உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராகுலின் ஹைட்ரஜன் குண்டு வெறும் ஊசி பட்டாசு; மஹா., முதல்வர் பட்னவிஸ் கிண்டல்

ராகுலின் ஹைட்ரஜன் குண்டு வெறும் ஊசி பட்டாசு; மஹா., முதல்வர் பட்னவிஸ் கிண்டல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'ராகுலின் ஹைட்ரஜன் குண்டு வெறும் ஊசி பட்டாசு' என மஹாராஷ்டிரா முதல்வர் பட்னவிஸ் விமர்சித்துள்ளார்.இது தொடர்பாக நிருபர்களிடம், மஹாராஷ்டிரா முதல்வர் பட்னவிஸ் கூறியதாவது: இந்தியாவின் ஜனநாயகத்தை சீர்குலைக்க முயலும் வெளிநாட்டு சக்திகள் உடன் ராகுல் இணைந்து செயல்படுகிறார். ராகுலின் ஹைட்ரஜன் குண்டு, வெறும் ஊசி பட்டாசு.ராகுலின் செயல்பாடுகளும் நாட்டில் ஜனநாயகம் சரியாக நிலவுவதை விரும்பாத சர்வதேச சக்திகளைப் போலவே தெரிகிறது. இந்த சர்வதேச சக்திகளும் நாட்டின் ஜனநாயக நிறுவனங்கள் மீதான மக்களின் நம்பிக்கையை அகற்ற முயற்சிக்கின்றன. ராகுலும் அதையே செய்கிறார். இவ்வாறு பட்னவிஸ் கூறினார். ஏற்கனவே ராகுலின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என தேர்தல் கமிஷன் திட்டவட்டமாக மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

அப்பாவி
நவ 07, 2025 12:19

உங்களுக்கு அஜித்பவார் மகன் வெக்கிறதுதான் 1100 கோடி ரூவா அணுகுண்டு.


Indhuindian
நவ 07, 2025 04:50

ராகுல தப்பா எடை போட்டுட்டார் வூசி பட்டாசா நான் என்னவோ அது வெறும் புஸ்வாணம்னு நெனச்சேன்


oviya vijay
நவ 07, 2025 00:29

உலகத்திலேயே இவருடைய பாட்டியின் அரசு ஓட்டு திருட்டுக்கு பதவி நீக்கம் செய்யப்பட்ட து வரலாறு


rama adhavan
நவ 06, 2025 21:57

இவருக்கே பிரிட்டணிலும் குடியுரிமை உள்ளது என்று சு. சாமி தொடுத்த வழக்கு நிலுவையில் உள்ளது. அதற்கு விளக்கம் ஏன் இன்றுவரை சொல்லவில்லை?


M.Sam
நவ 06, 2025 20:30

ஊசி பட்டாசாக இருந்தாலும் அது ஒன்றும் நமத்து போன பட்டாசுச்சு இல்லை பட்டணவிசு பொருத்து இருந்து பாரு அது வெடிக்கும் சத்தம்


rama adhavan
நவ 06, 2025 21:50

உசிப்பட்டாசு ஊசிப்போன பட்டாசு தான். அது அணுகுண்டு ஆகாது. வெடிக்கவும் செய்யாது. ஒரு பொய் கதை சொல்லவே இவ்வளவு காலம். பதில் சொல்ல மாமாங்கம் ஆகலாம்.


தாமரை மலர்கிறது
நவ 06, 2025 20:25

தேர்தல் கமிஷன் எந்த தனிமனித தகவலையும் யாருக்கும் கொடுக்க தடை விதிக்க வேண்டும். ஏனனில் ஏதாவது ஒரு சிறு நமத்து போன துரும்பை ஊதி, பெரிய ஹைட்ரஜன் குண்டு என்று ராகுல் போன்றோர் பொய் பிரச்சாரம் செய்வார்கள்.


duruvasar
நவ 06, 2025 19:43

ஐயா அது கேஸ் ட்ரப்ளின் விளைவால் வந்த சப்தம்


Narayanan Muthu
நவ 06, 2025 19:41

திருடிய ஆட்சியில் திருடப்பட்ட வெற்றியில் பதவியை பிடித்து கொண்டிருக்கும் நபர் வேறு எப்படி பேசுவார்.


vivek
நவ 06, 2025 20:27

சொத்தையான முத்து எடுத்துவிட்டு நல்ல முத்து தான் மாலை கட்டணும்.....


rama adhavan
நவ 06, 2025 21:52

ஓ 2006-2011 ஆட்சியை சொல்லுகிறீரோ?


V Venkatachalam, Chennai-87
நவ 06, 2025 22:24

யாவாரியை இப்புடி போட்டு தாக்க கூடாது ஜென்டில்மேன்.


Velan Iyengaar, Sydney
நவ 07, 2025 11:15

200 க்கு தன் ஓட்டை விற்ற நீங்க எல்லாம் திருட்டை பற்றி பேசுவது


Vijay D Ratnam
நவ 06, 2025 19:36

பட்நாவிஸ் அவர்களே, எதிர்காலத்தில் நீங்கள் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் ஆவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக அறிகிறோம். அப்போதும் உங்களை எதிர்த்து கான்க்ராஸ் குடும்பத்தால் ராகுல்தான் நிறுத்தப்படுவார். ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். வேறு யாரவது புத்திசாலி, அறிவாளி, திறமைசாலி வந்துவிட்டால் நீங்கள் வெற்றி பெற ரொம்ப போராட வேண்டிய நிலை வரும் பட்நாவிஸ் அவர்களே. ஆதலால் இப்போதே ராகுலை ரொம்ப டேமேஜ் பண்ணாதீங்க. அவர் தேவை. அப்போதுதான் உங்கள் வெற்றி பிரகாசமாக இருக்கும்.


M Ramachandran
நவ 06, 2025 19:12

என்ன தான் ராகுலு முயற்சி செய்து பார்த்தாலும் பப்பு ஒன்னும் வேக மாட்டேங்குது. சிவப்பா இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் என்று நினைப்பு முன்பெல்லாம் மக்களிடம் இருந்தது. இப்போது அந்த பெயரையே மாத்தி காட்டியிருக்கு இந்த புள்ள.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை