உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 40 சி.ஆர்.பி.எப்., வீரர்கள் உயிரிழப்புக்கு காரணமான புல்வாமா பயங்கரவாதி மாரடைப்பில் பலி

40 சி.ஆர்.பி.எப்., வீரர்கள் உயிரிழப்புக்கு காரணமான புல்வாமா பயங்கரவாதி மாரடைப்பில் பலி

ஜம்மு: கடந்த 2019ல் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு 2,547 துணை ராணுவப் படை வீரர்களுடன் 78 ராணுவ வாகனங்கள் வரிசையாக சென்றன. அவை, புல்வாமா பகுதியில் சென்றபோது, வெடிகுண்டு நிரப்பப்பட்ட ஒரு கார் மோதிய வேகத்தில், ராணுவ வீரர்கள் சென்ற பேருந்து வெடித்துச் சிதறியது.இதில், 40 சி.ஆர்.பி.எப்., வீரர்கள் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் - இ - முகமது பொறுப்பேற்றது. இந்த வழக்கை, தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வரும் நிலையில் இதுவரை 19 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.இதில், ஹாஜிபல் கிராமத்தைச் சேர்ந்த பிலால் அகமது குச்சே, 32, என்பவரும் கைது செய்யப்பட்டு, கிஷ்த்வார் மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் மாரடைப்பால் நேற்று உயிரிழந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Anand
செப் 25, 2024 11:47

கைது செய்ததும் என்கவுண்டர் செய்திருக்கவேண்டும்.


xyzabc
செப் 25, 2024 11:04

why are we wasting government money on feeding these terrorists ? insane.


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 25, 2024 10:53

அதாவது அவன் இயற்கை மரணம் அடையும் வரை சோறு போட்டு வெச்சிருந்திருக்கீங்க .....


Mohan
செப் 25, 2024 10:36

அட பாவிகளா இத்தனை நாள் இவானா பொத்தி பொத்தி வெச்சிருந்தீங்களாடா ..


தமிழ்வேள்
செப் 25, 2024 10:04

பயங்கரவாதிகளின் நடு நெஞ்சில் நாலு மிதி மிதித்தால் அதுதான் மாரடைப்புக்கு நல்ல வைத்தியம்..போறவன் வாறவன் எல்லோரும் ஆளுக்கு நாலு மிதி மிதிக்கலாம்


வாய்மையே வெல்லும்
செப் 25, 2024 09:47

திருடனுக்கு தேள் கொட்டினால் உச்சு கொட்ட கூட ஆளிருக்காது .. அமைதியோ அமைதி ஹாஹாஹா


N.Purushothaman
செப் 25, 2024 09:07

இத்தினி நாளா இவனுக்கு பிரியாணி போட்டு உயிரோட வச்சி இருந்ததே தப்பு தான் ....


VENKATASUBRAMANIAN
செப் 25, 2024 08:24

இவன் வாழ்க்கையில் என்ன சாதித்தான்


பேசும் தமிழன்
செப் 25, 2024 08:23

இதெல்லாம்.... நாட்டுக்கு தேவையில்லாத ஆணிகள்....


N Sasikumar Yadhav
செப் 25, 2024 08:16

பயங்கரவாதிகளுக்கு அவுரு இவுரு என மரியாதை கொடுப்பது சரியாக இல்லை ஆர்எஸ் பாரதி சொன்ன ஊடகங்கள் மட்டுமே அவுரு இவுரு என மரியாதை கொடுக்கும் மற்ற ஊடகங்கள் பயங்கரவாதிகளுக்கு மரியாதை கொடுக்காது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை