உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவின் நம்பர் 1 தீவிரவாதி ராகுல்; போட்டுத்தாக்கினார் மத்திய அமைச்சர்!

இந்தியாவின் நம்பர் 1 தீவிரவாதி ராகுல்; போட்டுத்தாக்கினார் மத்திய அமைச்சர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியாவின் நம்பர் 1 தீவிரவாதி யார் என்றால் நான் காங்கிரஸ் எம்.பி., ராகுலைத்தான் கூறுவேன் என்று மத்திய இணை அமைச்சர் ரவ்நீத்சிங் பிட்டு கடுமையாக விமர்சித்துள்ளார். அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்த காங்கிரஸ் எம்.பி., ராகுல் வாஷிங்டனில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கூட்டத்தில் சீக்கியர்கள் குறித்து பேசினார். அப்போது அவர், இந்தியாவில் ஒரு சீக்கியர், தலைப்பாகை அணிய அனுமதிக்கப்படுவாரா, குருத்வாராவுக்கு செல்ல அனுமதிக்கப்படுவாரா, அதற்கே இங்கு சண்டை நடக்கிறது என்று பேசி இருந்தார்.ராகுலின் இந்த கருத்துக்கு பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பல்வேறு சீக்கிய அமைப்பினரும் விமர்சித்து வருகின்றனர். இந் நிலையில் மத்திய இணை அமைச்சர் ரவ்நீத்சிங் பிட்டு, இந்தியாவின் நம்பர் 1 தீவிரவாதி ராகுல் என்று விமர்சித்து உள்ளார்.இது குறித்து அவர் கூறி உள்ளதாவது; ராகுல் தமது தாய்நாட்டை அதிகம் நேசிப்பது இல்லை. என் கருத்துப்படி அவர் ஒரு இந்தியரும் அல்ல. ஏன் என்றால் வெளிநாடுகளுக்குச் சென்று தவறாக நமது நாட்டை பற்றி பேசுகிறார். அவரின் பேச்சுக்களை பிரிவினைவாதிகள், வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் தயாரிப்பவர்கள் தான் பாராட்டி உள்ளனர் என்றால் அவர் தான் நம்பர் 1 தீவிரவாதி. என் கருத்துப்படி யாரையாவது அல்லது நாட்டின் மிக பெரிய எதிரியை பிடித்தால் வெகுமதி அளிக்கப்பட வேண்டும் என்றால் அது ராகுல் தான். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

venugopal s
செப் 16, 2024 12:17

பாஜகவினர் எல்லோரும் வெறும் வாய்ச் சவடால் பேர்வழிகள் என்று மீண்டும் ஒரு முறை நிரூபித்து விட்டார்கள்! ஆதாரம் இருந்தால் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே?


veeramani
செப் 16, 2024 09:04

இந்திய உன்னை அண்டத்தின் மதிப்புமிக்க பா ர்லிமெண்டேன் எதிர்க்கட்சி தலைவர் திரு ராகுல் .......இவருக்கு வெளியிடங்களில் எப்படி பேசவேண்டும்ம் என தெரியவில்லை. அமெரிக்கா எப்போதும் இந்திய முன்னேறட்டுவதை பொறுத்துக்கொள்ளாத ஒரு கீ ழ்தரமான நாடு. அங்கு என்று இந்திய பூர்வகுடி மக்கள் சீக்கியர்களை பற்றி தவறாக பேசினது மன்னிக்க முடியாத ஒரு இழிசெயல் . மகான் குருநானக், குரு கோவிந்தசிங் போன்ற சமய பெரியவர்கள் ஏற்படுத்திய சிக்கியா மதம் . இந்தியாவின் பொக்கிஷம் . இந்திய ராணுவத்திலும், தொழில் புரட்சியில் சீக்கியர்களின் பங்களிப்பு மிக மிக அதிகம் . எனவே ராகுல் பேசியது மிகவும் வன்மையாகவும் கண்டிக்கத்தக்கது.


RAMAKRISHNAN NATESAN
செப் 16, 2024 08:56

ராகுலை பேச விட்டால்தான் ஹிந்துத்வா வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் நமக்குக்கிடைக்கும் என்று பாஜக நினைக்க வாய்ப்பு .... ஆனால் ராகுல் அதிகம் பேசுவது பாஜகவின் இயலாமையை எடுத்துக்காட்டுவதாக ஹிந்துத்வா வாக்காளர்கள் நினைத்தால் என்னவாகும் ????


N.Purushothaman
செப் 16, 2024 07:24

ராவுல் மீது நடவடிக்கை எடுத்தால் அனுதாபம் கிடைத்துவிடுமா என்கிற மாயையிலிருந்து மத்திய அரசு வெளியே வர வேண்டும் ...தப்பு செய்ததற்கான முகாந்திரம் இருந்தால் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் ...


venugopal s
செப் 16, 2024 07:11

அதுசரி, இப்படிப்பட்ட ஒரு தீவிரவாதியின் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல்,கைது செய்யாமல், சுதந்திரமாக உலவ விட்ட கையாலாகாத மத்திய பாஜக அரசு மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம்? இதற்குப் பெயர் தான் கூட்டுக் களவாணியோ?


Hari
செப் 16, 2024 11:46

Even venugopal accepted Rahul as terrorist... How he will get rs 200? In future


N.Purushothaman
செப் 16, 2024 06:25

பப்புவின் இந்திய எதிர்ப்பு என்பது கேடு கெட்டது ..அதுவும் அவரின் பிரிவினைவாத பேச்சு பயங்கரவாதத்திற்கு சமமானது ...


xyzabc
செப் 16, 2024 01:43

Imagine RG becoming PM. That will be unimaginable. Hope not.


selliah ravichandran
செப் 15, 2024 22:09

yes he is a terraer for real indian people


Kasimani Baskaran
செப் 15, 2024 21:53

சீக்கியர்களை கொத்துக்கொத்தாக கொன்ற காங்கிரஸ் தீவிரவாதிகள் இன்னும் கூட வெள்ளையும் சொள்ளையுமாக சுற்றித்திரிகிறார்கள். காரணமே இல்லாமல் கொல்லப்பட்ட அப்பாவி சீக்கியர்களுக்கு நீதி வேண்டும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 15, 2024 21:51

எல்லோருக்கும் தெரிந்த உண்மை .......


சமீபத்திய செய்தி