உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எத்தனை விமானங்களை பாக்., வீழ்த்தியது ராகுல் கேள்வி

எத்தனை விமானங்களை பாக்., வீழ்த்தியது ராகுல் கேள்வி

நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் பேட்டி என்ற பெயரில் வெளியான வீடியோவில், 'ஆப்பரேஷன் சிந்துார் துவக்க நிலையில், பாக்.,குக்கு ஒரு செய்தியை தெளிவாக சொன்னோம். ராணுவத்தை தாக்கவில்லை; பயங்கரவாத கட்டமைப்புகளையே தாக்குவோம் என்றும், ராணுவம் தலையிட வேண்டாம் என்றும் கூறினோம். அதை பாக்., ஏற்கவில்லை' என கூறியிருந்தார். இந்த வீடியோவை சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்ட ராகுல், 'தாக்குதலுக்கு முன்பே, பாகிஸ்தானுக்கு தகவல் தெரிவித்தது குற்றம்' என கூறியிருந்தார். இந்நிலையில், அதே வீடியோவை தன் சமூக வலைதளத்தில், ராகுல் நேற்று மீண்டும் பதிவிட்டு, மறுபடியும் கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில், 'வெளியுறவு அமைச்சரின் மவுனம் மிகவும் மோசமானது; சாபக்கேடானது. எனவே, மீண்டும் கேட்கிறேன். பாகிஸ்தானுக்கு முன்கூட்டியே தெரிந்ததால், எத்தனை விமானங்களை இந்தியா இழந்தது? இதை வெறும் தவறு என கூற முடியாது; இது ஒரு குற்றம். இந்த தேசத்துக்கு உண்மை தெரிய வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார். - நமது டில்லி நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 62 )

என்றும் இந்தியன்
மே 21, 2025 16:35

ரவுல் வின்சி நீ இந்தியனாக மாறு உனக்கு எல்லாம் புரியும்


K V Ramadoss
மே 21, 2025 16:14

ராகுல் காந்திக்கு நம் நாட்டின் மேல் அக்கறை இல்லை . மோதியை அவமானப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு நம் நாட்டையே, நம் நாட்டு படை வீரர்களையே அவமானப்படுத்துகிறார். இவரை நாம் அனைவரும் அவமான படுத்த வேண்டும். புறக்கணிக்க வேண்டும்.


rasaa
மே 21, 2025 10:13

பதவி வெறி. மக்கள, நாடு எதுவும் பெரிதல்ல .


Yes your honor
மே 21, 2025 10:02

வெளிநாடுகளுக்கு சென்றால் இந்தியாவைப் பற்றி தவறாக திரித்துக் கூறுவது. இந்தியாவில் இருந்துகொண்டே இந்தியாவின் இறையாண்மைக்கும், பாதுகாப்பிற்கும் எதிராக பேசுவது, செயல்படுவது. திடீர் திடீர் என இந்தியாவை விட்டு கண்ணாமல் போவது மற்றும் இவனின் இவைபோன்ற அனைத்து நடவடிக்கைகளையும் கூர்ந்து கவனித்தால் இவன் ஓர் இந்தியனே அல்ல என்பது போலத்தான் படுகிறது. இவன் கூறும் வார்த்தைகளும், இவனின் செயல்பாடுகளையும் பார்த்தால் உண்மையில் இவர் ஒரு மிகமிக டேஞ்சர் பேர்வழி.


V.Mohan
மே 21, 2025 08:04

ஒரு சாதாரண விஷயம் இந்த மகானுபாவருக்கு தெரியவில்லை. ஒரு நாடு ராணுவத்தால் அடைந்த வெற்றிகளை பதிவு செய்வது மட்டுமே முக்கியம். போரில் இழந்த வீரர்களைப்பற்றியும் அவரது வீரத்தை பற்றியும் சொல்வது பெரிய கெளரவம். இதையெல்லாம் விட்டுவிட்டு நமது ராணுவம் இத்தனை இத்தனை தளவாடங்களை இழந்துவிட்டது,இத்தனை தளவாடங்களை எதிரிகள் கைப்பற்றினர் என்பது மாதிரி விவரங்களை எந்த புத்தியுள்ள ராணுவ தலைமையும் சொல்லாது.அவை ராணுவ ரகசியம் என்று ஏற்றுக் கொள்ளப்பட்ட விஷயம். அதுவுமில்லாமல் எதிரியை தடம் தெரியாமல் அழித்தோம் என்பது தான் பெருமையே ஒழிய , தளவாட இழப்புகள் பெரிதல்ல. இவ்வளவு குறிப்பாக பேசும் அறிவாளி ராகுல்ஜி அவர்கள் 1971ல், இப்போது துரோகிகளாக மாறிய பங்களாதேச விடுதலை போரில், உங்கள் பாட்டி இந்திரா நமது ராணுவத்தை ஈடுபடுத்தியதால் அவர்களுக்கு என்னென்ன இழப்புகள் ஏற்பட்டது என்பதற்கு கணக்கு நீங்கள்,காங்கிரஸ் தான் தர இயலும்- தாருங்கள். சரணடைந்த 90,000 பாகிஸ்தானிய ராணுவகொலைகார வீரர்களை, திரும்ப அழைத்துச் செல்ல பாகிஸ்தான் வேண்டுமென்றே மாதக்கணக்கில் தாமதம் செய்தனர். அதனால் அந்த பாகிஸ்தான் ராணுவத்தினரை பிரியாணி போட்டு செல்லம் கொஞ்சி மாதக்கணக்கில் போர்கைதியின் சம்பளமும் கொடுத்து இந்தியாவை போண்டி ஆக்கிய விஷயம் பற்றி வெள்ளை அறிக்கை விட்டால் காங்கிரஸ் நாண்டுக்க வேண்டி வரும். வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் பாக். ராணுவத்தின் பொய்களை உடனே பிரசுரம் செய்வர். அவர்களிடம் ஆதாரங்கள் இருந்தால் அவற்றை பெற்று உங்கள் "சொந்த" நாட்டுப பற்றை காண்பிக்கலாமே, திரு. ராகுல் காந்திஜி அவர்களே


K V Ramadoss
மே 21, 2025 16:16

ராகுல் ஜி என்ன வேண்டிக்கிடக்கிறது


ஜெய்ஹிந்த்புரம்
மே 21, 2025 00:26

மோடிஜியோட டிகிரி சர்டிபிகேட்டை கேட்டா மாதிரி இருக்கு. இருந்தா காட்டியிருக்க மாட்டோமா ?? கடிச்சி குதறுவானுங்க. பதிலை சொல்லமாட்டாங்க.


RRR
மே 21, 2025 11:32

கரெக்ட்டா ஆஜராகிட்டான்யா


Keshavan.J
மே 25, 2025 08:25

இதுக்கெல்லாம் என்ன அர்த்தம் தெரியுமா ...


Rajasekar Jayaraman
மே 20, 2025 20:16

எந்த தைரியத்தில் தேச விரோதமாக பேசி திரிகிறார் இவரை உடனடியாக கைது செய்து தேச துரோக வழக்கு போடவேண்டும்.


Mecca Shivan
மே 20, 2025 16:54

பப்பு விடாமல் கேட்பதை பார்த்தல் சீன தொடர்பிலிருந்தோ அல்லது பாகிஸ்தானிய கூட்டாளிகளிடமிருந்தோ எதோ செய்தி வந்துள்ளது ..அவரின் கூட்டாளிகள் யாரு என்பதையும் அரசு கண்டுபிடிக்கவேண்டும் ..மத்திய அரசும் இவருக்கு பதில் சொல்லவேண்டும்


சந்திரன்,போத்தனூர்
மே 20, 2025 19:28

அதிலென்ன சந்தேகம்.சீனாவுடன் ஒப்பந்தம் போட்ட கட்சியாச்சே காங்கிரஸ் கட்சி


naranam
மே 20, 2025 16:03

பாகிஸ்தானின் இந்த இந்திய இத்தாலியக் குரல் ஓய்ந்தால் தான் நம் நாடு உலக அரங்கில் பெருமை அடையும். இவர் ஒருவனால் மட்டுமே na நாட்டுக்குப் பெரிய இழுக்கு. சீனா அமெரிக்காவிடம் வாங்கிய காசுக்கு விடாமல் கூவி நம் நாட்டையும் இராணுவத்தையும் அவமானப் படுத்துகிறார்.


Raghavan
மே 20, 2025 15:59

நம்முடைய ஊரில் சிலபேர் கிறுக்கன் மாதிரி பேசுவதை அவன் ஒரு சென்னை 10 - அதாவது - கீழ்ப்பாக்கம் என்று சொல்லுவார்கள். அதோட இதுவும் ஒன்று என்று போய் வேறு ஏதேனும் வேலையை பார்க்கலாம்.