உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விவசாய சங்க தலைவருடன் பஞ்சாப் டி.ஜி.பி., சந்திப்பு

விவசாய சங்க தலைவருடன் பஞ்சாப் டி.ஜி.பி., சந்திப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சண்டிகர்: வேளாண் பொருட்களுக்கு எம்.எஸ்.பி., எனப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப்., 13 முதல், ஹரியானா - பஞ்சாப் மாநில எல்லைகளான ஷம்பு, கானவுரியில், 'டில்லி சலோ' அதாவது, 'டில்லிக்கு செல்வோம்' என்ற போராட்டத்தை விவசாயிகள் நடத்தி வருகின்றனர். ஷம்பு எல்லையில் இருந்து டில்லிக்கு செல்ல முயன்ற விவசாயிகளை மூன்று முறை போலீசார் தடுத்து நிறுத்தினர். பஞ்சாபைச் சேர்ந்த விவசாய சங்க தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால், நவ., 26ல், கானவுரி எல்லையில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை துவங்கினார். இந்த போராட்டம், 20 நாட்களுக்கு மேல் தொடர்ந்து நடக்கிறது. புற்றுநோயாளியான ஜக்ஜித் சிங் தலேவால், உண்ணாவிரதத்தால், 11 கிலோ எடை குறைந்துள்ளார். விவசாயிகள் போராட்டம் தொடர்பான வழக்கை சமீபத்தில் விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜக்ஜித் சிங் தலேவாலை சந்தித்து பேச்சு நடத்தும்படி, மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. இந்நிலையில், கானவுரி எல்லையில் சாகும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள ஜக்ஜித் சிங் தலேவாலை, பஞ்சாப் டி.ஜி.பி., கவுரவ் யாதவ், மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி மயாங்க் மிஸ்ரா ஆகியோர் நேற்று சந்தித்து பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
டிச 16, 2024 13:46

பஞ்சாப் விவசாயிகள் கோரிக்கைகள் எந்த காலத்திலும் யாராலும் நிவர்த்தி செய்ய முடியாது. ஒவ்வொரு வருடமும் இவர்கள் இதே கோரிக்கை வைத்து டெல்லி சலோ செய்கிறார்கள். நாடு அமைதியாக இருக்க இவர்கள் விடமாட்டார்கள். காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு ஆதரவு இவர்களுக்கு இருக்கலாம். டெல்லி வாழ் மக்கள் ஒரே ஒரு கோரிக்கை பயிர் கழிவுகளை எரிக்க வேண்டாம் என்பது. மனிதாபிமான அடிப்படையில் அவர்கள் இதை செய்யலாம். ஆனால் வேண்டும் என்றே எரிக்கிறார்கள். பயிர் கழிவுகளை எரிப்பதை தவிர்த்து மாற்று ஏற்பாடு செய்ய இவர்கள் கோரிக்கை வைப்பதே இல்லை. வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை எப்பொழுதும் உண்டு. ஆனால் இதில் அவர்கள் புதுப்புது காரணங்கள் கண்டுபிடித்து டெல்லி சலோ செய்கிறார்கள். உண்மையிலேயே இவர்கள் போராடுவது நிஜத்திற்காக என்றால் மத்திய அரசு தரும் மானியம் 2000 ரூபாய் வேண்டாம் என்று திருப்பி தந்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யலாமே.


Kasimani Baskaran
டிச 16, 2024 04:23

தூண்டிவிட காங்கிரஸ் போல பல அணிகள் இருக்கும் பொழுது இவர்கள் அடங்க வாய்ப்பில்லை. அடிபட்டால் கூட திருந்துவார்கள் என்பது சந்தேகமே.


புதிய வீடியோ