உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமர் மோடியுடன் ரஷ்ய அதிபர் பேச்சு: டிரம்ப்பை சந்தித்தது குறித்து விளக்கம்

பிரதமர் மோடியுடன் ரஷ்ய அதிபர் பேச்சு: டிரம்ப்பை சந்தித்தது குறித்து விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்புகொண்ட ரஷ்ய அதிபர் புடின், அலாஸ்கா நகரில் அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் நடந்த பேச்சுவார்த்தை குறித்து விளக்கமளித்தார்.கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புடினும் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினர். இதன் பிறகு, அலாஸ்காவில் உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்தித்து புடின் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை. ஆனால் இந்த பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமானதாக இருந்தது என தெரிவித்து இருந்தனர்.இந்நிலையில், பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ரஷ்ய அதிபர் புடின், அலாஸ்கா நகரில் அதிபர் டிரம்ப் உடன் நடந்த கலந்துரையாடல் குறித்து விளக்கினார். அப்போது புடினுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, நடக்கும் மோதலுக்கு தூதரகம் மற்றும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்ற இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை எடுத்துக்கூறினார்.இது தொடர்பான முயற்சிகளுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும் எனவும் கூறினார். இந்தியா ரஷ்யா இடையிலான சிறப்பு பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும், இரு தரப்பு ஒத்துழைப்பு குறித்தும் விவாதித்தனர். இருவரும் தொடர்பில் இருக்கவும் ஒப்புக் கொண்டனர். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: தொலைபேசியில் என்னை அழைத்து, டிரம்ப் உடன் நடந்த பேச்சு குறித்து என்னிடம் விளக்கிய எனது நண்பர் புடினுக்கு நன்றி. உக்ரைன் பிரச்னைக்கு அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை தெரிவித்தேன். வரும் நாட்களில் தொடர்ந்து தொடர்பில் இருக்கவும் முடிவு செய்தோம். இவ்வாறு அந்த அறிக்கையில் மோடி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

ManiMurugan Murugan
ஆக 18, 2025 23:23

அருமை வாழ்த்துக்கள்


sankaranarayanan
ஆக 18, 2025 21:01

இந்த கலந்துரையாடல் அமெரிக்க அதிபர் டிரம்பை இன்னும் ஆத்திரம் அதிகப்படுத்தும் என்ன செய்வது என்றே தெரியாமல் இந்தியா மீது 75 புள்ளி இன்னும் அகிகம் வரி போடுவார் ரஷ்யா இந்தியாவிற்கு கை கொடுக்கும்


KavikumarRam
ஆக 18, 2025 20:30

புடின் விளக்கம் கொடுத்தார் என்று சொல்வதே தவறான சொல்லாடல். புடின் உக்ரைன் பேச்சுவார்த்தை குறித்து இந்திய பிரதமருடன் கலந்துரையாடினார் என்று குறிப்பிடுவதே சரியானதாக இருக்கும். தற்போதைய உலக அரசியலில் பாரதத்திற்கு உறுதுணையாக நிற்பது ரஷ்யா மட்டுமே என்பதை மறந்துவிடக்கூடாது.


Vasan
ஆக 18, 2025 20:28

This has to be understood in a different manner. USA and USSR were the super powers in 1980. Now that Russian President is updating Indian Prime Minister on the developments of the discussion between the Presidents of USA and Russia tells about the rise of Indian Prime Minister in Global politics. Well done India and Indian Prime Minister.


அப்பாவி
ஆக 18, 2025 19:55

வாங்கற எண்ணெய்க்கு நேராவே வந்து விளக்கம் சொல்லணும்.


vivek
ஆக 18, 2025 20:12

எதுக்கு விளக்கம் கொடுக்கணும்


Ramesh Sargam
ஆக 18, 2025 19:45

பிரதமர் மோடியுடன் ரஷ்ய அதிபர் பேச்சு: டிரம்ப்பை சந்தித்தது குறித்து விளக்கம். அய்யய்யோ, இப்படி செய்தால் டிரம்புக்கு கோபம் வருமே. அவர் இந்தியா மீது மேலும் அதிக வரி விதிப்பாரே. நம்மிடையே நடந்த பேச்சுவார்த்தைகளை நீ ஏன் மோடியிடம் பகிர்ந்தாய் என்று புடினிடம் கோபித்துகொள்வாரே. இப்ப என்ன செய்யப்போறாரோ தெரியவில்லையே.


திகழ்ஓவியன்
ஆக 18, 2025 19:40

வந்தது புடின் இல்லையாமே அவரை போல் இருக்கும் 7 பேரில் ஒருத்தராம்


கிருஷ்ணமூர்த்தி,பரமக்குடி
ஆக 18, 2025 19:58

ஆமா உன்னைப் போன்று அறிவாலயத்தில் அடைப்பு எடுக்கும் ஏழு பேரில் ஒருத்தர் போலதான்...


Ramesh Sargam
ஆக 18, 2025 20:15

ஆமா உன்னைப் போன்று அறிவாலயத்தில் அடைப்பு எடுக்கும் ஏழு பேரில் ஒருத்தர் போலதான்...


Karthik Masagounder
ஆக 18, 2025 19:21

அப்பு, என்ன அப்பிடி கேட்டுடீங்க ...ஐரோப் நிலைமைய பாத்தா காசு கொடுத்தா நீங்களும் நானும் கூட வாங்கலாம் 1 மில்லியன் USD award எல்லாம் too much ஆக்கும்


கண்ணன்,மேலூர்
ஆக 18, 2025 19:50

மாப்பு அலாஸ்காவுல சும்மா அலற விட்டேன்ல இனிமே அந்த கோமாளி உங்கள வரி கிரின்னு சொல்லி மிரட்ட மாட்டாரு...


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
ஆக 18, 2025 19:12

ராகுல் விடியல் கும்பலுக்கு எரியுமே ,


spr
ஆக 18, 2025 18:54

"உக்ரைன் பிரச்னைக்கு அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும்" என்ற இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு வெற்றி கிடைத்தால் மோடிக்கு நோபல் பரிசு கிடைக்குமோ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை