உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேர்தல் முடிவுக்கு பின் வெளிநாடு செல்ல ராகுல் திட்டம்: அமித்ஷா புது தகவல்

தேர்தல் முடிவுக்கு பின் வெளிநாடு செல்ல ராகுல் திட்டம்: அமித்ஷா புது தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: 'லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியான பின், ராகுலும், அகிலேஷ் யாதவும் வெளிநாடு செல்வதற்காக டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.உத்தர பிரதேச மாநிலம் சந்த் கபீர் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: முதல் 5 கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இதில் பா.ஜ., 310 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றி உள்ளது. காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளை கூட தாண்டவில்லை. அகிலேஷ் யாதவுக்கு 4 தொகுதிகள் கூட கிடைக்காது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானது. அதை நாங்கள் விரைவில் மீட்போம்.

இடஒதுக்கீடு

பாகிஸ்தான் இடம் அணுகுண்டுகள் இருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் கூறுகிறார்கள். பா.ஜ., வினர் அணுகுண்டுகளுக்கு பயப்படுவதில்லை. எஸ்.சி, எஸ்.டி, மற்றும் ஓ.பி.சி.,க்கான இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வர எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கிறது. இண்டியா கூட்டணிக்கு பிரதமர் வேட்பாளர் கூட இல்லை. லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியான பின், ராகுலும், அகிலேஷ் யாதவும் வெளிநாடு செல்வதற்காக டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர்.

3வது இடம்

ஒருபுறம், இத்தாலி, தாய்லாந்து, பாங்காக் என்று ராகுல் செல்கிறார். ஆனால் 23 ஆண்டுகளாக லீவு எடுக்காமல், எல்லையில் இருக்கும் ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை நரேந்திர மோடி கொண்டாடுகிறார். 3வது முறையாக மோடி பிரதமர் ஆகுவார். இந்தியா 3வது பெரிய பொருளாதார நாடாக மாறும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Rajinikanth
மே 23, 2024 21:36

ஆமாம், இவரு தான் டிக்கெட் வாங்கி குடுத்து அனுப்புறாரு அதன் எல்லா மேட்டரும் இவருக்கு தெரிஞ்சு இருக்கு போல வட இந்தியாவில் பேசும்போது மோடி, அமித் shah எல்லோரும் என்னவெல்லாம் மொக்கையாக பேசுகிறார்கள் என்று பாருங்கள் இதேயல்லாம் கேட்காதான் பிஜேபி வட இந்திய தொண்டர்கள் விரும்புறாங்க போல இருக்கு


ramesh
மே 23, 2024 20:38

ராகுல் வெளிநாட்டு போய் விடுவார் என்று சொல்லும் கூட்டம் தான் வரும் நான்காம் தேதிக்கு பின்பு வெளிநாட்டிற்கு சென்று விடும்


தமிழ்
மே 23, 2024 18:53

ராகுலாவது அவர் சொந்த காசில் வெளிநாடு டூர் போகிறார். ஆனால் இங்கே ஒருத்தர் அரசாங்கப்பணத்தில் அரசுப்பயணமாக போவதுபோல் பாவ்லா காட்டுகிறார்.


ஆரூர் ரங்
மே 23, 2024 20:11

நேரு அரசுமுறைப் பயணமாக அன்னியநாடுகளுக்குச் சென்றபோதெல்லாம் எந்தப் பதவியிலும் இல்லாத இந்திராவை நமது வரிப்பணத்தில் அழைத்துச் சென்று ஊர் சுற்றிக் காண்பித்தாரே.


Anbuselvan
மே 23, 2024 18:48

கேவலமாக தோற்று விட்டால் அரசியலிருந்து விலகுகிறேன் என நாடகமாடி விட்டு ஒரு மூன்று மாதம் வெளிநாட்டில் இருந்து விட்டு வரலாம்


Vathsan
மே 23, 2024 18:21

தேர்தல் முடிவு வந்தால் tour போவது யார் என்பது மக்களுக்கு நல்லாவே தெரியும் அமித்து அவன் அவன் காசுல வெளிநாடு போறான் உனக்கு என்ன வந்தது


முருகன்
மே 23, 2024 18:07

இப்படி சொல்லி ஓட்டு வாங்க வேண்டிய நிலை உள்ளது


kulandai kannan
மே 23, 2024 18:06

அதிரடியாகப் பேசுவதில் அமித்ஷாவை அடிச்சுக்க முடியாது


Ramanujadasan
மே 23, 2024 16:39

நிரந்தரமாக சென்று விட்டால் நல்லது அவருக்கும் , நமக்கும்


Senthoora
மே 23, 2024 17:59

முதலில் போவது உங்கள் தலைவர், பிஜேபி ஆட்சிக்கு வந்தால் உங்களுக்கு நல்லது அல்ல


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி