உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கவனர் ரவி குறித்து பேசியதால் எதிர்ப்பு : சபாநாயகர் மாநாட்டிலிருந்து அப்பாவு வெளிநடப்பு

கவனர் ரவி குறித்து பேசியதால் எதிர்ப்பு : சபாநாயகர் மாநாட்டிலிருந்து அப்பாவு வெளிநடப்பு

பாட்னா: தமிழக கவர்னர் ரவி குறித்து பேசியதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் அகில இந்திய மாநில சட்டசபை, சபாநாயகர்கள் மாநாட்டிலிருந்து தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு திடீரென வெளிநடப்பு செய்தார். இந்திய அரசியல் சாசனத்தின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அகில இந்திய மாநில சட்டசபை சபாநாயகர்கள்,யூனியன் பிரதேச சட்டசபை சபாநாயகர்களின் 85வது மாநாடு பீஹார் தலைநகர் பாட்னா நகரில் இரு நாட்கள் நடக்கிறது. இதில் அனைத்து மாநில சட்டசபை மற்றும் யூனியன் பிரதேச சட்டசபை சபாநாயகர்கள், துணை சபாநாயகர்கள் பங்கேற்றனர். இம்மாநாட்டில் தமிழகம் சார்பில் சபாநாயகர் அப்பாவு, துணை சபாநாயகர் பிச்சாண்டி ஆகியோர் பங்கேற்றனர்.. இன்று (ஜன. 20) துவங்கிய மாநாட்டை லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா துவக்கி வைத்தார். மாநாட்டில் தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு பேசும் போது தமிழக கவர்னர் ரவி குறித்து பேசியதாகவும், இதற்கு ராஜ்யசபா துணைத்தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் இடைமறித்து ஆட்சேபணை தெரிவித்தார். தனக்கு பேச எதிர்ப்பு கிளம்பியதால் மாநாட்டிலிருந்து சபாநாயகர் அப்பாவு பாதியிலேயே வெளிநடப்பு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 75 )

Selvaraj
ஜன 26, 2025 21:56

கெட் அவுட், டோன்ட் பிரிங் தமிழ்நாடு மேட்டர்ஸ் ஹியர் என்று சொல்லி இருக்கலாம். ஏனென்றால் ஓரளவாவது ஆங்கிலம் மட்டுமே தெரிந்திருக்கும்..? இல்லையென்றால் கடைசி வரை இருந்து பார்க்கக்கூடிய ஆற்றல் படைத்தவர் .....


Kathiravan
ஜன 25, 2025 09:20

இதுக்கு பஞ்சு மூட்டை குடோன்லயே இருந்து இருக்கலாம் ....


Mani . V
ஜன 24, 2025 12:51

அவர் தம்பி ஞானசேகரன் பற்றி பேசியிருந்தால் வெளிநடப்பு செய்திருக்க மாட்டார்.


S.V.Srinivasan
ஜன 22, 2025 10:39

வெளியேறவில்லை வெளியேற்றப்பட்டார்.


Dharmavaan
ஜன 22, 2025 08:41

இவனை சம்பந்தமில்லாமல் பேசவிடவில்லை எனவே வெளியேற்றம் ஆனால் இது பை அபிவாம்சதிப்பல்ல இதையே ஆளுநர் செய்தால் அவமதிப்பு


joe
ஜன 21, 2025 20:31

இவனைப்போன்ற சுயநலவாதிகள்தான் மக்களாட்சியை மதிக்காமல் கவர்னர்மேல் குற்றம் சுமத்தி ஊழலுக்கு வழிவகுப்பானுங்க .தமிழ்நாட்டில் ஊழல் அரசியல் வாதிகளுக்கு பஞ்சமில்லை. இவரைப்போன்ற ஊழல் அரசியல் வாதிகளால் தமிழர்களின் எதிர்காலம் ஒரு கேள்விக்குறியாகவே போய்க்கொண்டிருக்கிறது. சட்டத்தை மதிக்காதவர்கள்தான் கவர்னரை இழிவுபடுத்துவார்கள் என்பது இந்த மக்களாட்சியின் உண்மை தத்துவம் .சட்டத்தை மதித்து ,மக்களை மதித்து உண்மை பேசுவோமாக .


joe
ஜன 21, 2025 20:19

இந்த அப்பாவு ஒரு சுயநலவாதி.


joe
ஜன 21, 2025 19:56

இந்த அப்பாவு நல்லவaf இல்லை .அங்கே இந்த அப்பாவு பேசிய பேச்சால் ,அப்பாவின் கெட்ட எண்ணம் முழுமையாக தெரிந்தது .நல்லவேளை செருப்பால் அடிக்காமல் விட்டானுங்க .


சுலைமான்
ஜன 21, 2025 14:58

நீ உள்நடப்பு கூட பண்ணு.... உன்னால பீஹார்ல ஒன்னும் முடியாது....


அன்பே சிவம்
ஜன 21, 2025 10:33

அப்பாவு மூச்சுவாங்கியபடி:::பிடித்தேன் பாருங்க ஒரு ஓட்டம் அப்படி ஒரு ஓட்டம் இதுவரைக்கும் Olympic games ஒலிம்பிக் போட்டிகளில் கூட யாரும் அப்படி ஓடியது இல்லை.வெற்றி நமதே! Stalin::: Very Good. சரி,Cup எங்கே?