உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மண்டலங்களை சீரமைக்க பொதுப்பணி துறை திட்டம்

மண்டலங்களை சீரமைக்க பொதுப்பணி துறை திட்டம்

இந்திரபிரஸ்தா:மனிதவளத்தை மேம்படுத்தவும், சிறப்பாகச் செயல்படவும், ஏற்கனவே உள்ள மண்டலங்களை மறுசீரமைக்க டில்லி அரசின் பொதுப்பணித் துறை திட்டமிட்டுள்ளது.இதன் ஒருபகுதியாக பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள துணைப்பிரிவுகள், மண்டலங்கள், வட்டங்கள், அவற்றின் பிரிவுகளில் உள்ள மனிதவளம், அவற்றை பயன்படுத்துவது, சீரமைப்பது குறித்து ஆய்வு செய்ய ஒரு குழுவை நியமித்துள்ளது.இந்தக் குழுவில் தலைமைப் பொறியாளர், மூன்று தலைமைப் பொறியாளர்கள், இயக்குநர் பணியாளர்கள் மற்றும் சில மூத்த அதிகாரிகள் இருப்பார்கள்.தேசிய தலைநகர் முழுவதும் உள்ள அனைத்துத் துறைகளின் பிரிவுகளின் பணிச்சுமையை இந்தக் குழு பகுப்பாய்வு செய்யும். அங்கெல்லாம் மறுசீரமைப்பு செய்வதற்கான பரிந்துரைகளை வழங்கும்.அடுத்த 20 நாட்களுக்குள் அறிக்கையை சமர்ப்பிக்கும்படி குழுவை பொதுப்பணித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.அதிகப்படியாக இருக்கும் மனிதவளத்தை தேவைப்படும் இடங்களில் பயன்படுத்த, அவர்கள் விரைவில் இடமாற்றம் செய்யப்படலாம். புதிதாக பிரிவை உருவாக்கவோ அல்லது தேவையில்லாமல் இருக்கும் பிரிவை கலைக்கவோ இந்த குழு பரிந்துரைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை