உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வினாத்தாள் மோசடியால் 85 லட்சம் இளைஞர்கள் எதிர்காலம் பாதிப்பு: சொல்கிறார் ராகுல்

வினாத்தாள் மோசடியால் 85 லட்சம் இளைஞர்கள் எதிர்காலம் பாதிப்பு: சொல்கிறார் ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''கடந்த 10 ஆண்டுகளில் நீட், யுஜிசி நெட், யுபிஎஸ்சி, பீஹார் தேர்வு வாரியம் உள்ளிட்டவை நடத்திய 80க்கும் மேற்பட்ட வினாத்தாளில் வெளிப்படையாக மோசடி நடந்துள்ளது. இதனால், 85 லட்சம் பேரின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு உள்ளது,'' என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.எஸ்எஸ்சி எனப்படும் மத்திய அரசின் பணியாளர் தேர்வு வாரியம் ஜூலை 24 முதல் ஆக., 1 வரை பல்வேறு பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய கணினி வழியில் தேர்வு நடத்தப்படும் என அறிவித்தது. ஆனால், முதல்நாளில் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டன. தொழில்நுட்ப ரீதியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.இது தொடர்பாக ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 400 - 500 கிமீ தொலைவில் இருந்து தேர்வு எழுத வந்த இளைஞர்கள், தேர்வு மையத்தில் தங்கள் தேர்வு ரத்து செய்யப்பட்டதை அறிந்தனர். இந்த அமைப்பில் உள்ள குறைபாடுகள் காரணமாக வினாத்தாள் தொடர்ந்து கசிவு மற்றும் தேர்வு ரத்து செய்யப்படுவதால், லட்சக்கணக்கான இளைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் கடின உழைப்பு, நேரம் மற்றும் நம்பிக்கை வீணடிக்கப்படுகின்றன.கடந்த 10 ஆண்டுகளில் நீட், யுஜிசி நெட், யுபிஎஸ்சி, பீஹார் தேர்வு வாரியம் உள்ளிட்டவை நடத்திய 80க்கும் மேற்பட்ட வினாத்தாளில் வெளிப்படையாக மோசடி நடந்துள்ளது. இதனால், 85 லட்சம் பேரின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு உள்ளது. இவற்றை தடுக்க மத்திய அரசு தவறிவிட்டது. ஆட்சேர்ப்பு தேர்வுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் சீர்திருத்தம் என்ற வாக்குறுதிகள் வெற்று என நிரூபணம் ஆகி உள்ளது.இதற்கு அரசின் திறமையின்மை, நிர்வாக ஊழல் மற்றும் தேர்வு மாபியாக்களின் கூட்டணியின் விளைவாகும். இளைஞர்களின் கனவுகளுக்கு செய்யப்படும் இந்த துரோகம் நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Bhakt
ஜூலை 26, 2025 23:04

பாட்டையா பாப்போட பிறப்பு சான்றிதழ் மோசடியால் ஒட்டு மொத்த தேசத்துக்கே பாதிப்பு.


தாமரை மலர்கிறது
ஜூலை 26, 2025 21:33

கசிந்த வினாத்தாளை அப்படியே விடமுடியாது. அதனால் தான் அரசு மிகவும் பொறுப்பாக தேர்வை கான்சல் செய்து வேறொரு வினாத்தாளை செட் செய்கிறது. ராகுல் சொல்லும்படி அதே கசிந்த வினாத்தாளை கொடுத்தால், மோசமானவர்கள் வெற்றிபெறும் காலம் உருவாகும். அரசு பொறுப்பாக செயல்படுவதை ராகுல் கண்டிப்பது கேலிக்கூத்தாக உள்ளது.


தாமரை மலர்கிறது
ஜூலை 26, 2025 21:29

இவ்வளவு பெரிய நாட்டில் ஒரு சில இடங்களில் வினாத்தாள்கள் சில லஞ்சப் பேர்வழிகளால் கசிய செய்யும். இதை கடந்துதான் போகநேரிடும். தலையில் பேன் இருப்பதால், தலையை வெட்டமுடியாது. நாடு பத்து சதவீத அபிரிதமான வளர்ச்சியில் இருக்கும்போது இந்த சிறிய விஷயத்தை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.


Ramesh Sargam
ஜூலை 26, 2025 21:11

ராகுலின் எதிர்காலம் எப்படி இருக்காம்?


vadivelu
ஜூலை 27, 2025 09:54

இப்படியே இன்னும் 12 வருடங்கள் புலம்பியே வாழ வேண்டுமாம், அதனை பிறகு அரசியலை விட்டு விடுவாராம்.


G Mahalingam
ஜூலை 26, 2025 20:42

சோனியா காங்கிரஸ் இந்தியாவுக்கு எதிரி. இந்தியா மீது அக்கறை கிடையாது. கொள்ளை அடிப்பதில் காங்கிரஸ் திமுக கில்லாடி.


பாரத புதல்வன்
ஜூலை 26, 2025 20:28

மோடி தலைமையிலான அரசின் திட்டங்களை இந்த பப்புகான் எதிரக்கிறார்னா அந்த திட்டங்கள் அனைத்தும் நாட்டு மக்களுக்கு நன்மையான திட்டமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.


ஆரூர் ரங்
ஜூலை 26, 2025 19:55

எந்தத் தேர்வு மூலம் உங்கப்பா ஷாம் பிட்ரோடாவுக்கு அவ்வளவு பெரிய பதவியை அளித்தார்?


vadivelu
ஜூலை 26, 2025 19:48

பாவம் பதினோரு வருடங்களாக கத்தி கிட்டே இருக்கார்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை