உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பார்லி.,யில் எம்.பி.,க்களுக்கு ராகி இட்லி, சோள உப்புமா ரெடி

பார்லி.,யில் எம்.பி.,க்களுக்கு ராகி இட்லி, சோள உப்புமா ரெடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் வரும் 21ல் துவங்க உள்ளது.இந்நிலையில், பார்லிமென்ட் உணவகத்தில் எம்.பி.,க்களுக்கு வழங்கப்படும் உணவு பட்டியலில் மிகப்பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.பார்லிமென்ட் உணவகத்தில் எம்.பி.,க்களுக்கு இனி, சைவ உணவுகளாக ராகி இட்லி, சோள உப்புமா, தானிய பாயசம், பாசிப்பருப்பு தோசை, காய்கறி சூப், தக்காளி ரோஸ்ட், பார்லி அல்லது சோளம் சாலட், கார்டன் பிரஷ் சாலட் போன்றவை இடம்பெறும். இதேபோல் அசைவ உணவுகளாக கிரில்டு சிக்கன் அல்லது மீன் வகைகளுடன் வேகவைத்த காய்கறிகளும் பரிமாறப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர எம்.பி.,க்களுக்கு ஹெர்பல் டீ, சர்க்கரை சேர்க்கப்பட்ட சோடாக்களுக்கு பதிலாக மாம்பழம் உள்ளிட்ட பழ வகைகளில் செய்யப்பட்ட பானம் வழங்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

அப்பாவி
ஜூலை 17, 2025 16:08

களி கூட போடலாம். ராகி மொத்த. கர்னாடகாவில் ஃபேமஸ்


vbs manian
ஜூலை 17, 2025 09:10

ஐயோ சோலே சன்ன மசாலா ஆலு பரோட்டா ஜிலேபி கீர் சாப்பிட்ட வாய்க்கு இதெல்லாம் பிடிக்காது. வியாபாரம் டல்லடிக்கும்.


அருண், சென்னை
ஜூலை 17, 2025 08:23

தமிழகத்தில் இருந்து 40 பேர் காணாம போயிருப்பார்கள், இனி டெல்லி பக்கமே போகமாட்டார்கள்...


Gowtham
ஜூலை 17, 2025 08:17

இதுக்குனே 49 பேர் இங்க இருந்து வருவாங்க


ramani
ஜூலை 17, 2025 06:01

நல்லா வெட்டுவெட்ட தமிழகத்தில் இருந்து நாங்க தயார்


Kasimani Baskaran
ஜூலை 17, 2025 03:43

நல்லதுதானே...


சிட்டுக்குருவி
ஜூலை 17, 2025 02:57

மக்கள் வரிப்பணத்தில் சலுகை விலையில் வழங்கப்படும் என்று நினைக்கின்றேன் .அப்படி இருக்கும்பட்சத்தில் அசைவ உணவு வழங்ககூடாது .அப்படிவழங்கும்பட்சத்தில் விலையில் சலுகைகூடாது .


முக்கிய வீடியோ