உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மதுவை கைவிடாத முதல்வருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை: வெளியான அதிர்ச்சி தகவல்!

மதுவை கைவிடாத முதல்வருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை: வெளியான அதிர்ச்சி தகவல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சண்டிகர்; பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கல்லீரல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளதாக சிரோமணி அகாலிதளம் கட்சியின் மூத்த தலைவர் பிக்ரம் சிங் மஜிதியா கூறி உள்ளார். பஞ்சாப் முதல்வராக இருப்பவர் பகவந்த் மான். தமது அலுவலகத்தில் இருந்த போது 3 முறை மயங்கி விழுந்ததாகவும், மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. அவரது உடல்நிலையில் என்ன பாதிப்பு, பரிசோதனை நடத்தப்பட்டதா என எந்த தகவல்களையும் அங்குள்ள ஆம் ஆத்மி அரசு வெளியிடவில்லை.இதையடுத்து, அவர் டில்லியில் இருந்து சண்டிகருக்கு சென்றபோது விமானத்தில் மது அருந்தி, விமானத்தை விட்டு இறங்கிய போது ஓடுபாதையில் தவறி விழுந்து விட்டார் என்று சிரோமணி அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவர் பிக்ரம் சிங் மஜிதியா குற்றம்சாட்டி இருந்தார். அவரின் இந்த கருத்து பெரும் அதிர்ச்சியை தர எதிர்க்கட்சிகள் சரமாரியாக ஆம் ஆத்மி அரசாங்கம் மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்தன.இந்நிலையில் முதல்வர் பகவந்த் மான் கல்லீரல் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்பது உறுதியாகி உள்ளது. இதை, பிக்ரம் சிங் மஜிதியா உறுதிப்படுத்தி உள்ளார். இது குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் கூறி இருப்பதாவது; முதல்வர் பகவந்த் மானுக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டு உள்ளது. கல்லீரல் சிரோசிஸ் என்று அதற்கு பெயர். இந்த பாதிப்பின் 4ம் நிலையில் அவர் இருக்கிறார். மதுவை கைவிட வேண்டும் அல்லது கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அவருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.அவரது நுரையீரல் மற்றும் வயிற்றில் ஏராளமான நீர் தேங்கியதால் மூச்சுவிட முடியாமல் தவித்துள்ளார். இவை அனைத்தும் கல்லீரல் பாதிப்பின் அறிகுறிகளாகும். பகவந்த் மான் இப்படி மருத்துவமனையில் சேர்க்கப்படுவது முதல்முறை அல்ல. பலமுறை இதே பாதிப்புகளுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருக்கிறார்.பகவந்த் மான் உடல்நிலை குறித்து நான் பேசிய பின்னரே, அவர் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு சென்று இருக்கிறார் என ஆம் ஆத்மி அரசாங்கம் ஒரு வரி அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. ஒரு முதல்வரின் உடல்நிலை பற்றி அறிந்து கொள்வது ஒவ்வொரு குடிமகனின் கடமை. இதை ஆம் ஆத்மி அரசாங்கம் கவனத்தில் கொண்டு நடக்க வேண்டும்.இவ்வாறு பிக்ரம் சிங் மஜிதியா தமது அறிக்கையில் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

S MURALIDARAN
செப் 28, 2024 22:33

ஒரு குடிகாரரை எப்படி முதல் அமைச்சர் ஆக்கலாம். இதை இந்திய அரசியலமைப்பு சட்டம் அனுமதிக்கிறதா என்பதை தெளிவு படுத்த வேண்டும்.


வாய்மையே வெல்லும்
செப் 27, 2024 18:29

பஞ்சாபி மாநில முதலவர் சாராய அடிமையா பலே...பலே...இப்படித்தான் இருக்கணும்


அன்புவேல்
செப் 27, 2024 16:11

காமெடியன்கள் வாழ்க்கை எப்பவும் இப்பிடிதான்.


venkataraman vs
செப் 27, 2024 14:48

அவர் கண்களில் எப்போதும் போதை தான் தெரிகிறது. பதவி ஏற்க வரும்போதே போதையில்தான் வந்தாரு. கேடு கெட்ட ஆட்களைக் கொண்டதுதான் துடைப்பக் கட்டை கட்சி.


RAAJ68
செப் 27, 2024 14:19

ஆம் ஆத்மி கட்சியில் வேறு தகுதி வாய்ந்த நபர் யாரும் இல்லையா முதலமைச்சர் பதவிக்கு. குடிகாரன அகற்றிவிட்டு வேறு நல்ல . மனிதராக போட முடியாதா. ஜக்கிரி வாலும் ஒரு குடிகாரன் தான்.


N.Purushothaman
செப் 27, 2024 14:04

இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகளின் சிங்கிள் பாயிண்ட் அஜெண்டா என்னன்னா எப்படியாவது பாரதத்தை துண்டாடி நாட்டை நாசம் செய்ய வேண்டும் ....இல்லைன்னா புனிதத்துவம் வாய்ந்த ஒரு முதல்வர் பதவியை குடிகாரனுக்கு கொடுக்குமா இந்த தொடப்பக்கட்டை கட்சி ?


N.Purushothaman
செப் 27, 2024 14:02

பாகிஸ்தானுக்கு மிக அருகில் உள்ள ஒரு மாநிலத்தின் முதல்வர் மொடா குடிகாரன் ....தொடப்ப ப்பக்கட்டைக்கு வாக்களித்த பஞ்சாபியர்களுக்கு இது தேவை தான் ....


R.MURALIKRISHNAN
செப் 27, 2024 13:18

குடிகாரன் கையில் மாநிலம் விளங்கிடும்.


ديفيد رافائيل
செப் 27, 2024 12:44

Alcohol ? drinks குடிச்சவன் செத்து தொலைய்டும், நாட்டுக்கு வேண்டாம்.


Rasheel
செப் 27, 2024 12:11

அரசியல் வியாதிகளுக்கு இலவசமாக பாட்டில்கள் வரும். செய்த பாவங்களுக்கு பரிகாரமாக நல்ல குடிச்சு சீக்கிரம் டிக்கெட் வாங்கினாதானே, இவரும் ஒரு தியாகி என்று சிலை வைக்க முடியும்.


சமீபத்திய செய்தி