ராகுல் காரணமல்ல!
பீஹார் சட்டசபை தேர்தலில் ராகுல் கடுமையாக பிரசாரம் செய்தார். அவர் சென்ற இடங்களிலெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதியது. கட்சியின் தோல்விக்கு அவர் காரணமல்ல; அவரது பிரசாரத்தை மக்களிடையே எடுத்து செல்வதில் நாங்கள் தோல்வி அடைந்து விட்டோம். இனி வரும் தேர்தல்களில் தீவிரமாக பணியாற்றுவோம். அகிலேஷ் பிரசாத் சிங் மூத்த தலைவர், காங்.,நாசவேலை!
மேற்கு வங்கத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தில் போலி வாக்காளர்கள், சட்ட விரோத குடியேறிகளை நீக்க ஓட்டுச்சாவடி நிலை அலு வ லர்கள் நடவடிக்கை எடுக்கும் போது, அதை தடுக்கும் நாச வேலையில் ஆளும் திரிணமுல் காங்., நிர்வாகிகள் ஈடுபடுகின்றனர். மேலும், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களை அவர்கள் மிரட்டுகின்றனர். சுவேந்து அதிகாரி மூத்த தலைவர், பா.ஜ.,
மற்றொரு முயற்சி!
மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் தரவுதளத்தில் இருந்து, அக்., 10 - நவ., 14 வரை, 27 லட்சம் தொழிலாளர்களின் பெயர்களை மத்திய அரசு நீக்கியுள்ளது. நாட்டின் கிராமப்புற ஏழைகளின் வேலைவாய்ப்பு உரிமையை பறிக்க, மற்றொரு முயற்சி நடக்கிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டும். ஜெய்ராம் ரமேஷ் பொதுச்செயலர், காங்.,