உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கட்சி கூட்டத்துக்கு தாமதமாக வந்த ராகுலுக்கு தண்டனை

கட்சி கூட்டத்துக்கு தாமதமாக வந்த ராகுலுக்கு தண்டனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

போபால்: மத்திய பிரதேச மாநிலம் பச்மர்ஹியில் நடந்த காங்., கூட்டத்திற்கு தாமதமாக வந்த ராகுல், அதற்கு தண்டனையாக 10 தண்டால் எடுத்தார். மத்திய பிரதேசத்தில் காங்., தொண்டர்கள் கட்சி பணியாற்றுவதற்கு பயிற்சி அளிக்கும் கூட்டத்திற்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தக் கூட்டம், கட்சியின் பயிற்சி பொறுப்பாளர் சச்சின் ராவ் தலைமையில் நடந்தது. இதில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலும் பங்கேற்பதாக இருந்தது. பயிற்சிக் கூட்டம் குறிப்பிட்ட நேரத்தில் துவங்கிய நிலையில், பீஹாரில் நேற்று மாலையுடன் ஓய்ந்த இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரத்தில் ராகுல் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். இதனால், மத்திய பிரதேசத்தில் நடந்த பயிற்சி கூட்டத்தில் அவர் தாமதமாக பங்கேற்க நேர்ந்தது. அப்போது தாமதமாக வருவது விதியை மீறிய செயல் என சச்சின் ராவ் கூற, அதற்கான தண்டனையை ஏற்கத் தயார் என ராகுல் பதில் அளித்தார். இதையடுத்து குறைந்தபட்சம் 10 தண்டாலாவது போட வேண்டும் என சச்சின் ராவ் பணித்தார். அதை ஏற்று, ராகுல் 10 தண்டால் எடுத்தார். ராகுலை போல, கூட்டத்திற்கு தாமதமாக வந்த மாவட்ட காங்., தலைவர்களும் உடல் வியர்க்க தண்டால் எடுத்தனர்.இதனால், காங்.,கின் பயிற்சி கூட்டம் வேடிக்கை கூட்டமாக மாறியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Anbuselvan
நவ 10, 2025 10:09

ஒ. கட்சியில் ஜனநாயகம் இருக்காம். தலைவராக இருந்தாலும் தப்பு செய்தால் தண்டனை அனுபவிக்க வேண்டுமாம். பேஷ் பேஷ்.


Shekar
நவ 10, 2025 09:48

நடிக்காதீங்க


Sun
நவ 10, 2025 08:36

இந்த விசயத்திற்காக ராகுலை பாராட்டலாம். இங்கே ஒருவர் ஏழெட்டு மணி நேரம் தாமதம் 41 உயிர்கள் பலி. எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இன்றி அடுத்தவர் மீது பழி போடுவதிலேயே குறி!


sankaranarayanan
நவ 10, 2025 07:50

கட்சியை விட்டே விலக்குவதுதான் ராகுலுக்கு சரியான தண்டனை அதையே நிறைவேற்றுங்கள்


பேசும் தமிழன்
நவ 10, 2025 07:41

பப்பு... குசும்புக்காரர்..... காலையில் உடற்பயிற்சி செய்யாமல் இருந்து இருப்பார்... அதை அங்கே வந்து செய்து இருக்கிறார்... அவ்வளவு தான்.... தண்டனை என்றால் காதை பிடித்து கொண்டு தோப்புக்கரணம் அல்லவா போட்டு இருக்க வேண்டும்.... பப்பு செய்யும் காமெடியில் இதுவும் ஒன்று.....நீ நடத்து ராசா.... உன்னை யாரும் மனிதனாகவே மதிப்பது இல்லை.


Barakat Ali
நவ 10, 2025 06:26

மிகவும் கடும் தண்டனையாக இருக்கிறதே ????


Kasimani Baskaran
நவ 10, 2025 03:56

தாமாதமாக வந்தாலும் தானாக வந்தார் என்று உருட்ட நல்லதொரு வாய்ப்பு.


Velan Iyengaar, Sydney
நவ 10, 2025 02:14

பைத்திய கார கூட்டம். உலகிலேயே சிறந்த எதிர் கட்சி