உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அவதுாறு வழக்கில் ராகுலுக்கு ஜாமின்

அவதுாறு வழக்கில் ராகுலுக்கு ஜாமின்

புனே: வீர் சாவர்க்கர் குறித்து அவதுாறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கு சிறப்பு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனில், 2023 மார்ச்சில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், சுதந்திர போராட்ட வீரர், வீர் சாவர்க்கர் குறித்து அவதுாறாக பேசியதாக, பா.ஜ.,வினர் கண்டனம் தெரிவித்தனர். இது குறித்து, மஹாராஷ்டிராவின் புனே போலீசில், வீர் சாவர்க்கர் பேரன் சத்யாகி புகார் அளித்தார்.இதன்படி ராகுல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கு, புனேயில் உள்ள எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, நீதிமன்றத்தில் ராகுல் ஆஜரானார். வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி அமோல் ஷிண்டே, ராகுலுக்கு ஜாமின் வழங்கினார்.மேலும், இந்த வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து ராகுலுக்கு நிரந்தர விலக்களித்து உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை பிப்., 18க்கு ஒத்தி வைத்தார்.இனிமேல் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் போது மட்டும் ராகுல் நேரில் ஆஜரானால் போதும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை