உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மழையில் நனைந்த ராகுல்: திட்டமிட்ட நாடகம்

மழையில் நனைந்த ராகுல்: திட்டமிட்ட நாடகம்

சுதந்திர தினமான நேற்று, டில்லியில் மழை கொட்டித் தீர்த்தது. மழைக்கு மத்தியில் தேசியக்கொடி ஏற்றினார், எதிர்கட்சித் தலைவர் ராகுல். இதை, 'கொட்டும் மழையிலும் குடை கூட பிடிக்காமல், நனைந்தபடியே தேசப்பற்றுடன் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தினார் ராகுல். இப்படிப்பட்ட ஒரு தலைவர் இந்தியாவில் இல்லை' என்று காங்கிரசார் குதுாகலிக்கின்றனர். இது ஏற்புடையது அல்ல. காலை 11:30 மணிக்கு மேல் தான், டில்லியில் நேற்று மழை பெய்தது. தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்றால், காலையி லேயே செலுத்தி இருக்க வேண்டும். இதுதான் உண்மையான மரியாதை. அதை விடுத்து, 11:00 மணி வரையில் நன்கு துாங்கி விட்டு, மழை பெய்யும் நேரத்தில் வந்து, குடையில்லாமல் நனைந்த படியே தேசியக் கொடியை ஏற்றுவதும், அதை வைத்து பெருமை பேசுவதும், திட்டமிட்ட நாடகம். - அஸ்வத்தாமன் செயலர், தமிழக பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ