உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராகுலின் பேச்சை சீரியஸாக எடுத்துக்க மாட்டாங்க; நிதின் கட்கரி விமர்சனம்

ராகுலின் பேச்சை சீரியஸாக எடுத்துக்க மாட்டாங்க; நிதின் கட்கரி விமர்சனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: காங்கிரஸ் தலைவர்கள் பொறுப்பில்லாமல் பேசி வருவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மஹாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் வரும் 20ம் தேதி நடைபெற இருக்கிறது. இதையொட்டி, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பிரதமர் மோடியை, ஜோ பைடனுடன் ஒப்பிட்டு பேசிய ராகுலின் கருத்துக்கு அவர் பதிலளித்ததாவது: ராகுலின் இதுபோன்ற பேச்சுக்களை யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை. அவருடைய குற்றச்சாட்டுக்களையும் மக்கள் பெரிதுபடுத்திக் கொள்வதில்லை என்று நினைக்கிறேன். காங்கிரஸ் தலைவர்கள் பொறுப்பில்லாமல் பேசி வருகின்றனர். லோக்சபா தேர்தல் சமயத்தில் பா.ஜ., 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால், அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பை மாற்றியமைத்து விடுவார்கள் என்ற பிம்பத்தை உருவாக்கி விட்டார்கள். அரசியலமைப்பை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை. நாங்கள் அதனை செய்ய மாட்டோம். வேறு யாரையும் செய்ய அனுமதிக்க மாட்டோம். லோக்சபா தேர்தலின் போது எதிர்க்கட்சிகள் பொய் வாக்குறுதிகளை கொடுத்ததை மக்கள் தற்போது உணர்ந்துள்ளனர். எனவே, பிரதமர் மோடி தலைமையிலான மஹாயுதி கூட்டணிக்கு மக்கள் ஆதரவு கொடுக்க துவங்கி விட்டனர், என்றார். சாதிவாரி கணக்கெடுப்பை ராகுல் வலியுறுத்துவது குறித்து கட்கரி பேசுகையில், 'உண்மையான பிரச்னை என்னவென்றால், ஏழைகள், கிராமங்கள் மற்றும் விவசாயிகள் நலன் பற்றியது தான். ஏழைகளில் சாதி, மதம் என்ற வேறுபாடு கிடையாது,' எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Indian
நவ 18, 2024 13:24

வாய்ப்பில்லையே


தாமரை மலர்கிறது
நவ 18, 2024 07:41

சாதி சாதி சாதி என்று சாதிப்பித்து பிடித்து திரியும் திராவிட நரிகள்.


Balakumar V
நவ 18, 2024 00:05

வாய்ப்பில்லையே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை