில் பாலஸ்தீனம் என்று அச்சிடப்பட்டு உள்ளது. மேலும், பாலஸ்தீனம் தொடர்பான சின்னங்களும் அதில் இடம்பெற்றுள்ளன.இதற்கு, பா.ஜ., கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பா.ஜ.,வின் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் அமித் மாள்வியா கூறியுள்ளதாவது:காங்கிரஸ் கட்சியினர், தங்களுடைய நீண்ட கால பிரச்னைகளுக்கு தீர்வு கிடைப்பதற்கு கடைசி வாய்ப்பாக பிரியங்காவை எதிர்பார்த்தனர். இந்த பார்லிமென்ட் கூட்டத்தொடர் முடிந்ததும், காங்கிரஸ்காரர்கள், இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்த வேண்டும். ராகுலைவிட மிகப்பெரிய பேரிடர் பிரியங்கா. பாலஸ்தீன ஆதரவு பை வைத்திருப்பதுதான், ஆதிக்கத்தை எதிர்ப்பது என்று அவர் நினைக்கிறார்; அது சரிதான். முஸ்லிம்களுக்கு இதைவிட வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்க முடியாது. காங்கிரஸ் தான், புதிய முஸ்லிம் லீக்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பா.ஜ., - எம்.பி., அனுராக் தாக்குர் கூறிஉள்ளதாவது:

கையில் பையை வைத்து, எவ்வளவு பெரிய கருத்தை அவர் தெரிவித்துள்ளார். ஆனால், வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடக்கும்போது அவர் மவுனமாகவே இருப்பார்.பார்லிமென்ட் என்பது, 140 கோடி இந்தியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இடம். மக்கள் பிரச்னையை பேசவிடாமல், பார்லிமென்டை காங்கிரஸ் முடக்கி வருகிறது. அதே நேரத்தில், பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவிக்கும். இதைவிட முட்டாள்தனமான விஷயம் இருக்க முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

Nandakumar Naidu.
டிச 17, 2024 12:42

இவளை விமானத்தில் ஏற்றி பரசுட்டில் பாலஸ்தீன நாட்டின் வான்பகுதியில் தள்ளி விடுங்கள். அங்கே போய் பிச்சை எடுக்கட்டும். தேச துரோக குடும்பம்.


Selliah Ravi Chandran
டிச 17, 2024 12:05

we have lots of problems. need to solve.


ram
டிச 17, 2024 12:03

ஹிந்து மக்கள் காங்கிரஸ் நிலைப்பாட்டினை புரிந்தால் சரி இல்லையென்றால் இந்த கேவலமான காங்கிரஸ் ஆட்கள் பதவிக்காக எது வேணாலும் செய்வார்கள்.


ram
டிச 17, 2024 12:03

பங்களாதேஷ் ஹிந்துக்களை அழிப்பதற்கு ஜார்ஜ் சோர்ஸ் மூலம் தூண்டிவிட்டு இங்கு முஸ்லீம் சப்போர்ட் கேவலமான இத்தாலி முஸ்லீம் congress வீட்டிற்கு நாட்டிற்கு கேடு. ஹிந்து மக்கள் காங்கிரஸ் நிலைப்பாட்டினை புரிந்தால் சரி இல்லையென்றால் இந்த கேவலமான காங்கிரஸ் ஆட்கள் பதவிக்காக எது வேணாலும் செய்வார்கள். நார்த் இந்தியன் ஹிந்து மக்கள் இந்த மோசமான காங்கிரஸ் பத்தி தெரிந்து கொண்டு ஓட ஓட விரட்டி அடிக்கிறார்கள்.


Anand
டிச 17, 2024 11:54

பாலஸ்தீனர்களுக்காகவே இவரோட உயிர் மூச்சு இருக்கும்போல. இவ்வளவு பாசமாக இருக்கும் இவர் பேசாமல் நேரிடையாக அங்கு சென்று கைங்கர்யம் செய்யலாமே, அதுவும் தற்போது தன்னோட படை பரிவாரங்களுடன் காசாவிற்கு சென்று நற்பணி செய்தால் மிக மிக நல்லது.... நம் நாட்டிற்கும் நல்லது நடந்தது போல் ஆகும்..


sugumar s
டிச 17, 2024 11:16

It is the not fault of priyanka. it is the fault of kerala people to elect such unscrupulous people to power.


Bahurudeen Ali Ahamed
டிச 17, 2024 10:56

பங்களாதேஷ் ஹிந்துக்களுக்காக நீங்கள் என்ன செய்தீர்கள், வெறும் அறிக்கை விடுவதைத்தவிர, இந்தியா இஸ்ரேலை நண்பனாக கருதுகிறது சரி, அதேநேரம் பாலஸ்தீனையும் தான் நண்பனாக கருதுகிறது, இந்தியா இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன் என்ற இருநாட்டு கொள்கைக்கு ஆதரவாக இருக்கிறது, ஆனால் இஸ்ரேல் அதை ஏற்கவில்லை, பிஜேபிக்கு காங்கிரசை ஏதாவது குறைசொல்லிக் கொண்டிருக்க வேண்டும் இப்பொழுது இது


mp.karur
டிச 17, 2024 15:33

மூர்கணுங்க எப்போதும் பிஜேபி யை குறை சொல்லி கொண்டே இருக்க வேண்டும் அதில் இந்த மூர்கனும் ஒருவன். பாலஸ்தீன் வாழ்க பாகிஸ்தான் வாழ்க என்று கூட கூவுவாண் இது போன்ற தேசத்துரோகி


rasaa
டிச 17, 2024 10:22

காந்தி குடும்பம் இந்த நாட்டின் சாபக்கேடு. காங்கிரஸ் கட்சி நாட்டிற்கு பேராபத்து. இரண்டையும் இந்த நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும். பின் தானாக இஸ்லாமிய தீவிரவாதம் தடுக்கப்படும்.


visu
டிச 17, 2024 10:01

வங்க தேச ஹிந்துக்களுக்கான பையை எடுத்து சென்றாரா அதெற்க்குள் என்ன பாலஸ்தீனம் சென்றுவிட்டார் மைனாரிட்டி வாக்கு வங்கி இழுக்கிறதா


angbu ganesh
டிச 17, 2024 09:51

இதுங்கள இன்னும் ஏன் இந்தியாவில வச்சிருக்காங்கன்னு தெரியல


சமீபத்திய செய்தி