உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாநில அந்தஸ்து கேட்டு லடாக்கில் பேரணி

மாநில அந்தஸ்து கேட்டு லடாக்கில் பேரணி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லே: லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். லே மற்றும் கார்கிலுக்கு லோக்சபா எம்.பி., பதவி வேண்டும். அரசியல் சாசனத்தின் 6வது பட்டியலில் லடாக்கை இணைக்க வேண்டும். வேலைவாய்ப்பில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி அங்கு பேரணி மற்றும் போராட்டம் நடந்தது.லே மாவட்டத்தில் நடந்த இந்த போராட்டத்திற்கு கார்கில் ஜனநாயக கூட்டணி மற்றும் லே கூட்டமைப்பு அழைப்பு விடுத்தன. ஏராளமானவர்கள் இந்த போராட்டத்தில் பங்கு பெற்றனர். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 23ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகத்தில் மனு அளிக்கப்பட்டது. மேலும், இது தொடர்பான வரைவு மசோதா ஒன்றையும் இந்த கூட்டமைப்பினர் சமர்ப்பித்து இருந்தனர். போராட்டம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை