உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போராட்டம் தொடரும்: கரப்பான் பூச்சி கட்சி

போராட்டம் தொடரும்: கரப்பான் பூச்சி கட்சி

புதுடில்லி: தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டங்கள் தொடரும் என, கரப்பான்பூச்சி கட்சியினர் தெரிவித்துள்ளனர்.கரப்பான்பூச்சி கட்சியின் நிர்வாகிகள் டில்லியில் நேற்று அளித்த பேட்டி:போராட்டங்கள் தொடர்பாக நீதிமன்றங்கள் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளன. அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், போராட்டங்கள் நடத்தக் கூடாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது. எங்களுடைய போராட்டம் டில்லியில் மட்டுமல்ல, நாடு முழுதும் விரிவடைந்துள்ளது.அரசின் நெருக்கடிகளுக்கு அஞ்ச மாட்டோம். போராட்டம் நடத்த மாட்டோம் என்று நாங்கள் எந்த பத்திரத்திலும் கையெழுத்து போட்டுத் தரவில்லை. எங்களுடைய போராட்டம் தற்போதுதான் துவங்கியுள்ளது.தலைமை தேர்தல் கமிஷனர் பதவியில் இருந்து நீக்கப்படும் வரை, எங்களுடைய போராட்டம் தொடரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

வரவேற்க ஆளில்லை

டில்லி போலீசார், நீதிமன்ற உத்தரவுப்படி கரப்பான்பூச்சி கட்சி தலைவர் அபிஜித் தீப்கே, அவரது சக கூட்டாளிகளான சவுரவ் தாஸ், அஷுதோஷ் ரங்கா ஆகியோரை தடுப்புக் காவலில் இருந்து விடுவித்தனர். அப்போது போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வெளியே வந்த மூவரையும் அழைத்துச் செல்ல அவரது ஆதரவாளர்களோ, தொண்டர்களோ யாருமே வரவில்லை. மூவரும் தனியாகவே காரில் ஏறி புறப்பட்டனர்.

எப்.ஐ.ஆர்., பதிவு

டில்லியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம் மற்றும் அனுமதி மீறி ஒன்றுகூடியது தொடர்பாக, 20க்கும் மேற்பட்ட எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கையை போலீசார் பதிவு 'கடத்தப்பட்டேன்' கரப்பான்பூச்சி கட்சியின் போராட்டத்தில் பங்கேற்க ஜெர்மனியில் இருந்து வந்திருந்த யூ டியூபர் துருவ் ரதியை, ஹரியானாவின் குருகிராமில் உள்ள அவரது வீட்டில் வைத்து போலீசார் நேற்று முன்தினம் காலை தடுப்பு காவலில் கைது செய்தனர். பின்னர், இரவு அவர் விடுவிக்கப்பட்டார். இது குறித்து சமூகவலைதளத்தில் வீடியோ வெளியிட்ட துருவ் ரதி, 'என்னை தடுப்புக் காவலில் கைது செய்யவில்லை. கடத்திச் செல்லப்பட்டு போலீஸ் ஸ்டேஷனில் சிறை வைக்கப்பட்டேன்' என, குறிப்பிட்டுள்ளார்.மீண்டும் ரயில்கள் இயங்கின கரப்பான்பூச்சி கட்சி, டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்ததால், டில்லியில் நேற்று முன்தினம் மெட்ரோ உட்பட பிற ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. போராட்டக்காரர்கள் தடுப்பு காவலில் கைதாகி விடுதலையான நிலையில், நேற்று இயல்பு நிலை திரும்பியதால், மீண்டும் ரயில் சேவைகள் வழக்கம் போல இயங்கின. பாட்டியின் இறுதி சடங்கில் தீப்கே மஹாராஷ்டிராவின் ஹிங்கோலி மாவட்டத்தின் சந்துக் பிம்பரி கிராமத்தில், அபிஜித் தீப்கேவின் பாட்டி சாவித்ரி பாய் சங்கர்ராவ் தீப்கே, 85, உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, நேற்று தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டதும், பாட்டியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க அவர் டில்லியில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றார். செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

public
அக் 12, 2026 16:54

Now, India needs Pest Control Jantha Party !! To protest against these anti elements…


Pandianpillai Pandi
அக் 12, 2026 09:06

போராட்டம் என்று சொல்வதை விட அறப்போராட்டம் என்று கூறுங்கள். மக்களின் சந்தேகங்களை பற்றி அக்கறை கொள்ளாமல் ஆதாரம் கேட்பது குற்றத்திலிருந்து தப்பிப்பதற்காகத்தான். சமீபத்தில் ஓட்டுக்களை நீக்குவதற்கான விதிமுறை கொண்டு வரப்பட்டிருப்பது அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. கரப்பான் பூச்சி போராட்டங்கள் அரசியலுக்கானதாக தெரியவவில்லை மக்களுக்கானதாக இருக்கிறது. கரப்பான் பூச்சி கட்சி மக்களை ஒன்றிணைக்கட்டும். , இன்றைய இளைஞர்கள் நாட்டு பற்று இல்லாமல் இருக்கிறார்கள் என்று கவலைப்பட்டதுண்டு. தற்போது இளைய தலைமுறை எழுச்சி மகிழ்ச்சி யளிக்கிறது கரப்பான் பூச்சியின் வருகை இந்தியாவின் பலம். இளைஞர்கள் கெட்ட சக்திகளுடன் கைகோர்த்துவிடக்கூடாது. முக்கியமாக காங்கிரஸ். தமிழ்நாட்டில் கலைஞரின் எழுச்சிதான் இன்றுவரை தமிழ்நாட்டை தலை நிமிர்ந்து நிற்கசெய்கிறது. அதுபோல ஒட்டுமொத்த இந்தியாவை தலைநிமிர செய்கின்ற பணியை இன்றைய தலைமுறை எடுத்துச்செல்லும் என்ற நம்பிக்கை மனதில் உருவாகிவிட்டது. வாழ்த்துக்கள்


Bala
அக் 12, 2026 10:16

Ada Naayae


rahul
அக் 12, 2026 13:09

பாவம் பாண்டியன் பிள்ளை பாண்டியன்..கொளத்தூர் விபத்துக்கு பிறகு இப்படிதான் பேசுகிறார்


Nanchilguru
அக் 12, 2026 13:21

அந்த கூட்டத்தில் நீயும் ஒண்ணா


காசிராஜன்
அக் 12, 2026 13:25

திருட்டு திராவிட கலைஞரின் கட்சி தூக்கி எறியப்பட்டது. அற போராட்டம் அல்ல, அற்ப போராட்டம். புத்திசாலிகளான நம் இளைஞர்கள் கரப்பான்களை இந்தியாவிலிருந்து ஒழித்துக்கட்டுவார்கள்.


vijay
அக் 12, 2026 08:32

நீங்கள் தொடருங்கள், சாமான்யன் கூட புரிந்துள்ளான். நாடு பார்த்துக்கொண்டுள்ளது. விரைவில் கரப்பான்களின் கூட்டத்துக்கு முடிவுரை சட்டப்படி எடுக்கப்படும்.


ராஜா
அக் 12, 2026 07:32

மக்கள் ஆதரவு துளியும் இல்லை. கண்டிப்பாக வெறுப்பின் பலனை அறுவடை செய்வார்கள்.


KRISHNAN R
அக் 12, 2026 05:50

உருப்படாதவர் கூட்டம்


ஊர்குருவி
அக் 12, 2026 05:41

தேர்தல் கமிஸ்சினரை நீக்குவதற்கு பார்லிமெண்டுக்குத்தான் போகவேண்டும் . இவர்கள் போராட்டம் நடத்துவதால் நீக்கமுடியாது .முதலில் சட்டத்தை படிக்க வேண்டும் .இவர்கள் போராட்டத்தை உச்சநீதிமன்றம் சட்டத்திற்கு எதிரானதாக அறிவிக்க வேண்டும் .அரசு சட்டங்களுக்குட்பட்டு நடவடிக்கை எடுக்கலாம் என்று உத்திரவிடவேண்டும் .


Anandh
அக் 12, 2026 05:37

இன்று திரு. ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யப் போராடுவார்கள். நாளை இந்தியாவில் இருந்துகொண்டே இந்தியாவில் குண்டு வைத்தவர்களை விடுவிக்கப் போராடுவார்கள். இவர்களை எல்லாம் நசுக்கித் தூக்கி எறிய வேண்டும். பொதுமக்கள் ஆதரவு இவர்களுக்கு நிச்சயம் கிடைக்காது


ஊர்குருவி
அக் 12, 2026 05:27

இதை நீதிமன்றம் மிக எளிமையான முறையில் கையாளவேண்டும் .தகுதி உள்ள யாரையும் வாக்காளராக பதிவு செய்யவோ ,அல்லது தேர்தலில் வாக்களிக்கவோ தடுக்கமுடியாது .அப்படி ஏதும் நடைபெற்றதாக தெரியவில்லை .ஒரு குற்றம் சுமத்துபவர் அதற்கான ஆதாரங்களை கொடுத்து நிவாரணம் கேட்பதுதான் சரியான முறை .நீதிமன்றம் போராட்டக்காரர்களிடம் ஆதாரங்களை கேட்டு பெற்று விடுபெற்றவர்கள் என்று கூறுபவரிடம் படிவம் 6ஐயும் பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்தால் பதிவு செய்ய நீதிமன்றம் உத்திரவிடும் என்று கூறவேண்டும் .இல்லையென்றால் வழக்கை தள்ளுபடி செய்வதுடன் பொய்யான குற்றச்சாட்டாக கருதி அதற்கான அபராதத்தை விதிக்கவேண்டும் .


Kasimani Baskaran
அக் 12, 2026 03:47

தேர்தல் ஆணையத்தலைவரை மட்டுமல்லாது பிரதமரையும் கூட மாற்ற வேண்டும் என்று சொல்ல இவர்களுக்கு ஜனநாயகத்துக்கு மேலான அதிகாரத்தை யார் கொடுத்தது?


jeyamurugan
அக் 12, 2026 04:52

நிதர்சனமான பதிவு. இவர்கள் இன்னும் சில காலங்களில் நமது பாரத பிரதமருக்கு எதிராக போரட்டம் பண்ணுவார்கள்.


vijay
அக் 12, 2026 08:28

இந்த கரப்பான்களின் திட்டம், அஜெண்டாவே அதுதான் நண்பர்களே. வெளிநாட்டு சக்திகளின் திட்டங்கள்,எதிர்க்கட்சி தலைவரின் பிரதமர் ஆசை எல்லாம் அயர்ந்து டூல் கிட் வடிவமைத்து போராட்டங்கள் நடத்தி தூண்டிவிடுகிறார்கள். சட்டம் கடுமையாக இல்லை. ஆனால், தாங்கள் இளம்ரத்தங்கள், ஜென்-சிக்கள் என்று பின்னால் அலையும் அறிவிலிகளுக்கு தெளியவைத்தால் போதும், கரப்பான்கள் இருக்கும் இடம் இல்லாமல் ஓடி ஒளிழிந்துவிடும்.


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை