உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று புல்வாமா தாக்குதல் நினைவு தினம்; தலைவர்கள் அஞ்சலி

இன்று புல்வாமா தாக்குதல் நினைவு தினம்; தலைவர்கள் அஞ்சலி

புதுடில்லி: காஷ்மீரில் புல்வாமா தாக்குதல் நடந்து, இன்றுடன் ஆறு ஆண்டுகள் நிறைவு பெற்றது.கடந்த 2019ம் ஆண்டு பிப்., 14ம் தேதி மாலை 3.15 மணிக்கு காஷ்மீரில் மோசமான பயங்கரவாத தாக்குதல் நடந்தது. ஸ்ரீநகர் - ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில், புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற கான்வாய் மீது, காரில் வந்த தற்கொலைப்படை பயங்கரவாதி, தனது காரை மோதி வெடிகுண்டுகளை வெடிக்க செய்தான்.இதில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இது இந்தியாவையும், பாதுகாப்பு படையினரையும் பெரிய அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இன்று புல்வாமா தாக்குதல் நடந்த நினைவு தினம். இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாவது:இந்த நாளில், புல்வாமாவில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு எனது இதயப்பூர்வமான அஞ்சலியை செலுத்துகிறேன். ஒட்டுமொத்த மனித இனத்தின் மிகப்பெரிய எதிரி பயங்கரவாதம், அதற்கு எதிராக ஒட்டுமொத்த உலகமும் ஒன்றுபட்டுள்ளது. சர்ஜிக்கல் ஸ்டிரைக் ஆகட்டும், வான்வழித் தாக்குதலாகட்டும், பயங்கரவாதிகளுக்கு எதிராக 'பூஜ்ஜிய சகிப்புத்தன்மை' கொள்கையுடன் பிரசாரத்தை நடத்தி, பயங்கரவாதிகளை முற்றிலுமாக அழிப்பதில் மோடி அரசு உறுதியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கடுமையான சவால்கள்

இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: புல்வாமா தாக்குதலின் போது, தங்கள் உயிரை தியாகம் செய்த சி.ஆர்.பி.எப்., வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறோம். நமது நாட்டைப் பாதுகாக்கவும், காஷ்மீரில் அமைதி மற்றும் வளர்ச்சியை உறுதி செய்யவும் கடுமையான சவால்களைத் தொடர்ந்து எதிர்கொண்டு போராடும் சி.ஆர்.பி.எப்., வீரர்களின் மனப்பான்மைக்கு வணக்கம் செலுத்துகிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அர்ப்பணிப்பு

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2019ம் ஆண்டு புல்வாமாவில் நாம் இழந்த துணிச்சலான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவர்களின் தியாகத்தையும், தேசத்திற்கான அவர்களின் அர்ப்பணிப்பையும் வரும் தலைமுறையினர் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Azar Mufeen
பிப் 14, 2025 22:49

மனது வலிக்கிறது, இவர்களையும், குடும்பத்தையும் நினைத்து


நாஞ்சில் நாடோடி
பிப் 14, 2025 15:13

புல்வாமாவில் நாம் இழந்த துணிச்சலான வீரர்களுக்கு வீர வணக்கம். பாரத் மாதா கி ஜெய் ...


Madras Madra
பிப் 14, 2025 14:10

உங்கள் தியாகத்துக்கு விலை இல்லை


Nandakumar Naidu.
பிப் 14, 2025 14:10

நம் தேசத்திற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு எங்களின் வீர வணக்கம்.


Ramesh Sargam
பிப் 14, 2025 13:13

நாட்டிற்காக உயிர் நீத்த அனைத்து வீரர்களுக்கும் என் வீரவணக்கத்தையும், நினைவாஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


xyzabc
பிப் 14, 2025 12:41

வணங்குகிறேன் இந்த வீரர்களை.


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 14, 2025 12:36

தியாகிகளுக்கு நினைவஞ்சலி .....


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 14, 2025 12:35

இது போன்ற தாக்குதல் நடத்த பாகிஸ்தானுக்கு துணிவு வருவதே இந்தியாவுக்கு அவமானம் .....


தேச நேசன்
பிப் 14, 2025 12:34

40 வீரர்களுக்கும் வீர வணக்கம் மற்றும் அஞ்சலி. இவர்கள் குடும்பம் தலைமுறை தலைமுறையாக சிறந்து விளங்க இறைவனை வேண்டுகிறேன்.


அப்பாவி
பிப் 14, 2025 11:58

கோட்டை விட்டதும் இவிங்களே.. அதை ஊதிப் பெருசாக்கி எலக்ஷனில் ஜெயிச்சதும் இவிங்களே.


Mettai* Tamil
பிப் 14, 2025 13:21

பாக்கிஸ்தான் தீவிரவாதிகள் மேல் தவறில்லை ..கோட்டை விட்டதுதான் தவறு அப்படித்தானே ....1947 ல் காந்தி எடுத்த தவறான முடிவால் விளைந்த களைகள் தான் உங்களைபோன்றவர்கள் ......