உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்: காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கேட்டு பிரதமருக்கு ராகுல் கடிதம்

வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்: காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கேட்டு பிரதமருக்கு ராகுல் கடிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வரும் பார்லிமென்ட் கூட்டத்தொடரில் ஜம்மு காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க சட்ட மசோதா கொண்டு வர வேண்டும் என லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வலியுறுத்தி உள்ளார்.கடந்த 2019ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டாக பிரித்து யூனியன் பிரதேசமாக மாற்றியது.காஷ்மீரில் நிலைமை மேம்பட்டதும், மாநில அந்தஸ்து வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்து இருந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ogb2vive&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் ராகுல் கூறியுள்ளதாவது: யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து அளிக்கும் வகையில், வரும் பார்லிமென்ட் கூட்டத்தொடரில் சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும். பல கூட்டங்களிலும், தனிப்பட்ட முறையிலும், காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என அரசு உறுதிபூண்டுள்ளதாக வாக்குறுதி அளித்துள்ளீர்கள். கடந்த 2024ம் ஆண்டு மே 19 ல் புவனேஸ்வரில் அளித்த பேட்டி ஒன்றில், காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவது என்ற வாக்குறுதியில் உறுதியாக நிற்கிறோம் என்றீர்கள். 2024 செப்., 19ல் ஸ்ரீநகரில் பேசும்போதும், மாநில அந்தஸ்து வழங்குவது என பார்லிமென்டில் பேசி உள்ளோம் எனக்கூறி உள்ளீர்கள்.ஒரு மாநிலம் யூனியன் பிரதேசமாக மாற்றப்படுவது இதுவே முதல்முறையாகும். கடந்த ஐந்து ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநில அந்தஸ்து வேண்டும் என கேட்டு வருகின்றனர். அது அவர்களது அரசியல்சாசன மற்றும் ஜனநாயக உரிமை. இவ்வாறு அந்த கடிதத்தில் ராகுல் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

ராமகிருஷ்ணன்
ஜூலை 17, 2025 03:36

ராவுலு சொல்கிறார் என்றால் ஏதோ சதி நடக்கிறது என்று அர்த்தம். காஷ்மீரில் மட்டும் எப்போதும் ராணுவ ஆட்சி தான் நடக்கட்டும். தேர்தல் கூடாது


Ramesh Sargam
ஜூலை 16, 2025 19:29

காஷ்மீர் மக்களுக்கு நல்லது எதுவோ அதை பிரதமர் கட்டாயம் செய்வார், இப்பவும் செய்துகொண்டிருக்கிறார்.நீங்கள் ஒன்றும் கடிதம் எழுதவேண்டாம் ஏதோ காஷ்மீர் மக்கள் மீது அதிக அக்கறை உள்ளதுபோல காட்டிக்கொள்ள.


தாமரை மலர்கிறது
ஜூலை 16, 2025 19:04

தீவிரவாதிகளை தூண்டிவிடுவது ராகுலின் வேலை.


Bhakt
ஜூலை 16, 2025 18:57

உளவு துறை இவரை நோட்டமிட்டால் சீன,பாகிஸ்தான் சதிகளை தெரிந்து கொள்ளலாம்


Sudha
ஜூலை 16, 2025 18:34

நிலைமை சீரடைந்த பிறகு-உங்கள் திருவையாறு நிலைமை சீரடைந்ததாக சொல்லி விடுங்கள்.பார்லிமெண்ட்டில் பாராட்டி விடுங்கள்.முடிவுக்கு வந்து விடும். இது முதிர்ந்த தலைவர் செய்வது.


ஈசன்
ஜூலை 16, 2025 18:03

இசுலாமியர்கள் அதிகம் வாழும் மாநிலத்தின் மீது இவருக்கு எப்போதும் அதிக அக்கறை உண்டு.


GMM
ஜூலை 16, 2025 17:51

காஷ்மீர் ஆவணங்கள் உருது மொழியில் உள்ளன. உருது தெரிந்தால் தான் வேலை. அது இந்திய மொழி இல்லை. காஷ்மீர் மாநில அந்தஸ்து பிரிவினைக்கு வழி வகுக்கும்.? இந்தியா 4 மாகாணங்கள் ஆக்கி, தாய் மொழி, அதிகம் பேசும் மொழி மாகாணமொழியாக அங்கீகரிக்க வேண்டும்.


ஆரூர் ரங்
ஜூலை 16, 2025 17:07

காங்கிரஸ் ஒவ்வொரு தேர்தலின் போதும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வாக்குறுதியளித்து ஏமாற்றுவது வழக்கம்.


பேசும் தமிழன்
ஜூலை 16, 2025 17:02

பப்பு நீ பேசாமல் உன் அபிமான பாகிஸ்தான் அல்லது சீனா நாட்டுக்கு கடிதம் எழுதலாமே.... எதற்க்கு இந்த நாடகம்.... இந்திய மக்கள் யாரும் உன்னை நம்ப தயாராக இல்லை.


Ramona
ஜூலை 16, 2025 16:20

இந்த ஆள் படுத்தர பாடு தாங்க முடியல, பேசாம பக்ரைன்லயே இருந்திருக்கலாமே அப்போ அப்போ இந்தியாக்கு வந்து தொல்ல கொடுப்பது ,இல்ல உளறிவிட்டு மன்னிப்பு கேட்பதுதான் செய்யும் ஒரே உறுபடியான தொழில்