உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மீன்தான் பிடிக்க முடியும், வேறு என்ன செய்யமுடியும்; ராகுலை விமர்சித்த மத்திய அமைச்சர்

மீன்தான் பிடிக்க முடியும், வேறு என்ன செய்யமுடியும்; ராகுலை விமர்சித்த மத்திய அமைச்சர்

பாட்னா: சத் பூஜையை நாடகம் என்று கூறும் ராகுல் மீன்தான் பிடிப்பார், அவரால் வேறு என்ன செய்யமுடியும் என்று மத்திய அமைச்சர் ஜிதன்ராம் மஞ்சி விமர்சித்துள்ளார்.பீஹாரில் முதல்கட்ட சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் ஓட்டு வேட்டை தீவிரம் அடைந்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி, எதிர்க்கட்சிகள் கூட்டணி என அனைத்து அரசியல் தலைவர்களும் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.பெகுசராய் பகுதியில் ஓட்டு வேட்டையில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, குளம் ஒன்றில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருப்பதைக் கண்டார். பின்னர் தாம் சென்ற படகில் இருந்து குளத்தில் குதித்த ராகுல், மீனவர்களுடன் மீன்பிடித்து ஓட்டு சேகரித்தார். ராகுலின் இந்த செயலுக்கு, கலவையான விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், மத்திய அமைச்சரும், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியின் தலைவருமான ஜிதன் ராம் மஞ்சி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் பாட்னாவில் நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது; அவரால்(ராகுல்) வேறு என்ன செய்யமுடியும்? வெளிநாட்டில் இந்தியாவை விமர்சித்து பேசுகிறார். பிரதமர் மோடியின் தாயாரை பற்றி அவதூறு செய்கிறார். சத் பூஜை கொண்டாட்டங்களை பற்றி இழிவாக பேசுகிறார்.அப்படிப்பட்டவர் மீன்தான் பிடிப்பார், வேறு என்ன அவரால் செய்ய முடியும்? இவ்வாறு ஜிதன்ராம் மஞ்சி பேட்டியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை