உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வினாத்தாள் கசிவு: 10 ஆண்டு சிறை, ரூ.1 கோடி அபராதம்; பீஹார் சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்

வினாத்தாள் கசிவு: 10 ஆண்டு சிறை, ரூ.1 கோடி அபராதம்; பீஹார் சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: அரசு தேர்வுகளில் வினாத்தாள் கசிவை தடுக்க, பீஹார் சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது. வினாத்தாளை கசிய விட்டால், குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை, ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்படும். இந்தாண்டு நடந்த நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, ‛‛ ஜார்க்கண்டின் ஹசாரிபாக், பீஹாரின் பாட்னாவில், இளநிலை நீட் தேர்வு வினாத்தாள் கசிந்துள்ளன. இதில் எந்த சந்தேகமும் இல்லை'' என கூறியிருந்தது.இந்நிலையில்,அரசு தேர்வுகளில் வினாத்தாள் கசிவை தடுக்க, பீஹார் சட்டசபையில் இன்று (ஜூலை 24) மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது. வினாத்தாளை கசிய விட்டால், குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை, ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்படும்.அதேபோல், தேர்வு முறைகேடுகளுக்காக கைது செய்யப்படுபவர்களுக்கு ஜாமின் கிடைப்பதில் சிரமம் ஏற்படும். தண்டனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதால், இனி வருங்காலங்களில் பீஹார் மாநிலத்தில் வினாத்தாள் கசிவை தடுக்க உதவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

இராம தாசன்
ஜூலை 25, 2024 00:32

இந்த மாதிரி மசோதா தமிழகத்தில் வருமா? திராவிட கட்சிகளுக்கு தைரியம் இருக்க கொண்டு வர?


தாமரை மலர்கிறது
ஜூலை 24, 2024 19:03

தலையில் ஈர் இருக்கும் தான். ரோஜாவில் முள் இருக்கும் தான். நீட்டில் வினாத்தாள் கசியத்தான் செய்யும். ஜனநாயகத்தில் கள்ளஓட்டு இருக்கும் தான். அதற்காக ஜனநாயகம் வேண்டாம் என்று சொல்ல முடியுமா? அதுபோன்று நீட் இருக்கும் தான். என்ன தான் அழுதுபுரண்டு ஸ்டாலின் ஒப்பாரி வைத்தாலும், நீட் இருக்கும். இதற்கு ஒரே தீர்வு, படி, படித்து பாஸ் பண்ணு. அதைவிட்டு மாணவர்களை தற்கொலைக்கு தூண்டிவிட்டு, அதைவைத்து அரசியல் செய்யக்கூடாது.


sundarsvpr
ஜூலை 24, 2024 17:12

வினாத்தாள் கசிவுக்கு தண்டனை தண்டனை வழங்குவது ஒரு தீர்வு கிடையாது. வினா தாள்களை தேடி மாணவர்கள் செல்வது ஏன்? மாணவர்கள் பாடத்தை கிரகிக்கும் அறிவு இல்லையா அல்லது கற்பிக்கும் திறன் ஆசிரியருக்கு இல்லையா? குரு மாணாக்கன் என்ற குருகுல வாசம் இல்லை. தாய் குழந்தை தந்தை மகன் மகள் ஆசிரியர் மாணாக்கன் தெய்வம் அடியார்கள் என்ற உறவு குறைந்துவிட்டது. பள்ளியில் படித்ததை நினைவு கூறவேண்டும் அதற்கான நேரம் அதிகாலை 4 முதல் ஐந்து மாலை ஆறு முதல் எட்டு. தேக பயிற்சி அவசியம் காலை ஒரு மணி நேரம். மாலை ஒரு மணிநேரம்.


கனோஜ் ஆங்ரே
ஜூலை 24, 2024 19:42

-// தாய் குழந்தை தந்தை மகன் மகள் ஆசிரியர் மாணாக்கன் தெய்வம் அடியார்கள் என்ற உறவு//// சார்... நீங்க 2024ல இருக்கீங்க சார்... இந்த 2024ல தாய், குழந்தை, தந்தை, மகன் இந்த உறவுகளெல்லாம் இருப்பதாக கற்பனை செய்து கொள்ளலாமே தவிர... ஒவ்வொரு சிற்றூர் முதல் மாநகரம் வரை முளைத்துள்ள “முதியோர் இல்லம்” என்ற பெயரிலும், வசதியான தாய், தந்தையர் தங்கிட “வசதியான வயதானோர் ஃபாரம் அவுஸ்”.. என்ற பெயரில்... “தங்க கூண்டில் அடைக்கப்பட்ட கிளி”களாய் இருக்கிறார்கள்... அடுத்து.. நீங்க சொன்ன “ஆசிரியர் மாணாக்கன்”.... இப்பதான் தினசரி செய்திகளிலும் ஊடகங்களிலும் சமூகவலைதளங்களிலும் பார்க்கிறோமே... பத்தாம் வகுப்பு மாணவன், ஆசிரியையுடம் ஓட்டம்... ஓடி திருமணம்... அத்துடன்... பள்ளி மாணவி, ஆசிரியருடன் ஓட்டம்” என... இதுவா குரு பக்தி... அப்புறம் இறுதியாக “தெய்வம் அடியார்கள்”... இதுவும் இந்த கலிகாலத்தில் தினசரி செய்திகளாய் வருகிறதே... அடியார்கள் எனப்படும் சாமியார்கள் செய்யும் அட்டூழியும்... அதுவும் சில நிகழ்வுகளில் கடவுளின் கர்ப்பகிருகத்துக்குள்ளே...? பழைய பஞ்சாங்க காலம் மாதிரி... குரு-சிஷ்யன், ஆண்டவன்-அவனுக்கு தொண்டு செய்யும் அடியார், மாதா, பிதாவை வணங்கி வாழ்ந்த அந்த காலம் இதெல்லாம் இந்த 2024 ஆண்டில் கற்பனைக் கதைகளாய்... காவியமாய்... இதிகாசமாய்தான் இருக்கிறது...


மேலும் செய்திகள்









புதிய வீடியோ