உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரியங்கா கணவரின் சொத்து கணக்கு போலியானது: பா.ஜ., விமர்சனம்

பிரியங்கா கணவரின் சொத்து கணக்கு போலியானது: பா.ஜ., விமர்சனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : கேரளாவின் வயநாடு லோக்சபா தொகுதியில் போட்டியிடும் காங்., பொது செயலர் பிரியங்கா, நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தார்.தன் தனிப்பட்ட சொத்து விபரங்களுடன், கணவர் ராபர்ட் வாத்ராவின் சொத்து கணக்கையும் தாக்கல் செய்துள்ளார். பிரியங்காவிடம், ஹிமாச்சலில் உள்ள 5.63 கோடி ரூபாய் மதிப்பிலான பங்களா உட்பட 12 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.ஹிமாச்சலில் வெளியாட்கள் சொத்துக்கள் வாங்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் சோனியா குடும்பத்தினருக்காக சமரசம் செய்யப்பட்டுள்ளதாக பா.ஜ., குற்றஞ்சாட்டி உள்ளது.தன் கணவர் ராபர்ட் வாத்ராவிடம், 37.9 கோடி ரூபாய் அசையும் சொத்துக்களும், 27.64 கோடி ரூபாய்க்கு அசையா சொத்துக்களும் இருப்பதாக பிரியங்கா குறிப்பிட்டுள்ளார்.ஆனால், நில ஊழல் உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ராபர்ட் வாத்ரா, 75 கோடி ரூபாய் அளவுக்கு வரி செலுத்த வேண்டி உள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளதாக பா.ஜ., மூத்த தலைவர் கவுரவ் பாட்டியா குற்றஞ்சாட்டி உள்ளார். பிரியங்கா வெளியிட்டுள்ளது, அவரது குடும்பத்தினர் சம்பாதித்த ஊழல் சொத்துக்களின் ஒப்புதல் வாக்குமூலம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதற்கு காங்., தரப்பில் பதில் அளிக்கப்படாத நிலையில், ராபர்ட் வாத்ரா பதில் அளித்துள்ளார். அதில், 'எப்போதெல்லாம் உண்மையான பிரச்னைகளில் இருந்து மக்களை திசை திருப்ப பா.ஜ., முயற்சிக்கிறதோ அப்போதெல்லாம் என் பெயர் அடிபடும். மக்களுக்கு உண்மை தெரியும். எந்த விசாரணை அமைப்பையும் எதிர்கொள்ள நான் தயார்' என, குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Mettai* Tamil
அக் 25, 2024 14:38

வைகுண்டம் அவர்களே, ப்ரியங்கா அவர்களின் முன்னோர்களின் உழைப்பு, உயிர் தியாகம் அப்படின்னா... நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் அரசியல் சூழ்ச்சியால் சொந்த நாட்டை விட்டு வெளியேறி விடுதலைக்காக போராடியதை சொல்றின்கலா ? இல்லை இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபை படேல் அவர்களுக்கு வந்த ஆர்டர் படி எல்லா சமஸ்தானத்தையும் இந்தியாவுடன் இணைத்துவிட்டு, காஷ்மீர் மட்டும் இணைக்காமல் 75 வருசமாக காஷ்மீர் பூர்வகுடிகள் எந்த உரிமையும் இல்லாமல் அகதிகளாக இருந்ததையும் மற்றும் இந்த வருஷம் தான் ஓட்டுரிமையை பெற்றோம் என பெருமையாக சொன்னார்களே அதை சொல்றிங்களா ?


Anand
அக் 25, 2024 13:23

இவனே ஒரு போலி, இவன் போய் சேர்ந்த இத்தாலிய குடும்பம் அதைவிட போலி, கட்சியை பற்றி சொல்லவே வேண்டாம்....


செல்வேந்திரன்,அரியலூர்
அக் 25, 2024 14:22

படத்தில் இருக்கும் பிரியங்காவதேரா மூஞ்சிய மட்டும் குளோசப்ல பாத்தா எப்படி தெரியுது?


Rasheel
அக் 25, 2024 11:36

வருட வருமானம் 9 லக்ஷம் ரூபாய்? பல ஆயிரம் கோடி சொத்து உள்ள குடும்பம் இது என்னடா கேலி கூத்து?


nv
அக் 25, 2024 10:57

வடநாட்டில் வெள்ளம் வந்தது அப்போது இந்த குடும்பம் என்ன செய்து கொண்டிருந்தார்கள் ? அங்குள்ள இஸ்லாமியர்கள் சிந்திக்க வேண்டும் !!


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 25, 2024 10:09

வழக்குகளில் இருந்து தப்பிக்க பாஜகவுக்கு எப்படி அழுதார் என்று வாத்ரா மீடியாவைக் கூட்டியாவது சொல்லலாம் .....


Dharmavaan
அக் 25, 2024 10:02

இவன் திருடினானா இல்லையா என்று சொல்ல வேண்டும் சொத்து எவ்வளவு என்று சொல்ல வேண்டும் அதை விட்டு பிஜேபி பிரச்சனை செய்கிறது என்பது ஏமாற்று பேச்சு


M Ramachandran
அக் 25, 2024 10:01

தகிடு நித்தம் செய்யும் புழுகினி குடும்பம். பார்ப்போம் கேரளா மக்கள் புத்தி சாலிகளா இல்லை தள்ளாடும் நம்மூர் போலாவா என்று


வைகுண்டேஸ்வரன்
அக் 25, 2024 08:56

இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி தர முடியாது என்று ஆணவத்துடன் ஒன்றிய அமைச்சர்கள் சொல்லியதை பிஜேபி ஆதரவாளர்கள் மட்டும் மறைத்து / மறந்து விட்டார்கள்.


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 25, 2024 10:08

ஏற்கனவே யூ பி ஏ அரசு வகுத்த நிவாரண நிதிக்கான கொள்கைகளின் படி வயநாடு நிவாரணம் பெறத் தகுதியானது அல்ல... இதை மத்திய அரசு தெளிவாக விளங்கிவிட்டது ......


பாமரன்
அக் 25, 2024 11:49

தவறான கருத்து... இன்னும் சேதம் பற்றி கணக்கு எடுத்துட்டு இருக்கோம்னு தான் மத்திய அரசு கோர்ட்டில் சொல்லியிருக்கு...


Ganapathy
அக் 25, 2024 12:42

உன் தெலுங்கு தொளபதி முதல்வன் கள்ளக்குறிஞ்சி போக தயங்குவதேன்? வேங்கைவயல் போக கழிவதேன்?


Dharmavaan
அக் 25, 2024 18:00

திமுக திரட்டு கூட்டம் அதை கொள்ளை அடித்துவிடும் ன்றால் கொடுக்கவில்லை 400 கோடியோடு இதுவும் போய்விடும்


Dharmavaan
அக் 25, 2024 18:01

திமுக திரட்டு கூட்டம் அதை கொள்ளை அடித்துவிடும் என்றே கொடுக்கவில்லை 4000 கோடியோடு இதுவும் போய்விடும்


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 26, 2024 11:02

இன்னும் சேதம் பற்றி கணக்கு எடுத்துட்டு இருக்கோம்னு தான் மத்திய அரசு கோர்ட்டில் சொல்லியிருக்கு ... உண்மை .... இதுதான் அப்டேட் .....


பாமரன்
அக் 25, 2024 07:57

இந்த நியூஸின் நோக்கம் தெரிஞ்சதால எங்க காசி பாணியில் சொன்னால் கோர்ட்டில் போடட்டும்... ஆனால் இது எதிரி கட்சியின் மேட்டர்ங்கறதால அவரே மாத்தி கருத்து போட்டா கம்பெனி பொறுப்பல்ல


Nandakumar Naidu.
அக் 25, 2024 07:07

அவர்களின் குடும்பமே போலியானது. தேசவிரோதம் மற்றும் இந்து விரோத குடும்பம் நாட்டை விட்டு துரத்த வேண்டும். இவர்கள் நாட்டிற்கும் சமூகத்திற்கும் வீட்டிற்கும் கேடு.


வைகுண்டேஸ்வரன்
அக் 25, 2024 08:53

ப்ரியங்கா அவர்களின் முன்னோர்களின் உழைப்பிலும், உயிர் தியாகத்திலும் தான் இந்தியா ஒரு சிறந்த நாடாக உயர்ந்தது என்பது வரலாற்று உண்மை.


Barakat Ali
அக் 25, 2024 10:31

வைகுண்டேஸ்வரன் ..... How long will we hear stories of sacrifices made by Nehru-Gandhi families? சீனாவுக்கு இந்தியப் பகுதிகளை நேரு விட்டுக் கொடுத்த தியாகத்தைச் சொல்கிறீரா ? கச்சத்தீவை இந்திரா இலங்கைக்கு தூக்கிக் கொடுத்த தியாகத்தைச் சொல்கிறீரா ? நேர்மையைத் தியாகம் செய்து போபர்ஸ் ஊழலில் ராஜீவ் ஈடுபட்டதைச் சொல்கிறீரா? இந்திய கணவரைக் கொன்றார்கள் என்பதால் புலிகள் மீதான கோபத்தில் தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கைக்கு உதவிய சோனியா அம்மையாரின் தியாகத்தைச் சொல்கிறீரா? பிரிட்டிஷ் குடியுரிமையைத் துறக்க விரும்பாத ராகுலைச் சொல்கிறீரா? கணவரின் சொத்துக்கள் பற்றி குறிப்பிடாமல், தனது சொத்து விபரங்களையும் தவறாக தாக்கல் செய்த பிரியங்கா அம்மையாரின் தியாகத்தைச் சொல்கிறீரா ?


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
அக் 26, 2024 14:09

Barakat Ali எமெர்ஜென்சியை மறந்துட்டீங்களே. இந்திரா காந்தி அவர்கள் ராஜ் நாராயணன் இடம் தேர்தல் தோல்வி அடைந்தார் என்ற ஒரே காரணத்திற்காக எமெர்ஜென்சியை கொண்டு வந்து இந்திராவின் தவப் புதல்வனும் இந்திராவும் எமெர்ஜென்சியில் செய்த அட்டூழியத்தை சொல்லாமல் விட்டு விட்டீர்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை