உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / செல்லாது... செல்லாது...: நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பி.டி.உஷா கருத்து

செல்லாது... செல்லாது...: நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பி.டி.உஷா கருத்து

திருவனந்தபுரம்: '' இந்திய ஒலிம்பிக் சங்கத்தில் எனக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் செல்லாது,'' என அதன் தலைவர் பி.டி.உஷா கூறியுள்ளார்.இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக 2022 டிச., மாதம், தடகள வீராங்கனை பி.டி.உஷா தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் இச்சங்கத்தின் தலைவரான முதல் பெண் என்ற பெருமை இவருக்கு கிடைத்தது. பதவியேற்ற பிறகு, இவருக்கும், குழு உறுப்பினர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. கவுன்சில் உறுப்பினர்கள் விதிகளை மீறினர் என குற்றம்சாட்டிய பி.டி. உஷா, அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். ஆனால், தலைவருக்கான அதிகாரத்தை பயன்படுத்தி தன்னிச்சையாக செயல்படுகிறார் என அவர் மீது உறுப்பினர்கள் புகார் கூறினர்.இச்சூழ்நிலையில், ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இந்திய ஒலிம்பிக் சங்கம் மேற்கொண்ட ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தினால் சங்கத்திற்கு ரூ.24 கோடி இழப்பு ஏற்பட்டதாக தணிக்கை அறிக்கையில் சி.ஏ.ஜி., குற்றம்சாட்டியது. இதனை பி.டி. உஷா மறுத்த நிலையில், அவரிடம் சி.ஏ.ஜி., விளக்கமும் கேட்டு இருந்தது.இந்நிலையில், இந்திய ஒலிம்பிக் சங்கத்தில் பி.டி.உஷாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் இணை செயலாளரும், அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவருமான கல்யாண் சவுபே கொண்டு வந்த தீர்மானத்தில், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் சட்ட விதிகளை மீறியதற்காகவும், இந்திய விளையாட்டு துறைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக இவர் மீது தீர்மானத்தில் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. வரும்25ம் தேதி நடக்கும் சங்கத்தின் சிறப்பு கூட்டத்தில் இத்தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது என கூறப்பட்டு இருந்தது.

இடையூறு

இது தொடர்பாக பி.டி.உஷா சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: எனக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் செல்லாது. சங்கத்தின் செயல்பாடுகளுக்கு கல்யாண் சவுபே இடையூறு ஏற்படுத்துகிறார். இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் சிறப்பு கூட்டத்தை கூட்டுவதற்கு அவருக்கு எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை. சவுபே மற்றும் மற்ற நிர்வாக கவுன்சில் உறுப்பினர்களின் அறிவுரையை சங்க உறுப்பினர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Lion Drsekar
அக் 11, 2024 13:50

அவரா இவர், அன்றைக்கு ப்படி இருந்தார் இவர் ரயில்வேயில் வேலைகிடைத்தவுடன் இப்படி ஆகிவிட்டார் , காவலத்துறையில்தான் பணியில் சேர்வதற்கு முன் சேர்ந்த பின் என்ற இரண்டு வகை உடல் எடை கூடும் இங்குமா , வாழ்த்துக்கள் வந்தே மாதரம்


kalyan
அக் 10, 2024 21:33

தன்னுடைய எடைக்கு ஏற்ற போட்டியில் கலந்து கொண்டால் முதல் ரவுண்டுல வெளியாவோம் என்று போகத்துக்கு நன்றாகவே தெரியும் இருந்தாலும் 53 கிலோ எடைக்கும் குறைவான ரவுண்டில், ஒரு மராத்திய வீராங்கனையை பின்னே தள்ளி விநெஸ் போகத் குறுக்கு வழியில் வெல்லலாம் என்று நினைக்க கடைசி நேரத்தில் அவர் உடம்பு காட்டிக்கொடுத்து விட்டது . அவருக்காக 17 கோடி செலவு செய்தது வீண். அதற்காகவே ஒலிம்பிக் கம்மிட்டி தலைவரை வெளியேற்றனும் .


நிக்கோல்தாம்சன்
அக் 10, 2024 20:30

இதுக்குதான் கார்பொரேட் குடும்பத்தின் ஊடக யூனிவெர்சிட்டியில் படிக்காத என்று தலையாய் அடிச்சுக்கிட்டேன் மாதவா ,


HoneyBee
அக் 10, 2024 17:58

அந்த கல்லு போகத் ஏன் இருநூறு கிராம் உடல் எடையை குறைக்காலாமல் ஒலிம்பிக் சங்கத்திடம் செருப்படி பட்டது... இது உனக்கு தெரியுமா..


MADHAVAN
அக் 10, 2024 16:38

இந்த விச செடி, மற்றும் பிஜேபி கரனுங்க கைங்கரியம்தான் வினேஷுபோகத்துக்கு பதக்கம் கிடைக்காம போககாரணம்,


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 10, 2024 17:34

திமுக அடிமைகளுக்கு என்னே அறிவு ...... பிஜேபியின் செல்வாக்கு ஒலிம்பிக் வரை இருக்கிறதாம் ...


Sathyanarayanan Sathyasekaren
அக் 10, 2024 18:15

இன்னும் விட்டால் பிஜேபி தான் எடை மெஷின் மீது அதிக வெயிட் வைத்தது என்று சொல்வாய். இத வெனிஸுக்கு மூன்றாவது ஒலிம்பிக், அவளுக்கு எடை எவ்வளவு முக்கியம் என்பது தெரியாதா? எடை போடும் முன் முடியை கூட வெட்டினார்கள். இன்னும் உடைகளை மட்டும் தான் கழட்டவில்லை. அப்படிருந்தும் எடை அதிகமானது யார் குற்றம், இதை கேட்டால் சங்கி. கேட்காமல் ஒத்து ஊதினால் உன்னை போன்ற கொத்தடிமை சொங்கி.


Rangarajan Cv
அக் 10, 2024 18:43

Over weight in the category is irrelevant? Big joke.


முக்கிய வீடியோ