உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புனேவில் பரவும் அரிய வகை நோய் பாதிப்பு; 73 பேருக்கு சிகிச்சை; வென்டிலேட்டரில் 14 பேர்!

புனேவில் பரவும் அரிய வகை நோய் பாதிப்பு; 73 பேருக்கு சிகிச்சை; வென்டிலேட்டரில் 14 பேர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புனே: புனேவில் அரிய நரம்பியல் நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் 73 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 14 பேர் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டனர். மஹாராஷ்டிரா மாநிலம் புனே சுற்றுவட்டார பகுதிகளில், குய்லின்-பார் சிண்ட்ரோம் என்ற நரம்பியல் கோளாறு கடந்த சில நாட்களாக பரவி வருகிறது. இந்த நோய், மனிதர்களின் நோயெதிர்ப்பு மண்டலம், மூளை மற்றும் முதுகெலும்புக்கு வெளியே உள்ள நரம்புகளைத் தாக்கும். இதனால் 73 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 14 பேர் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டனர்.

அறிகுறிகள் என்னென்ன?

* முதுகு அல்லது கால்களின் ஆழமான தசை வலி * பக்கவாதம்* சுவாச பிரச்னை* பேசுவதில் சிரமம்* பார்வை பிரச்னைகள்இந்த நோய் பாதிப்பு வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. நான்கு நாட்களில் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் வீடு வீடாக பரிசோதனையைத் தொடங்க உள்ளனர். பாதிக்கப்பட்ட 73 நோயாளிகளில், 44 பேர் புனே கிராமப்புறத்திலும், 11 பேர் புனே நகராட்சிப் பகுதியிலும், 15 பேர் சின்ச்வாட் நகராட்சிப் பகுதியிலும் உள்ளனர். அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் கிர்கித்வாடி, டி.எஸ்.கே. விஷ்வா, நான்டெட் நகரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்த நோய்க்கு தடுப்பூசி கிடையாது. இந்த நோய் பாதிப்பு பாக்டீரியா, வைரஸ் தாக்கத்தால் ஏற்படுகிறது. அறிகுறிகள் வந்த உடன் நரம்பியல் மருத்துவரை அணுகினால் குணம் அடையலாம். அறிகுறிகள் தென்பட்ட உடனே டாக்டரை அணுகும் படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ram pollachi
ஜன 25, 2025 19:57

கோவை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வாத நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது, பகலில் கடும் வெய்யில் இரவில் நடுங்க வைக்கும் குளிர். கை, கால்கள் மறத்து போகும் அளவுக்கு.... உணவில் கீரை வகைகளை அதிகம் சேர்த்து கொள்ளவும்.... தினமும் சிறிதளவு உடற்பயிற்சி கட்டாயம் செய்ய வேண்டும்....


Barakat Ali
ஜன 25, 2025 14:16

அனைத்தும் இறைவனின் ஆணைக்கு உட்பட்டே நடக்கிறது ........


nisar ahmad
ஜன 25, 2025 11:50

கண்டிப்பாக அனைத்தும் ஆரம்பமாகும் பூனா யாரின் தெலைமையிடமென்பதோ தெறியோம் அவர்களின் அநியாயங்களுக்கு கடவுள் கண்டிப்பாக தண்டனை தருவார் அதிமா சோதனைகளௌ தொடுரட்டும்.


முக்கிய வீடியோ