உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராகுல் பேச்சு எதிரொலி: அக்னி வீரர் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நிதி

ராகுல் பேச்சு எதிரொலி: அக்னி வீரர் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நிதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பாராளுமன்றத்தில் காங்., எம்.பி., ராகுல் பேசியதன் எதிரொலியாக இன்று அக்னி வீர் திட்டத்தில் தேர்வாகி பணியின் போது உயிரிழந்த வீரர் குடும்பத்திற்கு ரூ. 98 லட்சம் நிதி வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த 01 ம் தேதியன்று நடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும் காங். எம்.பி.,யுமான ராகுல் பேசினார். அதில் அக்னி வீர் திட்டத்தில் தேர்வானவர்களை, ராணுவ வீரர்கள் என கூறமுடியாத நிலை உள்ளது. ஆறு மாதங்கள் பயிற்சி தந்து அவர்களை பயன்படுத்திவிட்டு துாக்கி எறிகிறீர்கள். அவர்கள் உயிரிழந்தால் ஓய்வூதியம் கிடைக்காது. உதவியும் கிடையாது என்றார்.இதற்கு பதிலடியாக மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் , எதிர்க்கட்சி தலைவர் பொய் தகவல் சொல்கிறார். அக்னிவீர் திட்டத்தில் தேர்வானவர்கள் உயிரிழந்தால் ரூ. 1 கோடி வழங்கப்படுகிறது என்றார்.இந்நிலையில் இந்திய ராணுவம் தனது ‛ எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், அக்னிவீர் திட்டத்தில் தேர்வாகி பணியின் போது அஜய் குமார் என்ற வீரர் உயிரிழந்தார். அவருக்கு ரூ. 1 கோடி நிவாரணமும், இதர சலுகையாக ரூ. 65 லட்சம் என ரூ.1 கோடியே 65 லட்சம் செட்டில்மெண்ட் செய்யப்பட்டுள்ளது . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Mohan
ஜூலை 05, 2024 18:35

பொறுப்பற்ற ராகுலின் வீண் பேச்சு நாட்டில வேலை இல்லாத இளைஞர்கள் தீவிரவாதிகளின் வலையில் சிக்காமல் இருக்க திட்டத்தை ராணுவம் கொண்டு வந்தால் இந்த பொறுப்பற்ற மனிதன் அதில் அரசியல் செய்கிறார். இந்தாளுடைய தாத்தா ""மிக நேர்மை"" யான புத்திசாலித்தனத்துடன் ராணுவத்திற்கு புதிய துப்பாக்கி கூட வழங்காததால் சீனரிடம் நமது நாட்டின் பகுதிகளையும், ""மானத்தையும்""" இழந்தோம். சீனப்போர், 1965 பாகிஸ்தான் போர், பங்களாதேசப் போர் எது முடிந்த போதும் ராணுவத்தினரை அவர்களது வெற்றியை மதிக்காத காங்கிரஸ் அரசு, தளவாடங்களுக்காக அவர்களை காங்கிரஸுக்கு வேண்டப்பட்ட ஆயுத புரோக்கர்களிடம் பிச்சை எடுக்காத குறையாக கெஞ்ச வைத்த வரலாறு நாடறிய சினிமாவாகவே வந்தது. ராகுல் ராணுவத்தின் முடிவுகளைப்பற்றி பேச தகுதி அற்றவர். இதென்ன கள்ளச்சாராய மரணமா? குடும்பத்தினரிடம் பேசி அரசியல் பண்ணுகிறார். இவர் தனது அரசியலை நீட்டிலும் பார்லிமெண்டிலும் செய்யட்டும். ஒழுங்காக இருக்கும் ராணுவத்திடம் வேண்டாம் உமது சிண்டு முடியும் வேலை.


Subash BV
ஜூலை 04, 2024 18:25

e Scheme already there. PUT THE BHARAT FIRST.


nsathasivan
ஜூலை 04, 2024 17:41

அண்டப்புளுகு ஆகாஷப்புழுகு தோற்றுப் போகும்.


Ganesun Iyer
ஜூலை 04, 2024 16:36

"ராகுல் பேச்சு எதிரொலி"... "ராகுலின் பேச்சு தவறு" என்றுதானே இருக்க வேண்டும்....


saravanan gurusamy
ஜூலை 04, 2024 22:13

இந்தியாவில் மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து இங்குள்ள மீடியா 90 சதவிகிதம் தவறான செய்தியைத்தான் பறப்புகிராகள்...என்ன மர்மம் என்று புரியவில்லை...வெளிநாட்டு பணம் வேலை செய்கிறது...


ஆரூர் ரங்
ஜூலை 04, 2024 11:06

ஸ்டாலின் மாதிரி ஊடகங்கள் சகிதம் மறைந்த வீரரின் வீட்டுக்கு சென்று ரொக்கமாகக் கொடுத்து போட்டோ ஷூட் மூலம் விளம்பரம் தேடியிருக்கலாமே.


ஆரூர் ரங்
ஜூலை 04, 2024 11:03

கள்ளக்குறிச்சி தியாகிகளுக்கும் காங்கிரசும் உதவலாமே.


ஆரூர் ரங்
ஜூலை 04, 2024 11:02

காஷ்மீர் தீவீரவாத கொடுமைகளில் இறந்த ஹிந்து பண்டிட்களுக்கு பண்டிட் நேரு வாரிசுகள் என்ன செய்தார்கள்? திமுக ராகுலுக்கு இது போன்ற கிறுக்குத்தனமான ஐடியாக்களைக் கொடுத்து அழிக்கிறது.


M.S.Jayagopal
ஜூலை 04, 2024 08:42

ராகுல் ஒரு அரைகுறை நபர். உணர்ச்சிபூர்வமாக பேசி ஆட்சியாளர்களை வெறுப்பேற்றுபவர். மக்களையும் ஏமாற்றுபவர். அக்னிவீர் திட்டத்தால் இளைஞர்களுக்கு தேசிய உணர்வும் ஒழுக்கமும் வர வாய்ப்பு உள்ளது.


raju
ஜூலை 04, 2024 09:56

ராகுல் பேச்சுக்கு முன்பு எத்துணை பேருக்கு இழப்பீடு கொடுத்துள்ளார்கள் என்று பார்த்தால் இதில் அரசு சொன்ன பொய் எல்லாம் வெளியே வரும்


sankar
ஜூலை 04, 2024 08:21

பொய் பேச திராவிட ட்ரைனிங்


B MAADHAVAN
ஜூலை 04, 2024 08:04

ராகுல் பேச்சு எதிரொலி என்று போட்டிருப்பது தவறானது. ஏற்கெனவே உள்ளதை தான் அமைச்சர் சொல்லி இருக்கிறார். அதை நிறைவேற்றியும் இருக்கிறது மத்திய அரசு. தேவையில்லாமல் ராகுல் சொன்னதால் தான் கிடைத்துள்ளது என்பது போன்ற மாயையை ஏற்படுத்த வேண்டாமே.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ