உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சாலை திட்ட செலவில் முறைகேடு: சுங்கம் வசூலிக்க தொடரும் தடை

சாலை திட்ட செலவில் முறைகேடு: சுங்கம் வசூலிக்க தொடரும் தடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லி - -நொய்டா -விரைவு சாலையில் பயணியரிடம் சுங்க கட்டணம் வசூலிக்க, அலகாபாத் உயர் நீதிமன்றம் 2016ல் விதித்த தடை உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததுடன், இந்த சுங்கச்சாவடியை அதிகார துஷ்பிரயோகம் என கூறியது.டில்லியில் இருந்து நொய்டா செல்ல டி.என்.டி., எனப்படும் டில்லி - நொய்டா நேரடி விரைவு சாலை உள்ளது. 9.2 கி.மீ., துாரமுள்ள இந்த சாலையை, என்.டி.பி.சி.எல்., எனப்படும் நொய்டா டோல் பிரிட்ஜ் என்ற தனியார் நிறுவனம் அமைத்து, 2001ல் திறந்தது.இந்த சாலையை பயன்படுத்தும் வாகனங்களிடம் 2031 வரை சுங்க கட்டணம் வசூலிக்க, என்.டி.பி.சி.எல்., நிறுவனத்துக்கு நொய்டா ஆணையம் அனுமதி வழங்கி இருந்தது.

மேல்முறையீடு

அதிக அளவு சுங்க கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்தை நொய்டா குடியிருப்பாளர்கள் நலச்சங்கம் 2016ல் நாடியது. மனுவை விசாரித்த நீதிமன்றம் சுங்க கட்டணம் வசூலிக்க தடை விதித்தது.இந்த உத்தரவை எதிர்த்து, என்.டி.பி.சி.எல்., நிறுவனம் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. சுங்க கட்டணம் இல்லாததால், நிறுவனத்தின் நிதி நிலைமை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தது. இந்த வழக்கில் நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு தற்போது தீர்ப்பு வழங்கியது.

தேவையற்ற சுமை

அதில் என்.டி.பி.சி.எல்., நிறுவனம் குறித்த சி.ஏ.ஜி.,யின் அறிக்கையை மேற்கோள்காட்டி கூறியிருப்பதாவது: சாலை அமைத்த தனியார் நிறுவனம், வழக்கு செலவு, ஊழியர்களுக்கு வழங்கிய கார்ப்பரேட் பரிசு பொருட்களான தங்க நாணயம், இயக்குனரின் தனிப்பட்ட செலவு என மொத்தம் 45.72 கோடி ரூபாயை, திட்ட மதிப்பில் சேர்த்துள்ளனர். சுங்க கட்டணம் வசூலிக்க, 20 சதவீத நிரந்தர வருமானம் என்ற பார்முலா பயன்படுத்தப்பட்டிருப்பது எதார்த்ததிற்கு பொருந்தாத நியாயமற்ற ஒன்று. இதனால் பொது மக்களிடம் அதிக கட்டணம் வசூலித்து, தேவையற்ற சுமையை ஏற்றிஉள்ளனர். எனவே சுங்க கட்டணம் வசூலிக்க தடைவிதித்த அலகாபாத் நீதிமன்றத்தின் உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. இவ்வாறு தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 22, 2024 14:37

மொத்தத்தில் பொதுமக்களை சுரண்டும் சுங்க வசூல் நிறுவனங்கள் ....... துணைபோகும் அரசுகள் .......


GMM
டிச 22, 2024 11:43

2001ல் சாலை திறப்பு. 2031வரை கட்டணம் வசூலிக்க அனுமதி. 15 ஆண்டுகளுக்கு பின் 2016 ல் நல சங்கம் கட்டணம் அதிகம் என்று வழக்கு. தடை. சாலைக்கு பின் தான் குடியிருப்பு கட்டப்பட்டு இருக்கும்? CAG- அரசு அமைப்பு. ஆடிட் அறிக்கை சட்டமன்றத்தில் விவாதிக்கப்படும். கட்டணம் வசூலிக்க தடை என்றால், நிறுவனம் மறுத்தால் பராமரிப்பது யார்? கட்டணம் மதிப்பீடு செய்து தீர்ப்பில் பரிந்துரை செய்யலாம். தீர்ப்பில் தீர்வு தேவை. முதலீடு செய்த பின் வழக்கும், தடையும் கடனை அதிகரிக்கும். சில பராமரிப்பு சங்கங்கள் வாடகையில் பாதி, பராமரிப்பு கட்டணமாக வசூலிக்கும். குறைகள் நாடு முழுவதும் உள்ளன. அரசு தான் குறைக்க முடியும்.


சாண்டில்யன்
டிச 22, 2024 11:01

இங்கேயும் ஸ்ரீபெரும்புதூர் எட்டுவழி சாலை அமைக்க நில எடுப்பு செய்ததில் ஊழல் சாலை பராமரிக்கப் படவேயில்லையென்று சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு வந்து சாலை வரி பாதிதான் வசூலிக்கலாம் என்று தீர்ப்பு வந்ததே


தமிழன்
டிச 22, 2024 09:16

நான் எந்த கட்சியையும் சாராதவன் நாடு முழுவதும் உள்ள பல பகல் கொள்ளையை விட மோசமாக கொள்ளையடித்து மக்களின் ரத்தத்தை உறிஞ்சும் டோல்களை நீக்க யாராவது வழக்கு தொடுக்க வேண்டும் சாலைக்கு செலவு செய்ததை விடவும் வசூல் செய்யும் கால வரம்பு முடிந்தும் இன்னும் பல மடங்கு சுங்கம் வசூலித்துக் கொண்டிருக்கும் டோல்கள் பல உள்ளன இந்த நாட்டில் அவைகளை கண்டறிந்து மூட வேண்டும் சாலைகள் அமைக்க டோல் தேவைதான் ஆனால் அது நியாயமான வசூல் செய்வதாக இருக்க வேண்டும்


Bye Pass
டிச 22, 2024 19:13

டாஸ்மாஸ்க் நடத்த தெரிந்திருக்கும் அரசாங்கம் சாலைகள் அமைத்து நியாயமாக சுங்கவரி வசூலித்து முன்மாதிரியாக திகழலாம்


SVR
டிச 22, 2024 09:12

தனக்கு எல்லா சுதந்திரமும் வேண்டும் என்று நடந்து கொண்டு ...


mani
டிச 22, 2024 08:39

என்ன சட்டமோ! என்ன தீர்ப்போ!! அரசாங்கம் சாலை போட வக்கில்லாததனால்தானே தனியாரை கூப்பிட்டது.


GMM
டிச 22, 2024 08:06

நொய்டா விரைவு சாலை தனியார் நிறுவனம் அமைப்பு. அதிக சுங்க கட்டணம் என்று நல சங்கம் வழக்கு. எவ்வளவு கட்டணம் செலுத்த முடியும் என்று நல சங்கம் வழக்கில் கூறியிருக்க வேண்டும். கட்டணம் வசூலிக்க நீதிமன்றம் தடை என்றால், பராமரிப்பு செலவு யார் பொறுப்பு? CAG - தணிக்கை அரசு - வரவு செலவுக்கு மட்டும். நாட்டில் நீதிமன்றத்தை தணிக்கைக்கு உட்படுத்தலாம். தனியார் நிறுவனம் மீது அரசு தணிக்கை கூடாது. ?


SVR
டிச 22, 2024 09:09

ஜி எம் எம் அவர்களே, என் டி பி சி ல் நிறுவனம் தங்களுடைய எஸ்டிமேட்க்கல நல சங்கங்களின் ஒப்புதலை கேட்டா கட்டணத்தை நிர்ணயம் செய்தார்கள்? இல்லை. அப்படியென்றால் நல சங்கங்கள் எதற்கு பயனாளிகள் இவ்வளவு கட்டணம் தான் கொடுக்கமுடியும் என்று வழக்கில் சொல்வதற்கு? நாட்டின் அரசு கணக்குகளை சரி பார்க்கும் தணிக்கையாளர் கொடுத்த ரிப்போர்ட்ஐ பார்த்து உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இந்த ரிப்போர்ட் பொது சொத்து. இதை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளலாம். அதை தான் நல சங்கங்கள் செய்திருக்கின்றன. மற்றும் 20 விழுக்காடு நிரந்தர வருமானம் லாபம் என்பது அதிகப்படியான ஒன்று. அதைத்தான் உச்ச நீதி மன்றம் சரியில்லை என்று சொல்லி இருக்கிறது. சாலை பராமரிப்புக்கு உண்டான செலவை அவர்கள் சுங்க கட்டணத்தில் சேர்திருப்பர்கள். இதுதான் நிலவரம். நீதி மன்றங்கள் இருப்பதினால் சாதாரண மக்கள் பிழைத்து கொண்டிருக்கிறார்கள். எனக்கு தெரிந்த ஒருவர் ஒரு மாநிலத்தில் உள்ள ஒரு துறையை அதன் வேலையை செய்ய சொல்ல உயர் நீதி மன்றத்தை நாட வேண்டியிருந்தது. இது தான் இன்றைய நிலை. நாம் நாட்டு பாதுகாப்பை கருதி வாங்கப்பட்ட விமான விவகாரம் உச்ச நீதி மன்றம் செல்ல வில்லையா? தனியார் நிறுவனத்தின் வரவு செலவு கணக்குகளை நீதி மன்றம் சில சமயங்களில் தணிக்கை செய்ய வேண்டும். இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஏனென்றால் அந்த வேலையை உச்ச நீதி மன்றம் செய்துள்ளது. நீர் உமது கருத்தை மாற்றி கொள்ள இது ஒரு வாய்ப்பு.


அப்பாவி
டிச 22, 2024 07:33

ஊழல் ரோடு ரோடா பெருக்கெடுத்து ஓடுது. 2031 வரை கேரண்டீடு.


Kasimani Baskaran
டிச 22, 2024 06:30

உள்க்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தனியார் முதலீடுகளை பயன்படுத்தி குறிப்பிட்ட தரத்துடன் பராமரித்து வர பணம் செலவாகத்தான் செய்யும். அது கூடாது என்று சொல்லுவது தேசவிரோதம். ஒப்பந்தம் செய்யும் பொழுது இதையெல்லாம் கவனிக்காமல் விட்டுவிட்டு அதன்பின் புலம்புவது தேவையற்றது.


Ram
டிச 22, 2024 06:07

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை தணிக்கைக்கு உட்படுத்தவேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை