உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராகுல்- பிரியங்கா இடையே மோதல்: பாஜ

ராகுல்- பிரியங்கா இடையே மோதல்: பாஜ

புதுடில்லி: பாஜ செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஆகவும், ராகுலின் சகோதரியாகவும் இருக்கும் பிரியங்கா ராம்லீலா மைதானத்தில் பேச அனுமதிக்கப்படவில்லை. அவர் பேசுவதை ராகுல் தடுத்தாரா?இங்கு மட்டுமில்லை. மாதிரி பார்லிமென்ட் கூட்டத்தின் போதும் அவரை பேச அனுமதிக்கவில்லை. இரண்டாவது வரிசையில் பிரியங்காவுக்கு நாற்காலி நாற்காலி போடப்பட்டது. பிரியங்கா ஆதரவாளர்களால், ராகுல் ஆதரவாளர்கள் பாதுகாப்பு இல்லாதது போல் உணர்கின்றனர். இதனால், பிரியங்கா ஆதரவாளர்கள் ஓரங்கட்டப்படுகின்றனர். நாட்டு மக்களை பற்றியோ, காங்கிரசை பற்றியோ ராகுல் பேசவில்லை. மாறாக, அவர் பிரியங்காவை ஓரங்கட்ட மட்டுமே முயற்சிக்கிறார்.ராகுலுக்கும், பிரியங்காவுக்கும் இடையே நடக்கும் மோதலால் காங்கிரஸ் இரு பிரிவாக பிளவுபட்டுள்ளது. இந்த மோதலை மக்கள் பாப்கார்ன் சாப்பிட்டு கொண்டு வேடிக்கை பார்க்கின்றனர். இவ்வாறு பிரதீப் பண்டாரி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Vaduvooraan
நவ 03, 2026 07:00

தகவல் பொய்னு சொல்லல..ஆனால் உண்மையாக இருந்தால் நல்லாருக்கும் 150 கோடி மக்களைக் கொண்ட ஒரு பெரிய நிலப்பரப்பை ஆட்சி பண்ண கசக்கவா செய்யும்? நேரு குடும்பமாக இருந்தாலும் வசதியாக காந்தின்னு பெயரை வெச்சிட்டு இத்தனை நாள் பதவியை அனுபவிச்சிட்டு பாஜகவுக்கு அத்தனை சுலபமாக விட்டுக் கொடுத்துருமா அந்த கும்பல்? அதுதான் சந்தேகமாக இருக்கு கூட இருக்கற அத்தனை பயலுகள்ல ஒருத்தனுக்குக் கூட குடும்பத்தோட ஆதிக்கத்துல இருந்து வெளியே வரணும்ன்ற எண்ணம் துளிக் கூட கெடையாதுன்றதுனால குடும்ப உறுப்பினர்கள் அவிங்களுக்குள்ள சண்டை சச்சரவு இல்லாமல் தேசத்தை சுரண்டிட்டு சுகமாக இருக்கலாம்னுதான் நெனைப்பாங்க


சமீபத்திய செய்தி